நாட்டில் பெய்து வரும் கன மழை காரணமாக களு, களனி, ஜின் ஆறுகள் மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் ஆறுகளை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பாக அத்தனகலு ஓயாவை அண்டிய மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
பல தாழ்வான பகுதிகள் ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல மாகாணங்களில் அவ்வப்போது மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், சில பகுதிகளில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
- போதைப்பொருள் வைத்திருந்த 22 தேரர்கள் கைது; விரிவான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன என இலங்கை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.
- புத்தளம் பகுதியில் கடலில் மிதந்த போத்தல் ஒன்றில் இருந்த திரவத்தை குடித்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
- இலங்கையில் போதைப்பொருள் மற்றும் மது அருந்திய ஓட்டுநர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- இலங்கையில் இன்றைய தங்க விலை நிலைவரம் !
- காலி சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- இலங்கை பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருகின்றன.
மேலும் , காங்கேசன்துறை முதல் திருகோணமலை மற்றும் காலி முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான ஆழமற்ற கடல் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.