Friday, March 6, 2026

தமிழீழ விடுதலைப் போருக்கு வலுச்சேர்த்த அனைத்து இசைக் கலைஞர்களினதும் நினைவுகளைச் சுமந்து.. “புரட்சிக்குரல் 2026”

by

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மாதத்தில் 02.05.2026 சனிக்கிழமை அன்று Harrow Leisure Centre, Christchurch Avenue, Harrow, HA3 5BD எனும் முகவரியில் அமைந்துள்ள Byron Hall மண்டபத்தில் ஈழத்து இசையாளன் இசைப்பிரியன் அவர்களின் நேரடி இசையாள்கையில் தமிழீழ தேசியப்பாடல் போட்டியின் இறுதிச்சுற்றானது நடைபெறவிருக்கிறது.

இந்நிகழ்வில் ஈழத்தில் இருந்தும் புலத்தில் இருந்தும் தேசியப் பாடகர்கள் கலந்து சிறப்பிக்கவிருக்கின்றனர்.

இப்பாடல் போட்டியானது.. ஈழத்துப் பாடகர்களான, குட்டிக்கண்ணன் பிரிவு | சிட்டு பிரிவு | சாந்தன் பிரிவு என மூன்று அணிகளாக வயதின் அடிப்படையில்..

28.03.2026 அன்று குரல்தேர்வுப் போட்டிம்,

05.04.2026 அன்று முதலாம் சுற்றுப் போட்டியும்,

19.04.2026 அன்று இரண்டாம் சுற்றுப் போட்டியும்,

02.05.2026 அன்று இறுதிப் போட்டியும், நடைபெற்று இவ்வாண்டின் “புரட்சிக்குரல்” தெரிவுசெய்யப்பட்டு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படும்.

அதுமட்டுமல்லாது “புரட்சிக்குரல்” பட்டத்தை வெல்லும் வெற்றியாளர்கள், இசைப்பிரியன் அவர்கள் இவ்வாண்டு மாவீரர் நாளில் வெளியிடும் இறுவெட்டில் பாடுவதற்கான ஓர் அரிய வாய்ப்பும் வழங்கப்படும்.

banner

விண்ணப்ப முடிவு நாள்:
20.03.2026 இரவு 12:00 மணி

மேலதிக தொடர்புகளுக்கு:
puradchikkural@gmail.com

07919278777 | 07794516514 | 07850718119 | 07958296558 | 07903435609

You may also like

Leave a Reply

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00