அமெரிக்கா-ஈரான் போர்: கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்!

by
0 comments
மத்திய கிழக்கு மோதல்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்குப் பதிலடியாக, இஸ்ரேல், கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஈரான் ஆட்சியாளர் கமேனி கொல்லப்பட்டதால், இந்தப் போர் உடனடியாக முடிவுக்கு வருமா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த போரினால் சர்வதேச சந்தைகள் நிலைகுலைந்து போயுள்ளன. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை மற்றும் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையும் உயரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, கச்சா எண்ணெயின் விலை 8 சதவிதம் வரையில் உயரும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

எம்சிஎக்ஸ் சந்தையில் கடந்த வார இறுதியில் ஒரு பீப்பாயின் விலை ரூ.6,100ல் இருந்து ரூ.6,588 ஆக அதிகரிக்கக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் டபுள்யு.டி.ஐ., ரகம் கச்சா எண்ணெய் 67.02 டாலராகவும், பிரெண்ட் ரகம் 72.84 டாலராகவும், முர்பன் கச்சா எண்ணெய் 74.24 டாலராகவும் அதிகரித்துள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையிலான மோதல் தொடர்ந்தால், கச்சா எண்ணெய் விலை 100 டாலர் வரை கூட எகிறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

banner

இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெய்களில் பெரும்பாலும் வளைகுடா நாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது. இதில், 20 சதவீதம் எண்ணெய் விநியோகம் நடக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடினால், இந்தியாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, பெட்ரோல், டீசல் மட்டுமல்லாது, பிளாஸ்டிக், பாலியஸ்டர், மருந்தக ஊசிகள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் தார் என பெட்ரோலியப் பொருட்களைச் சார்ந்திருக்கும் சுமார் 6,000க்கும் மேற்பட்ட பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளது.

பங்குச் சந்தையில் நிலவும் பதற்றம் காரணமாக, முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியின் மீது கவனம் செலுத்தத் துவங்கியுள்ளனர். இதனால், தங்கம் 5 சதவிதம் மற்றும் வெள்ளி 7 முதல் 8 சதவிதம் வரை விலை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சவரன் ஒன்றரை லட்சம் ரூபாயை நோக்கி தங்கம் விலை சென்று கொண்டிருக்கும் சூழலில், இந்தப் போர் பதற்றம் காரணமாக விரைவில் ரூ.2 லட்சத்தை தாண்டினாலும் ஆச்சர்யப்பட தேவையில்லை என்கின்றனர் வல்லுநர்கள்.

You may also like

Leave a Reply

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00