வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, கொல்கத்தா-ஷில்லாங் விமானத்தில் இருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் இருந்து மேகாலயாவின் ஷில்லாங்கிற்கு இண்டிகோ விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட தயாரானது. விமான பணியாளர் ஒருவர் கழிவறையில் கடிதம் இருந்ததை கண்டெடுத்தார். அதில், விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.

உடனடியாக, விமானத்தில் இருந்து பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் சோதனை செய்தனர். சோதனையில் சந்தேகப்படும் வகையில் எந்த பொருட்களும் சிக்கவில்லை. இதனால் மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.