போரின் விளைவாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 100 டாலர்களைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

ஈரான்- இஸ்ரேல், அமெரிக்கா போர் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலரை தாண்டியது விற்பனை ஆகி வருகிறது. ஆனாலும் ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை அகற்ற எண்ணெய் விலை உயர்வு மிக சிறியது தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா தாக்குதலை தொடங்கியது. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரால் உலகின் மிக முக்கியமான கச்சா எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில், கப்பல் போக்குவரத்து மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலரை தாண்டியது.

கடந்த வெள்ளிக்கிழமை கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 92.69 டாலராக இருந்த நிலையில் இன்று 100 டாலரை தாண்டியது. 2022ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டி இருக்கிறது.

கச்சா எண்ணெய் விலை தற்போது 110 டாலருக்கு மேல் வர்த்தகமாகி வரும் நிலையில்,ஈரான்- இஸ்ரேல், அமெரிக்கா போர் தொடர்ந்து நடைபெற்றால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 150 டாலரை தாண்டிவிடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருவது குறித்த கவலைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிராகரித்தார். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: ஈரான் அணு ஆயுத அச்சுறுத்தல் முடிவுக்கு வந்ததும் கச்சா எண்ணெய் விலை விரைவாகக் குறையும்.

குறுகிய கால எண்ணெய் விலைகள், அமெரிக்காவிற்கும், உலகிற்கும் பாதுகாப்பு மற்றும் அமைதிக்கும் செலுத்த வேண்டிய மிகச் சிறிய விலையாகும். தற்போதைய விலை உயர்வு குறித்து முட்டாள்கள் மட்டுமே வித்தியாசமாகச் சிந்திப்பார்கள். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

Related posts

நோய்வாய்ப்பட்ட சமூகமா இது.? TVK உறுப்பினர்களின் உறவுகள் ஜாக்கிரதை. மனநோயாளர்கள் கவனம் தேவை.!

ஐரோப்பா ஒரு குறுக்குச் சந்தியில்: உடையும் மேற்குலகமும் புதிய உலக ஒழுங்கும்

கொழும்பில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது!