Thursday, April 9, 2026

திருகோணமலை ரயில் நிலையத்தில் ரயில் இன்ஜின் ஒன்று திடீரென தீப்பிடித்தது.

0 comments

திருகோணமலை புகையிரத நிலையத்தில் நிறுத்தியிருந்த புகையிரத இயந்திரம் (எஞ்சின்) நேற்று புதன்கிழமை (08-04-2026) மாலை 3.00 மணியளவில் திடீர் என தீக்கிரையாகி உள்ளது.

தூரப்பிரதேசங்களில் இருந்து நிலையத்திற்கு வரும் புகையிரதங்களை நிலைய எல்லைக்குள் கொண்டு சென்று நிறுத்தும் செயற்பாட்டிற்கு இந்த இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று மதியம் கொழும்பிலிருந்து வந்த புகையிரத பெட்டிகளை இடமாற்றும் செயற்பாட்டில் ஈடுபடுத்தப்பட்ட போதே இந்த இயந்திரத்தில் திடீர் என தீப்பரவல் ஏற்பட்டதாகவும்,தீப்பிடித்தமைக்கான காரணம் என்னவென்று தற்போது கூறமுடியாதுள்ளது என்றும்,எனினும் தீயணைப்படையினர் இது பற்றி விரைவில் தமக்கு தகவல் வழங்குவார்கள் எனவும் பிரதான புகையிரத நிலைய அதிபர் எஸ்.சர்வேஸ்வரன் கூறினார்.

புகையிரத இயந்திரம் தீயினால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00