53
காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் நோர்வூட் கெசல்கமுவ ஆற்றில் ஒரு பெண் சடலம் மிதந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டுளது என நோர்வூட் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
நோர்வூட் – பொககவந்தலாவா மஸ்கெலியா பிரதான வீதியில் உள்ள நோர்வூட் பாலத்திற்குக் கீழே ஆற்றில் சடலமாக மிதப்பதாக பொலிஸாருக்கு பிரதேசவாசிகளினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது
எனினும் சடலத்தின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும், ஹட்டன் பொலிஸ் பிரிவின் குற்ற நிகழ்வு விசாரணை அதிகாரிகளின் உதவியுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நோர்வூட் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.