இலங்கையின் இன்றைய வானிலை

by
0 comments

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும். இந்த வெப்ப அதிகரிப்பை வெப்பச் சுட்டெண் ( Heat Index ) என அழைக்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வெப்பச் சுட்டெண்ணானது மனித உடலில் குறிப்பிடத்தக்க அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

இது சாரீரப்பதன் மற்றும் வெப்பநிலை இரண்டிற்கும் இடையிலான தொடர்பாகும். இதை ஒரு அதிகரித்த வெப்பநிலை என கருத முடியாது.

வளிமண்டலத்தில் ஈரப்பதன் அதிகரித்துக் காணப்படும் இதேவேளை வளிமண்டல வெப்பநிலையும் அதிகரித்துக் காணப்படும்.

ஆனால் உண்மையில் வளிமண்டல வெப்பநிலை அதிகரிக்கும் போது ஈரப்பதன் குறைவடையவேண்டும். அவ்வாறு இல்லாமையினால் இவ் வெப்பச் சுட்டெண்ணானது வளிமண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

இவ்வாறான தாக்கத்தின் போது மக்கள் குறிப்பாக

  1. அதிகளவில் நீர் அருந்த வேண்டும்.
  2. வெயிலில் நடமாடுவதை பெருமளவில் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
  3. சோர்வு நிலை ஏற்படும் போது உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும்.

இவைதவிர காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

Leave a Reply

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00