160
பேலியகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மசாஜ் நிலையமென்ற போர்வையில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்றை முற்றுகையிட்ட பொலிஸார், நான்கு பெண்களைக் கைது செய்துள்ளனர்.
பேலியகொடை பொலிஸாருக்கு செவ்வாய்க்கிழமை (10-03-2026) கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
விபச்சார விடுதியை நிர்வகித்த குற்றச்சாட்டில் ஒரு சந்தேக நபரும், அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுவதற்காகத் தங்கியிருந்த மேலும் மூன்று சந்தேக நபர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் காசன்பிட்டிய, பன்னிபிட்டிய,பொலன்னறுவை,ஹட்டன் பகுதிகளைச் சேர்ந்த 29 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
You Might Be Interested In
- இலங்கையில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வு: அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும் – சமிந்த விஜேசிறி
- கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவிற்கான ஆரம்பகட்டப் பணிகள்
- 🚨களனி ஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவசரகால வெளியேற்ற அறிவுறுத்தல்.
- அமெரிக்கா வழங்கிய TH‑57 ஹெலிகாப்டர்கள்: இலங்கையின் பேரிடர் மீட்பு திறனை உயர்த்தும் புதிய கட்டம்
- “அரசாங்கத்தின் எதேச்சதிகார நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.” – சஜித்
- இலங்கையில் இன்று தங்கத்தின் விலை சிறிய மாற்றத்துடன் பதிவாகிறது
மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
You Might Be Interested In