இலங்கை எரிபொருள் விநியோகத்திற்கு தற்போது QR குறியீடு தேவையில்லை – நலிந்த ஜயதிஸ்ஸ

எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லாத காரணத்தினால் எரிபொருள் விநியோகத்துக்கான QR குறியீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

இதற்கு முன்பு நாடு எதிர்கொண்ட எரிபொருள் நெருக்கடி நிலைமையின்போது மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோக முறை கடைபிடிக்கப்பட்டதால் எரிபொருள் விநியோகத்துக்காக QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாட்டில் போதுமான அளவுக்கு எரிபொருள் இருக்கிறது.

தேவை ஏற்பட்டால், QR குறியீடு முறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts

இலங்கையில் வெளிநாட்டினருக்கான விசா காலம் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தலுக்கும் புதிய அரசியலமைப்புக்கும் அனைவரும் அழுத்தம் கொடுக்க வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

இலங்கை வானிலை அறிக்கை