Home செய்திகள்இலங்கைமத்திய கிழக்கு போர் சூழ்நிலை: நாளை பிற்பகல் வரை பல விமான சேவைகள் ரத்து – ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு

மத்திய கிழக்கு போர் சூழ்நிலை: நாளை பிற்பகல் வரை பல விமான சேவைகள் ரத்து – ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு

by Amizhthu
கொழும்பு, இலங்கை

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழ்நிலை காரணமாக, கொழும்பில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் புறப்படும் அனைத்து விமான சேவைகளும் ஞாயிற்றுக்கிழமை (01-03-2026) மதியம் 12.00 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு காரணங்களை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட்டுள்ள விமான சேவைகள்

UL225 – கொழும்பு / துபாய்

UL226 – துபாய் / கொழும்பு

UL229 – கொழும்பு / குவைத்

UL230 – குவைத் / கொழும்பு

UL217 – கொழும்பு / தோஹா

UL218 – தோஹா / கொழும்பு

UL253 – கொழும்பு / தம்மாம்

UL254 – தம்மாம் / கொழும்பு

UL265 – கொழும்பு / ரியாத்

UL266 – ரியாத் / கொழும்பு

பயணிகளுக்கான அறிவுறுத்தல்

மீள்பதிவு (Rebooking) மற்றும் மேலதிக தகவல்களுக்காக பயணிகள் 1979 என்ற உலகளாவிய தொடர்பு மைய எண்ணை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், www.srilankan.com இணையத்தளத்தைப் பார்வையிடவோ அல்லது அருகிலுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகம் மற்றும் தங்களது பயண முகவர்களை தொடர்புகொள்ளவோ பயணிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றநிலை காரணமாக, அடுத்த கட்ட விமான அட்டவணைகள் குறித்த அறிவிப்புகள் பின்னர் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00