தமிழின அழிப்புக்கு நீதி கோரி – ஜெனிவாவை நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் தொடக்கம்

பிரித்தானியாவில் இருந்து மனித உரிமை அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள ஜெனிவா நகரை நோக்கி, தமிழினத்திற்கு நீதி கோரும் மனிதநேய ஈருருளிப் பயணம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

இந்தப் பயணம், தமிழர் சமூகத்தின் மீதான மனித உரிமை மீறல்கள் மற்றும் தமிழின அழிப்பு குறித்த குற்றச்சாட்டுகளுக்கு சர்வதேச விசாரணை மற்றும் நீதி கோரிக்கையை உலக சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் மிச்சம் (Mitcham) பகுதியில் இருந்து தொடங்கி, பிரித்தானிய பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான 10 Downing Street வழியாகச் சென்று தனது அரசியல் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியது.
பங்கேற்பாளர்கள் அங்கு நின்று அமைதிப் போராட்டம் நடத்தி, பிரசுரங்களை கையளித்திருந்தார்கள் ,பிரித்தானிய அரசாங்கம் தமிழர் நீதிக் கோரிக்கைக்கு உறுதியான ஆதரவு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

பிரித்தானியாவிலிருந்து ஆரம்பித்த இந்தப் பயணம், கடல் மார்க்கம் வழியாக Netherlands உள்ளிட்ட ஐரோப்பிய பகுதிகளை கடந்து, இறுதியாக ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் மையத்தை அடைவதை இலக்காகக் கொண்டுள்ளது.

Related posts

இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு, சத்தியம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் அவசியம் என பிரிட்டன் வலியுறுத்துகிறது!

சர்வதேசப் பங்கேற்புடன் கூடிய ஒரு பொறுப்புக்கூறல் பொறிமுறை அவசியம் என மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன!

இன்னும் காலம் கடந்துவிடவில்லை – சமூகங்களைப் பாதுகாத்து வலுப்படுத்தும் ஒரு சட்டத்தை நம்மால் உருவாக்க முடியும்.