அடுத்த சில நாட்களில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் – நயினார்

திருநெல்வேலியில் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி:

மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் இன்று சென்னை வருகிறார். பின், தே.ஜ., கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு நடக்கும். டில்லியில் பேச்சு நடந்தாலும், பெங்களூரில் பேச்சு நடந்தாலும், எந்த பிரச்னையும் இல்லை.

டில்லி என்றாலே முதல்வர் ஸ்டாலினுக்கு நடுக்கம் ஏற்படுகிறது. அதனால் தான், எப்போதும் டில்லி குறித்து மட்டுமே பேசுகிறார்.

தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு, தொகுதி ஒதுக்கீடு அளிப்பது பற்றி ஸ்டாலின் பேச வேண்டும். தே.ஜ., கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு முடிந்த பின், சில நாட்களில் பா.ஜ., தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.

‘யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம்; பா.ஜ., தனியாக நின்றால் வெற்றி பெற முடியாது’ என, முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கூறுகிறார்.

இதன் வாயிலாக, அவர் ஏன் கட்சி துவங்கவில்லை என்பது தெளிவாகிறது. விளாத்திகுளம் மாணவி கொலையில் கைதான நபர், ஜாமினில் வர கையெழுத்திட்டவர் யார்? அவரிடம் எப்படி போதைப்பொருள் சென்றது என்பது உள்ளிட்ட பல கேள்விகள் எழுகின்றன.

மத்திய பா.ஜ., அரசின் முயற்சியால், தமிழகத்தில் நான்கு வழிச்சாலைகள், மேம்பாலங்கள் மற்றும் துாத்துக்குடி, திருச்சி விமான நிலையங்கள் போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

திருநெல்வேலியில் ஆறு சட்டசபை தொகுதிகளிலும் எனக்கு ஆதரவு உள்ளது; எங்கு வேண்டுமானாலும் நான் போட்டியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

த.வெ.க. வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்ட 115 பேரை தலைமை அலுவலகத்திற்கு வருமாறு கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளது.

கூட்டணியில் 10 இடங்களுக்கும் குறைவாகக் கிடைத்தால் நாங்கள் ராஜினாமா செய்வோம் – தே.மு.தி.க

தூத்துக்குடியில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று திடீரெனத் தீப்பிடித்ததில், அதிர்ஷ்டவசமாக 60 பயணிகள் உயிர் தப்பினர்.