சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் வாசனை திரவியங்களை இலங்கைக்கு கொண்டு வந்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

by
0 comments

வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் வாசனைத் திரவியங்களை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவந்த மூவர் இன்று புதன்கிழமை (11-03-2026) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் சுற்றுலா வழிகாட்டிகளாகப் பணிபுரியும் சீனப் பிரஜைகளான 29 மற்றும் 38 வயதுடைய இருவரும் கொழும்பு, வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய வர்த்தகர் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று 12.10 மணியளவில் இந்தியாவின் சென்னையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL-102 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

சந்தேக நபர்களின் பயணப் பொதிகளைச் சோதனையிட்டபோது, சுமார் 52 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட 33,600 சிகரெட்டுகளைக் கொண்ட 168 சிகரெட் கார்ட்டூன்களும், 20 கிலோகிராம் எடையுள்ள வாசனைத் திரவியங்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00