98
எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லாத காரணத்தினால் எரிபொருள் விநியோகத்துக்கான QR குறியீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
இதற்கு முன்பு நாடு எதிர்கொண்ட எரிபொருள் நெருக்கடி நிலைமையின்போது மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோக முறை கடைபிடிக்கப்பட்டதால் எரிபொருள் விநியோகத்துக்காக QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாட்டில் போதுமான அளவுக்கு எரிபொருள் இருக்கிறது.
தேவை ஏற்பட்டால், QR குறியீடு முறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
You Might Be Interested In
- மத்திய கிழக்கு போர் சூழ்நிலை: நாளை பிற்பகல் வரை பல விமான சேவைகள் ரத்து – ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு
- மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பித்தால், இந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் – இலங்கை தேர்தல் ஆணையம்
- ஒரு சிலருக்கு மட்டும் இழப்பீடு வழங்குவதன் மூலம் செம்மணி பிரச்சினையை கை கழுவ முயற்சி – சோமரத்ன ராஜபக்ஷ குற்றம் சாட்டுகிறார்.
- அக்குரேகொட வழக்கறிஞர் தம்பதி கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபர் கைது.
- தலைமன்னாரில் 1158 சங்குகளை சட்டவிரோதமாக பிடித்த சந்தேக நபர் கைது!
- இலங்கையின் எதிர்கால சந்ததியினரை அறிவுள்ள, கருணையுள்ள மற்றும் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய பிரஜைகளாக வளர்த்தெடுப்பதே எமது நோக்கமாகும். – சரோஜா சாவித்ரி
You Might Be Interested In