பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று சனிக்கிழமை (28-02-2026) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 626 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், 29,741 பேர் சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 12 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 292 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 147 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 264 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 68 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- இலங்கைக்கு மீண்டும் ரெட் அலர்ட், கனமழை எச்சரிக்கை
- இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வானிலை நிலவுவதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
- தர்மசிரி லியனகேயின் சகாக்கள் மூவர் கல்கிஸை வலய குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- இலங்கையில் கடல்சார் போதைப்பொருள் கடத்தல்: புதிய சட்டத் திருத்தம் கைதுகளுக்கு வழிவகுக்கும்.
- தமிழ்த் தலைவர்கள் நல்லிணக்கத்தை அடைய உதவ வேண்டும். – இலங்கை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் வேண்டுகோள்
- 2029 நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி; தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு – அர்ச்சுனா ராமநாதன் எம்.பி.
அத்துடன், பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 4,570 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.