அமெரிக்கா-ஈரான் பதட்டங்கள் அதிகரித்து வருவதால், மத்திய கிழக்கு நாடுகளுக்கான அனைத்து விமானங்களையும் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ ரத்து செய்துள்ளன.

போர்ச்சூழல் காரணமாக இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் வான்வெளிகள் மூடப்பட்டுள்ளன. பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் முக்கிய விமான நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ ஆகியவை சனிக்கிழமை மத்திய கிழக்கு நாடுகள் செல்லும் அனைத்து விமானங்களையும் நிறுத்துவதாக அறிவித்தன.

வான்வெளி மூடப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் பயணத்தின் நடுவில் திருப்பி அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேற்கு நாடுகளுக்கான சர்வதேச விமானங்கள் இடையூறுகளை சந்திக்க நேரிடும் என டில்லி விமான நிலையம் எச்சரித்துள்ளது.

Related posts

தமிழர் கலைபண்பாட்டுப் பாசறை பிரித்தானியா – ஈழத்தாரகை 2026

முத்தமிழ் மன்றம் – சௌத்தென்ட் பெருமகிழ்வுடன் நடாத்தும் வருடாந்த மெய்வல்லுநர் போட்டி 2026

வவுனியா மாவட்ட பழைய மாணவர் ஒன்றியம் – UK நடாத்தும் சங்கமம் 2026