யாழ்ப்பாணம். பேருந்து நிலையப் பகுதியில் மீட்கப்பட்ட குழந்தையின் கருச்சிதைவு.

யாழ்ப்பாணம் தனியார் பஸ் நிலைய பகுதியில் இருந்து சனிக்கிழமை (28-02-2026) சிசு ஒன்றின் கருச்சிதைவு மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் தனியார் பஸ் நிலைய பகுதியில் இருந்து சனிக்கிழமை (28-02-2026) சிசு ஒன்றின் கருச்சிதைவு மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக பெண்ணொருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய பின்னர் அங்கிருந்து காணாமல் போயிருந்தார். அதன் பின்னர் அப்பகுதியில் சுமார் 6- 7 மாத கரு வீதியில் காணப்பட்டுள்ளது.

பஸ் நிலையத்தில் குறித்த கருச் சிதைவு காணப்படுவதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு சென்ற யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் குறித்த இடத்தை ஆய்வு செய்ததுடன், கருச்சிதைவினை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.