மொனராகலை – எத்திமலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோத கஞ்சா தோட்டங்கள் முற்றுகையிடப்பட்டதோடு, உலர்ந்த கஞ்சா என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டதாகவும், பெருமளவு கஞ்சாச் செடிகள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சியம்பலாண்டுவ விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலுக்கமைய, நேற்று சனிக்கிழமை (28) பகல் இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த 30,000 கஞ்சா செடிகளும், 1/4 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த 8,000 கஞ்சா செடிகளும், 1/4 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த 8,500 கஞ்சா செடிகளும் அழிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், விற்பனைக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 100 கிலோகிராம் உலர்ந்த கஞ்சாவும் இதன்போது கைப்பற்றப்பட்டது.
- ஜிந்துபிட்டியில் துப்பாக்கிச்சூடு: சமூகத்தை அதிர்ச்சியடையச் செய்த துயரச் சம்பவம்
- இந்தியா இலங்கைக்கு வழங்கிவரும் உதவிகள் குறித்து கலந்துரையாடல்!
- “மத்திய கிழக்கு யுத்தத்தின்போது இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கையில் சிக்கல் இருக்கிறது.” என எதிர்க்கட்சி உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
- இலங்கையில் பல பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
- “பாராளுமன்ற வளாகத்தில் போதைப்பொருள்” என வெளியான செய்தி பொய்யானது – இலங்கை பாராளுமன்ற செயலகம்
- இலங்கைத் தீவின் மொத்த நிலப்பரப்பில் 30 சதவீதத்தைக் கொண்ட 14 மாவட்டங்கள் நிலச்சரிவு அபாயகரமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்
இந்தச் சுற்றிவளைப்பின்போது சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக எத்திமலை பொலிஸாரும், சியம்பலாண்டுவ விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.