சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும். இந்த வெப்ப அதிகரிப்பை வெப்பச் சுட்டெண் ( Heat Index ) என அழைக்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வெப்பச் சுட்டெண்ணானது மனித உடலில் குறிப்பிடத்தக்க அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
இது சாரீரப்பதன் மற்றும் வெப்பநிலை இரண்டிற்கும் இடையிலான தொடர்பாகும். இதை ஒரு அதிகரித்த வெப்பநிலை என கருத முடியாது.
வளிமண்டலத்தில் ஈரப்பதன் அதிகரித்துக் காணப்படும் இதேவேளை வளிமண்டல வெப்பநிலையும் அதிகரித்துக் காணப்படும்.
- பீடி இலைகள் மற்றும் பல்வேறு விவசாய இரசாயனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக துங்கல்திடியா காவல்துறை தெரிவித்துள்ளது.
- ஜிந்துபிட்டியில் துப்பாக்கிச்சூடு: சமூகத்தை அதிர்ச்சியடையச் செய்த துயரச் சம்பவம்
- கொழும்பு புறக்கோட்டை, செட்டியார் தெருவில் உள்ள தங்க நகைக் கடை ஒன்றிலிருந்து 60 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடிச் சென்ற சந்தேகநபர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.
- வோல்ட்ரீம் தோட்டத்தில் ஏற்பட்ட தீ பரவலினால் 10 வீடுகளைக் கொண்ட லயன் குடியிருப்பொன்று முற்றாக எரிந்து அழிந்துள்ளது.
- கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் நேபாளத்தின் காத்மாண்டுக்கும் இடையிலான விமான சேவைகள் இடைநிறுத்தம்!
- கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், சட்டவிரோதமாக அலங்காரச் செடிகளை நாட்டிற்குள் கொண்டு வந்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் உண்மையில் வளிமண்டல வெப்பநிலை அதிகரிக்கும் போது ஈரப்பதன் குறைவடையவேண்டும். அவ்வாறு இல்லாமையினால் இவ் வெப்பச் சுட்டெண்ணானது வளிமண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
இவ்வாறான தாக்கத்தின் போது மக்கள் குறிப்பாக
- அதிகளவில் நீர் அருந்த வேண்டும்.
- வெயிலில் நடமாடுவதை பெருமளவில் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
- சோர்வு நிலை ஏற்படும் போது உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும்.
இவைதவிர காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.