த.வெ.க தலைவர் விஜய்யின் தந்திரமான அரசியல்!

Chengalpattu: Tamilaga Vettri Kazhagam (TVK) founder-chief Vijay meets supporters at the party's special general council meeting, at Mahabalipuram in Chengalpattu district of Tamil Nadu, Wednesday, Nov. 5, 2025. (PTI Photo) (PTI11_05_2025_000240B)

அ.தி.மு.க. – பா.ஜ. கூட்டணியில் த.வெ.க. இணையப் போகிறது என செய்தி வந்திருக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல. விஜய்க்கு எப்போதெல்லாம் அரசியல் மற்றும் குடும்ப ரீதியில் சிக்கல் வருகிறதோ, அப்போதெல்லாம் இப்படிப்பட்ட செய்திகள் வருகின்றன என, அ.தி.மு.க.,வில் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

கரூரில் விஜய் பங்கேற்ற கூட்டத்தில், 41 பேர் உயிரிழந்தபோதும், ‘ஜனநாயகன்’ படத்திற்கு ‘சென்சார் போர்டு’ அனுமதி அளிக்காத போதும், கூட்டணி செய்தி வந்தது. தற்போது, ‘விஜய்க்கு சி.பி.ஐ., மீண்டும் சம்மன் அனுப்பி இருக்கும் சூழ்நிலையில், கூட்டணி குறித்த அதே தகவல் வெளியாகி உள்ளது.

பிரச்னைகளில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள, விஜய் மேற்கொள்ளும் தந்திரம் இது. அவரே தான் திட்டமிட்டு, கூட்டணி குறித்த தகவல்களை வெளிப்படுத்துகிறார். ஆனால், ஒருபோதும் அவர் அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணிக்கு வரமாட்டார் என, விஜயை நன்கு அறிந்தோர் கூறுகின்றனர்.

Related posts

கொழும்பில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது!

ஐரோப்பாவின் பிளவுபட்ட முன்னணி: போர் நிதி, எரிசக்தி சார்பு மற்றும் புவிசார் அரசியல் முரண்பாடு

கடன் வெடிகுண்டின் விளிம்பில் தமிழ்நாடு ₹10.71 இலட்சம் கோடி கடன்… தினமும் ₹189.3 கோடி வட்டி!