இலங்கையில் வெளிநாட்டினருக்கான விசா காலம் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

விமானப் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசா காலத்தை இரண்டு வாரங்களுக்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் திங்கட்கிழமை (02-03-2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த விசா நீடிப்புக்காக எவ்வித கட்டணங்களும் அறவிடப்படமாட்டாது என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் கூறியுள்ளார். 

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.