இலங்கை வானிலை அறிக்கை

Sri Lanka weather report

வட மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் சீரான வானிலை நிலவக்கூடும்.

மத்திய , சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

காங்கேசன்துறை தொடக்கம் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

நாட்டைச் சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 km வேகத்தில் காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை, பொத்துவில், ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களில் கிழக்கு திசையில் இருந்து வடகிழக்குத் திசையை நோக்கியும் நாட்டைச் சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மாறுபட்ட திசைகளில் இருந்தும் காற்று வீசும்.

காங்கேசன்துறை தொடக்கம் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.

Related posts

கொழும்பில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது!

இயற்கை அழகுசாதனப் பொருட்கள் என்று கூறி, தரம் குறைந்த கிரீம்களைத் தயாரித்து வந்த மாத்தளையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது.

இலங்கையில் ஒரே வாரத்தில் நிகழ்ந்த வாகன விபத்துகளில் 49 பேர் உயிரிழந்தனர்!