தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியை ஆதரியுங்கள். – இலண்டனில் மாபெரும் கவனஈர்ப்புப் பரப்புரை!



எதிர்வரும் 23/04/2026 அன்று இடம்பெறப் போகும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் நாம் தமிழர் கட்சியை ஒன்று சேர்ந்து ஆதரிக்க வேண்டும்.

குறித்த நாளில் ஓராணியாய்த் திரண்டு நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். இந்தக் கோரிக்கையின் தீவிரத் தன்மையை, முக்கியத்துவத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்து சொல்ல பிரித்தானியப் பாராளுமன்றித்தின் முன் பிரமாண்டமான நிகழ்வொன்றை பிரித்தானியத் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

குறித்த நிகழ்வில்.. பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு நாட்டின் அரசியல் கட்சிகள், தலைவர்கள், பொது அமைப்புக்கள், பல்வேறு மத தலைவர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகின்றார்கள்.

குறித்த இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்விற்கு பிரித்தானியாவில் வாழும் ஒவ்வொரு தமிழரும் பேரெழிச்சியாகக் கலந்து கொண்டு பரப்புரை வெற்றிக்குத் துணை நிற்க வேண்டும் என்று அன்புரிமையோடு கேட்டுக் கொள்கின்றோம்.

தமிழர் உரிமை, இயற்கைப் பாதுகாப்பு, விவசாயம் மற்றும் தமிழர் எதிர்காலத்திற்காக நாம் ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது!

“இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை”

– உலகத் தமிழர்கள்

Related posts

இந்திய–இலங்கை ஒப்பந்தமும் இறையாண்மை நெருக்கடியும் (1987–1990) (பாகம் 3)

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

விளிம்பில் ஹார்முஸ்: அமெரிக்க–ஈரான் கடல்சார் மோதலின் ஆழமான பகுப்பாய்வு