Home இந்தியாசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது: இந்தியப் பிரதமர் மோடி பெருமிதம் கொள்கிறார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது: இந்தியப் பிரதமர் மோடி பெருமிதம் கொள்கிறார்.

by Amizhthu

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) குறித்த சர்வதேச உச்சிமாநாட்டை புதுடில்லியில் இன்று (பிப்ரவரி 16) மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இது குறித்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இந்தியா சார்பில் ஏஐ உச்சிமாநாடு நடக்கிறது. இந்த உச்சி மாநாட்டிற்கு உலகெங்கிலும் உள்ள உலகத் தலைவர்கள், தொழில்துறைத் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களை நான் அன்புடன் வரவேற்கிறேன்.

ஏஐ தொழில்நுட்பம் இன்று சுகாதாரம், கல்வி, விவசாயம் உட்பட பல துறைகளை மாற்றியமைத்து வருகிறது. இந்த உச்சிமாநாட்டில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற இருக்கின்றன. இந்தியாவின் 140 கோடி மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

நமது நாடு ஏஐ தொழில்நுட்ப துறையில் முன்னணியில் உள்ளது. டிஜிட்டல், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் அதிநவீன ஆராய்ச்சி நிறுவனங்கள் வரை, ஏஐ துறையில் நமது முன்னேற்றம் பிரதிபலிக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

You may also like

Leave a Reply

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00