அமெரிக்காவில் படித்து வரும் இந்திய மாணவர் ஒருவர் கடந்த நான்கு நாட்களாக காணாமல் போயுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கர்நாடகாவை சேர்ந்தவர் சாகேத் ஸ்ரீனிவாசையா(22). சென்னை ஐஐடியில் பட்டம் முடித்த இவர், மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். கலிபோர்னியாவின் பெர்க்லே பல்கலையில் அவர் வேதியியல் மற்றும் பயோ மாலிகுலர் பொறியியல் பிரிவில் மேற்படிப்பு படித்தார். அத்துடன் புதிய தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டி வந்தார்.

இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக அவரை காணவில்லை. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் அவரை, கடந்த பிப்.,10 முதல் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடைசியாக, இவர், பெர்கலேயின் திவிட் வே பகுதியில் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணைத்தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பட்டமேற்படிப்பு படித்து வந்த இந்திய மாணவர் சாகேத் ஸ்ரீனிவசையா காணாமல் போனது கவலையை ஏற்படுத்தி உள்ளது. குடும்பத்தினர் உடனும். மாணவரை கண்டுபிடிக்க உள்ளூர் அதிகாரிகளுடனும் தொடர்பில் உள்ளோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.