இராணுவத்தின் 20 பேருக்கு புகையிரத சேவை தொடர்பில் பயிற்சி வழங்குவதற்கு எடுத்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புகையிரத தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அறிவித்தார்கள். அவசர நிலைமையின் போது பயன்படுத்துவதற்காகவே இராணுவத்தினருக்கு பயிற்சி வழங்க தீர்மானிக்கப்பட்டது.
அதை தவிர்த்து அவர்களை புகையிரத சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கல்ல, கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை இடம்பெறுகின்ற நிலையில் மாணவர்களை பயணமாக கொண்டு போராட்டத்தில் ஈடுவடுவதாக அறிவித்தார்கள்.
இவ்வாறானவர்கள் போக்குவரத்து துறையில் இருப்பதையிட்டு கவலையடைகிறேன். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் மன்னிப்பு கோருகிறேன் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இலங்கை பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18-02-2026) நடைபெற்ற விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள், மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் மீதான விவாதம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
புகையிரத தொழிற்சங்கத்தினர் நேற்று திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தார்கள். இந்த போராட்டம் பற்றி நாட்டு மக்களுக்கு உண்மையை குறிப்பிட வேண்டும். தித்வா புயல் தாக்கத்துக்கு முன்னர் புகையிரத சேவை நாடளாவிய ரீதியில் 1700 கிலோமீற்றர் தூரத்தை வரையறுத்ததாக காணப்பட்டது.
டித்வா புயல் தாக்கத்துக்கு பின்னர் 400 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கியதாக புகையிரத சேவை காணப்பட்டது. ஆனால் தற்போது புகையிரத சேவை 1200 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. முப்படையினரின் முழுமையான ஒத்துழைப்பால் சேதமடைந்த புகையிரத பாதைகள் மற்றும் புகையிரத பாலங்களை குறுகிய காலத்துக்குள் புனரமைக்க முடிந்தது.
புகையிரத திணைக்கள சேவையாளர்கள் மாத்திரம் புகையிரத பாதைகளை புனரமைக்கவில்லை. முப்படையினரின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால் புகையிரத பாதைகளை மறுசீரமைக்க குறைந்தது ஒரு வருடமேனும் சென்றிருக்கும்.
இராணுவத்தின் 20 பேருக்கு புகையிரத சேவை தொடர்பில் பயிற்சி வழங்குவதற்கு எடுத்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புகையிரத தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அறிவித்தார்கள். அவசர நிலைமையின் போது பயன்படுத்துவதற்காகவே இராணுவத்தினருக்கு பயிற்சி வழங்க தீர்மானிக்கப்பட்டது. அதை தவிர்த்து அவர்களை புகையிரத சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கல்ல,
இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அறிவித்தார்கள். கல்வி பொதுதராதர சாதாரண பரீட்சை இடம்பெறுகின்ற நிலையில் மாணவர்களை பயணமாக கொண்டு போராட்டத்தில் ஈடுவடுவதாக அறிவித்தார்கள். இவ்வாறானவர்கள் போக்குவரத்து துறையில் இருப்பதையிட்டு கவலையடைகிறேன். மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் மன்னிப்பு கோருகிறேன் என்றார்.