உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஈரான் தாக்கியது; சவுதி அரேபியாவில் பதற்றம்!

by
0 comments

ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானின் ஆட்சியாளர் கமேனி உள்பட 48 முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் உச்சகட்ட கோபமடைந்த ஈரான், அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுக்கு மறைமுகமாக அழைப்பு விடுத்தும், அதனை ஏற்க மறுத்தது. மேலும், 3வது நாளாக மேற்காசிய நாடுகளில் தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளது.

இந்த நிலையில், சவுதி அரேபியாவில் இருக்கும் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையான அராம்கோவில் உள்ள ராஸ் தனுரா சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஈரான் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், எண்ணெய் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக செயல்பட்டதால், தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அராம்கோ ஆலை மூடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அமெரிக்கா – ஈரான் போரினால் கச்சா எண்ணெய் வர்த்தகம் மற்றும் பங்குச்சந்தைகள் கடுமையான பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், சவுதியில் எண்ணெய் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் தாக்கப்பட்டுள்ளது. இதனால், கச்சா எண்ணெய் சந்தையில் விலை புதிய உச்சத்தை தொட்டு விடுமோ? என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

You may also like

Leave a Reply

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00