தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுக மகளிர் அணி 23-02-2026 முதல் 08-03-2026 வரை வீடு வீடாக பிரச்சாரம் செய்யும் என்று கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

தி.மு.க., அரசு அமைந்த பின், ‘மகளிர் உரிமை திட்டம், மகளிர் விடியல் பயணம், தோழி விடுதிகள், புதுமைப்பெண் திட்டம்’ உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மகளிருக்கான ஆட்சி நடந்து வருகிறது.

தி.மு.க., அரசின் சாதனை திட்டங்களால், தமிழக பெண்கள், வெல்லும் தமிழ்ப் பெண்களாக உயர்ந்து உள்ளனர்.

பெண்களுக்கான எண்ணற்ற பல திட்டங்களையும், சாதனைகளையும் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மகளிரிடம் எடுத்துச் சென்று சேர்ப்பதே, தி.மு.க., மகளிரணி பிரசாரத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்.

‘வெல்லும் தமிழ் பெண்கள்’ பிரசாரத்திற்காக, வரும் 20, 21 மற்றும் 22ம் தேதிகளுக்குள் அனைத்து தொகுதிகளிலும் பயிற்சி கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும்.

இப்பயிற்சியை, சட்டசபை தொகுதி மகளிர் அணி பொறுப்பாளர்கள் வழங்குவர்.

வரும் 23ம் தேதி முதல், வீடு வீடாக பிரசாரம் துவங்கி, மார்ச் 8ம் தேதிக்குள், தி.மு.க., அரசின் மகளிர் நலத்திட்டங்கள் குறித்த சிறப்புகள், அனைத்து வீடு களையும் சென்றடையும் வகையில் சிறப்பாக நடத்த வேண்டும். – வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

விடுபட வேண்டிய போதைகள் ! சினிமா போதையா? மது போதையா ?

சீமான் – ஸ்டாலின் சந்திப்பு ! தற்செயலா ? அரசியலா ? அவதூறுகளா ? 

கிலோ அரிசி விலை ரூ. 8 வரை உயர்வு: தமிழகத்தில் டீசல் விலை உயர்வின் எதிரொலி!