மத்திய கிழக்கு போர் சூழ்நிலை: இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை.

the Sri Lanka Petroleum Corporation

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

நிலவும் சர்வதேச சூழ்நிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு திரளுகின்ற நிலை காணப்படுகின்றது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், எரிபொருள் விநியோகத்தில் எவ்வித சிக்கலும் இல்லை எனத் தெளிவுபடுத்தினார்.

அவரது விளக்கத்தின் படி, 37 நாட்களுக்கு தேவையான பெற்றோல், 35 நாட்களுக்கு தேவையான டீசல், 47 நாட்களுக்கு தேவையான விமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மக்கள் அச்சமடைவதற்கு எவ்வித காரணமும் இல்லை. கையிருப்பிலுள்ள முழுமையான அளவுகளை நாங்கள் கணித்துள்ளோம். மேலதிக கப்பல்கள் வராதிருந்தாலும் கூட, குறிப்பிட்ட காலப்பகுதிக்கு இடையூறு இல்லாமல் விநியோகிக்க முடியும்,” என அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கான பெற்றோல் மற்றும் டீசல் இறக்குமதி பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கப்பல் கட்டணம் மற்றும் தூரம் அதிகமாக இருப்பதால், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்கள் பெரும்பாலும் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, மற்றும் கொரியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன எனவும் அவர் விளக்கமளித்தார்.

மசகு எண்ணெய் (Crude Oil) இறக்குமதியில் மட்டுமே சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாயினும், அதற்கான கையிருப்பும் சுமார் ஒரு மாதத்திற்கு போதுமானதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் தேவையற்ற அச்சத்தால் அதிகளவில் எரிபொருள் சேமிப்பு முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

Related posts

இலங்கையில் போதைப்பொருள் பயன்பாடு: இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் உட்பட 7,950 பேர் கைது!

நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்ததில் இரண்டு இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர்.

மத்திய கிழக்கு போர் சூழ்நிலை: நாளை பிற்பகல் வரை பல விமான சேவைகள் ரத்து – ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு