இன்றைய ராசி பலன் 01 மே 2026 வெள்ளிக்கிழமை

01 மே 2026 வெள்ளிக்கிழமை

தமிழ் நாட்காட்டி மே 2026
அமாவாசை18-மே-2026 திங்கட்கிழமை
பௌர்ணமி01-மே-2026 வெள்ளிக்கிழமை
31-மே-2026 ஞாயிறு
கார்த்திகை16-மே-2026 சனிக்கிழமை
சஷ்டி விரதம்22-மே-2026 வெள்ளிக்கிழமை
சங்கடஹர சதுர்த்தி05-மே-2026 செவ்வாய்கிழமை
சதுர்த்தி20-மே-2026 புதன்கிழமை
பிரதோஷம்14-மே-2026 வியாழன்
28-மே-2026 வியாழன்
திருவோணம்09-மே-2026 சனிக்கிழமை
மாத சிவராத்திரி15-மே-2026 வெள்ளிக்கிழமை
ஏகாதசி13-மே-2026 புதன்கிழமை
27-மே-2026 புதன்கிழமை
அஷ்டமி09-மே-2026 சனிக்கிழமை
23-மே-2026 சனிக்கிழமை
நவமி10-மே-2026 ஞாயிறு
24-மே-2026 ஞாயிறு
அரசு விடுமுறை நாட்கள்01-மே-2026 வெள்ளிக்கிழமை
மே தினம்

28-மே-2026 வியாழன்
பக்ரீத் பண்டிகை
திருமண நாட்கள்08-மே-2026 வெள்ளிக்கிழமை
தேய்பிறை

13-மே-2026 புதன்கிழமை
தேய்பிறை

14-மே-2026 வியாழன்
தேய்பிறை

18-மே-2026 திங்கட்கிழமை
வளர்பிறை

28-மே-2026 வியாழன்
வளர்பிறை

29-மே-2026 வெள்ளிக்கிழமை
வளர்பிறை
திருவிழாக்கள்01-மே-2026 வெள்ளிக்கிழமை
கள்ளழகர் வைகை எழுந்தருளல்


04-மே-2026 திங்கட்கிழமை
அக்னி நட்சத்திரம் துவக்கம்


28-மே-2026 வியாழன்
அக்னி நட்சத்திரம் முடிவு


28-மே-2026 வியாழன்
பக்ரீத் பண்டிகை


30-மே-2026 சனிக்கிழமை
வைகாசி விசாகம்

இன்றைய ராசி பலன் 01 மே 2026 வெள்ளிக்கிழமை

மேஷ ராசி அன்பர்களே,

மேஷ ராசி நேயர்களே, குடும்பத்தில் ஒற்றுமையை பலப்படுத்த முடியும். அசதியும், சோர்வும் நீங்கி உற்சாகம் ஏற்படும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

ரிஷப ராசி நேயர்களே,

ரிஷப ராசி நேயர்களே, மனம் தெளிவு பாரும். மற்றவர்களை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். உறவினர்களின் அன்பும், ஆதரவும் கிட்டும் .உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மிதுன ராசி அன்பர்களே,

மிதுன ராசி நேயர்களே, பிரியமானவர்களின் சந்திப்பு உற்சாகம் தரும். தேவையற்ற மன மனபயத்தை நீக்கவும். பெற்றோர் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

கடக ராசி நேயர்களே,

கடக ராசி நேயர்களே, குடும்ப சிக்கல்கள் அகலும். பெண்கள் வழியில் ஆதரவு பெருகும். சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

சிம்ம ராசி நேயர்களே,

சிம்ம ராசி நேயர்களே, கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். யாரையும் குறை சொல்ல வேண்டாம். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். புது தொழில் யோகம் அமையும்.

கன்னி ராசி நேயர்களே,

கன்னி ராசி நேயர்களே, ஆன்மீக ஆர்வம் கூடும். அடுத்தவர்களை குறை சொல்வதை தவிர்க்கவும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

துலாம் ராசி நேயர்களே,

துலாம் ராசி நேயர்களே, ஞாபக மறதி தொல்லை இருக்கும். அடுத்தவருக்கு உதவி செய்வதில் ஆர்வம் வரும். சுற்றி இருப்பவர்களுடன் நல்லுறவு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

விருச்சிக ராசி நேயர்களே,

விருச்சிக ராசி நேயர்களே, விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். தக்க சமயத்தில் நண்பர்கள் கைகொடுப்பர். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

தனுசு ராசி நேயர்களே,

தனுசு ராசி நேயர்களே, பெரிய தொகை பரிமாற்றங்களில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியம் மேம்படும். பெரியோர்களின் ஆலோசனை கைகொடுக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

மகர ராசி நேயர்களே,

மகர ராசி நேயர்களே, சமூக நலனில் அக்கறை ஏற்படும். நண்பர்களால் சொல்லும்படியான ஆதாயம் உண்டு. திட்டமிட்டபடி பயணம் செய்ய முடியும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

கும்ப ராசி நேயர்களே,

கும்ப ராசி நேயர்களே, கடந்த கால சிந்தனைகள் நினைவுக்கு வரும். பெற்றோர்கள் ஆதரவு பெருகும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

மீன ராசி நேயர்களே,

மீன ராசி நேயர்களே, விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுவும். குல தெய்வ பிராத்தனையை நிறைவேற்றவும். புது நட்பு வட்டாரம் உருவாகும். தொழில், வியாபாரம் சிறப்படையும்.

தமிழ் ராசி பலன் வாரந்தோறும் 27-04-2026 To 03-05-2026

மேஷ ராசி அன்பர்களே

மேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் வளைந்துகொடுத்து போகவும். மனதை தெம்பாக வைத்துக்கொண்டால் எங்கும் எதிலும் வெற்றி பெறலாம். உங்கள் அன்றாட தேவைகள் அதிகரிக்கும். உற்றார், உறவினர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக அமையும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் அமையும். குடும்ப விஷயங்கள் அனைத்திலும், யோசித்து செயல்படுவது நல்லது. உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட வாய்ப்புண்டு. முக்கிய சமயத்தில் தேவையான உதவி கிடைக்கும். கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். திருமணம் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். தேவைற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும்.

ரிஷப ராசி அன்பர்களே

ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எந்த ஒரு செயலிலும் முழு மனதுடன் ஈடுபட்டால் செய்தால் வெற்றி நிச்சயம். பண தொடர்பாக யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். குடும்ப சூழ்நிலைகள் சாதகமாக அமையும். வேண்டியவர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பர். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் சிக்கனமாக இருந்து சேமிக்க பழகவும். உறவினர்களிடம் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பிறர் கைவிட்ட காரியத்தை திறம்பட செய்ய முடியும். கணவன் மனைவிடத்தில் சுமுக உறவு காணப்படும். கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். உத்யோகத்தில் பணிகளை கவனமாக மேற்கொள்ளவும். தொழில், வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும்.
பரிகாரம் : தினமும் கிருஷ்ண கவசம் படிக்கவும்

மிதுன ராசி அன்பர்களே

மிதுன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகம் இருக்கும். குடும்பத்தில் இதமான சூழல் நிலவும். உங்கள் பேச்சில் இனிமை கூடும். புதிய முயற்சிகளில் நல்ல அனுபவம் கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். ஆன்மீக பெரியோர்களின் ஆசி கிட்டும். உறவினர்கள் தோள் கொடுத்து உதவுவர். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் அனுகூலமாக முடியும். நண்பர்கள் சிலர் உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புண்டு. உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சுற்றி இருப்பவர்களின் ஆதரவு பெருகும். உத்யோக மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. எந்த ஒரு காரியத்தையும் சற்று சிரமப்பட்டே முடிக்க வேண்டியதிருக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
பரிகாரம் : மஹாவிஷ்ணுவை வணங்கி வழிபடவும்.

கடக ராசி அன்பர்களே

கடக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப விஷயங்களில் அதிக கவனம் செலுத்தவும். வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். மனதில் இனம் தெரியாத சோர்வு உண்டாகலாம். அடிக்கடி தூர பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்கவும். குடும்ப மதிப்பை உயர்த்த முடியும். உடல் நலனில் கவனம் தேவை. அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு மாற வேண்டிவரும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். உடன்பிறப்புகளிடம் அனுசரித்து போகவும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். கடன் பிரச்சனை தீர வழிபிறக்கும். குடும்ப பொறுப்பை உணர்ந்து அதற்கேற்ப செயல்படுவது நல்லது. உத்யோகத்தில் இருந்த தடைகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
பரிகாரம் : மகாலட்சுமி வழிபாடு சிறப்பை தரும்.

சிம்ம ராசி அன்பர்களே

சிம்ம ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப வரவு செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். பல நாட்களாக தடைப்பட்டு வந்த காரியம் சீக்கிரத்தில் முடியும். தெய்வ வழிபாடு நம்பிக்கை தரும். பிரபலங்களின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். உடன்பிறப்புகளிடம் ஒற்றுமை அதிகமாகும். குடும்பத்தில் பல வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். பணப்புழக்கம் நன்றாக உள்ளது என்றாலும் அதற்கேற்ப செலவுகள் உள்ளது. விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். யாருடைய கருத்துக்கும் செவி சாய்க்க வேண்டாம். புது நட்பு வட்டாரம் உருவாகும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரிப்பர். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் ஏற்படும்.
பரிகாரம் : தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.

கன்னி ராசி அன்பர்களே

கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். உங்களின் பேச்சும், செயலும் மற்றவர்களை எளிதில் கவரும். பொருளாதார நிலை உயர தொடங்கும். ஆடம்பர செலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். தியானம் மன அமைதியை தரும். குடும்பத்தினரை அனுசரித்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் மங்கள நிகழ்வு உடனாகும். உணவு கட்டுப்பாட்டில் கவனம் செலுத்தவும். வண்டி வாகனங்களில் செல்லும் போது மிகுந்த கவனம் தேவை. இக்கட்டான நேரங்களில் முடிவு எடுப்பதில் சிரமம் ஏற்படும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
பரிகாரம் : குல தெய்வத்தை வணங்கி வழிபடவும்.

துலாம் ராசி அன்பர்களே

துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் நன்மைகள் தரக்கூடிய விஷயங்கள் நடக்கும். மனதில் புது உற்சாகம் பிறக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்புண்டு. நீங்கள் எதை செய்தலும் மிகுந்த கவனத்துடன் செய்யவும். தெய்வ காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்ப தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். நண்பர்களின் ஆதரவு வழக்கம் போல் இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். கணவன் மனைவி உறவு சிக்கல்கள் இல்லாமல் இருக்கும். சாதுர்யமான பேச்சுக்கள் வெற்றி தரும். அண்டை, அயலாருடன் நல்லுறவு ஏற்படும். குடும்ப நபர்கள் உங்கள் பெருந்தன்மையை புரிந்துகொள்வர். புதிய முயற்சிகள் எதையும் இப்போதைக்கு மேற்கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் மனநிறைவு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வணங்கி வழிபடவும்.

விருச்சிக ராசி அன்பர்களே

விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தை பெற முடியும். உங்கள் செயல்களில் இருந்த தடை விலகும். மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கும். பொருளாதார நிலையில் ஏற்றம், இறக்கம் இருக்கும். நெருங்கியவர்களால் சில சமயம் மனசங்கடங்கள் வரும். குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். மற்றவர்களை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். பெரியோர்களின் ஆலோசனை கேட்டு செயல்படுவது நல்லது. நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். குடும்பத்தில் சுப செலவுகள் வரும். தான் தர்ம காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.
பரிகாரம் : துர்கையை வணங்கி வழிப்படவும்

தனுசு ராசி அன்பர்களே

தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பம் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும். உங்கள் எண்ணத்திற்குகேற்ப எல்லாம் சிறப்பாக அமையும். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்தி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். விருந்து, விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியும். சொந்த பந்தங்களின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் நலம் சீராகும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவுகள் வரும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் ஏற்படும். உற்றார், உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பாலிய நண்பர்களின் சந்திப்பு நிகழும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் வேலைப்பளு குறையும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும்.
பரிகாரம் : நவக்கிரகத்தை சுற்றுவது நலம் தரும்

மகர ராசி அன்பர்களே

மகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் லாபமும் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி ஒன்று வரும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் வரலாம். மற்றவர்களிடம் பேசும் போது பேச்சில் நிதானம் அவசியம்உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும்.ஒரு காரியத்தை செய்யும் முன் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. குடும்பத்துடன் பயணிக்க விருப்பம் ஏற்படும். நண்பர்கள் உங்களின் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பர். உங்கள் கோபத்தை கட்டுபடுத்துவது பல வழிகளில் நன்மை தரும். நெடுந்தூர பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். காரிய தடை விலகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புது தொழில் யோகம் அமையும்.
பரிகாரம் : விநாயகரை வணங்கி வழிபடவும்.

கும்ப ராசி அன்பர்களே

கும்ப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். வெளிவட்டார பழக்கங்கள் விரிவடையும். எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த பிரச்சனைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். உடன்பிறப்புகளிடம் அன்பும் பாசமும் காணப்படும். உறவுகளினால் நன்மை ஏற்படும். கணவன் மனைவிடையே நல்ல புரிதல் இருக்கும். குடும்பத்தில் புது நபர்களின் வருகை சந்தோஷத்தை தரும். தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் வரும். தேவையற்ற விஷயங்கள் எதையும் மனதில் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும்.
பரிகாரம் : வராகியை வணங்கி வழிபடவும்

மீன ராசி அன்பர்களே

மீன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். தெய்வ வழிபாடு நம்பிக்கை தரும். குடும்பத்தில் புது திட்டங்களை அமல்படுத்த முடியும். எங்கும் எதிலும் வெற்றி உண்டாகும். பல நாட்களாக தடைப்பட்டு வந்த காரியம் நிறைவேறும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை இருக்கும். பணப்புழக்கம் சொல்லும்படி இருக்கும் என்றாலும் அதற்கேற்ப செலவுகள் உள்ளது. வெளியில் கொடுத்த கடன் கைக்கு திரும்பக் வரும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். குடும்பத்தில் முக்கி முடிவுகள் எடுப்பதில் சிரமம் இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். யாரிடத்திலும் வீண் விவகாரங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது, உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
பரிகாரம் : விநாயகர் வழிபாடு சிறப்பை தரும்.


மே மாத ராசி பலன்கள் 2026

மே மாத ராசி பலன்கள் 2026
மே மாத பலன்கள் – (2026

ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 18 முதல் வைகாசி மாதம் 17ம் தேதி வரை.

வாக்கிய பஞ்சாங்கப்படி (01-05-2026 முதல் 31-05-2026) வரை ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியே கிரக நிலைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பொதுப்பலன்கள் ஆகும். இதில் அவரவர் ஜாதகத்தில் நடக்கும் நடப்பு திசை, புத்தி சாதகமாகவோ,அந்தரம், கோச்சாரம் இவைகள் அனைத்தும் சாதகமாக இருக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு பலன்கள் சற்று மாறுபடக்கூடும். இருப்பினும் ஒவ்வொருவரும் தெய்வ அனுகூலங்களை கூட்டுவதின் மூலமாக வரும் கெடுபலன்களை குறைத்து நல்ல பலன்களை அனுபவிக்க முடியும் என்பதே என்னுடைய அனுபவ பூர்வ உண்மை.

கிரக நிலை மாற்றம் :
01.05.2026 – மேஷ புதன்
11.05.2026 – மேஷ செவ்வாய்
14.05.2026- மிதுன சுக்கிரன்
15.05.2026 – ரிஷபம் சூரியன்
26.05.2026 – கடக குரு


ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர்
ஜோதிடர் ஆலந்தூர் A.வினோத் குமார், PH.D Astrology (அலைபேசி: 09003019831)

மேஷ ராசி அன்பர்களே, இந்த மாத தொடக்கம் ஆற்றலும், நம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், முன் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மனதில் இருந்த பயம் நீங்கி தெளிவு பிறக்கும். புதிதாக ஏதாவது செய்ய ஆவல் எழும். பழைய பிரச்சனைகள் தீரும். ஆன்மிக விஷயங்களில் ஆர்வம் கூடும். குடும்பத்தில் வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். மனம் மகிழும்படியான விஷயங்கள் நடக்கும். நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்க தாமதமாகும். குடும்பத்தில் வெளி நபர்களால் இருந்த குழப்பம் நீங்கும். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத தடைகளும், பிரச்னைகளும் வந்தாலும் உடல் நிலையில் கவனம் தேவை. மனதிற்குள் சிறு சிறு சங்கடங்கள் வந்தாலும் அதை பெரிதுபடுத்த வேண்டாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கவலைகள் அகலும். குடும்ப விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும். பண வரவு சுமாராக இருக்கும். கடன் நெருக்கடிகள் ஓரளவு குறையும். கொடுத்த வாக்கை தவறாமல் காப்பாற்ற முடியும். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனக்வருத்தங்கள் நீங்கும். எதிரிகளால் ஆதாயம் உண்டு. வீடு, வாகனம், போன்றவற்றால் அதிக செலவுகள் ஏற்படும். வாகன பயணங்களில் கவனம் தேவை. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
சந்திராஷ்டமம் : 3,4,5 & 30 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் மங்களகரமானதாக இருக்கும். உங்கள் காரிய வெற்றிக்கு தேவையான அனைத்து உதவியும் கிடைக்கும். நிலுவையில் உள்ள பல வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். உங்களின் கடமைகளை திறம்பட செய்ய முடிக்க முடியும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பயணங்களால் செலவுகள் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். எந்த ஒரு காரியம் செய்யும் முன் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். குடும்பத்தில் முக்கிய விஷயங்களை திட்டமிட்டு செய்வது நல்லது. தீர்க்க முடியாத பிரச்னைகளை எளிதில் கூட எளிதில் தீர்க்க முடியும். போராட்டங்கள் பாராட்டுகளாக மாறும். சவாலான சூழலைச் சாதகமாக மாற்றும் மாதம். அடுத்தவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். குடும்ப விஷயங்களில் சிறு, சிறு பிரச்னைகள் இருந்தாலும் அது நாளடைவில் சரியாகும். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. குல தெய்வ வழிபாடுகளை தவறாமல் மேற்கொள்ளவும். குடும்பத்தில் உள்ளவர்களால் சந்தோஷம் ஏற்படும். கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவது நல்லது. உடன்பிறப்புகளிடம் கவனம் தேவை. குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். பண நெருக்கடி ஓரளவு குறையும். பூர்வீக சொத்து விஷயங்களில் பிரச்னைகள் வந்து நீங்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை. சிலருக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் குறையும்.
சந்திராஷ்டமம் : 5,6,7,8 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மீக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். உடல் சோர்வால் சிரமப்படக்கூடும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் புது விஷயங்களை செயல்படுத்தும் எண்ணம் வரும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். எடுக்கும் முயற்சிகளில் தடை இருந்தாலும் மன உறுதியுடன் செயல்பட்டு வெற்றி பெற முடியும். புத்திசாதூரியம் மூலம் நிறைய சாதிக்க முடியும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் பாராட்டு கிடைக்கும். உடல் சோர்வு, அசதி நீங்கும். வீடு, மனை வாங்குவதில் சிறிய தடை இருக்கும். பெற்றோர்களின் ஆலோசனை கிடைக்கும். புது கடன் வாங்கி அனாவசியமாக செலவு செய்ய வேண்டாம். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். உடல் நிலையில் கவனம் தேவை. வாகன பராமரிப்பு செலவுகள் வந்து நீங்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். உடன்பிறப்புகளின் ஆதரவு பெருகும். நண்பர்களால் உதவி கிடைக்கும். பெண்களால் சில தொந்தரவுகள் வரும். தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் ஏற்படும். திட்டமிட்ட பயணங்களை தவிர்க்கவும். வாகனம் வாங்குவதை சற்று தள்ளி வைக்கவும். புதிய முடிவுகளையும், புதிய முயற்சிகளையும் தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் நெருக்கடிகள் குறையும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம் : 8,9,10 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் சிறப்பான ஒரு மாதமாக இருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கலாம். நீண்ட கால பிரச்சனைகள் குறையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். நிதி நிலைமை சீராக இருக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்ப பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். வீட்டு தேவைகளுக்கு கூடுதலாக செய்ய வேண்டிவரும். முக்கிய காரியங்களில் இருந்த தடை நீங்கும். எத்தனை பிரச்னைகள் வந்தாலும் அதை திறமையாக சமாளிக்க முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பொருளாதார நிலையில் உயர்வு ஏற்படும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறு, சிறு தடைகள் வந்தாலும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். உடன்பிறப்புகளிடம் சிறு சிறு மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். எதிரிகளால் உங்களிடம் அடிபணிந்து போவர். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். நீண்ட நாள் பிரச்னைகள் முடிவுக்கு வரும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். மற்றவர்கள் உங்களை சரியாக புரிந்து கொள்ளவில்லையே என ஆதங்கம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். உறவினர்களிடம் சின்ன மனஸ்தாபம் வரும். சமூகத்தில் நல்ல அந்தஸ்து உயரும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் பல தடங்கலுக்கு பின் முன்னேற்றம் ஏற்படும்.
சந்திராஷ்டமம் : 10,11,12 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் மனதில் இருந்து வந்த சஞ்சலம் நீங்கி மன மகிழ்ச்சியும், நிம்மதியும் உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தன்னம்பிக்கை வலுவடையும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைத்தாலும், செலவுகளையும் அதிகம் சந்திக்க நேரிடும். குடும்ப நலனுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். தேக நலனில் அக்கறைகொள்ளவும். எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவை எடுக்க அடுத்தவரின் ஆலோசனையை கேட்பது நல்லது. பொருளாதார சிக்கல் இருந்தாலும் அதை எதிர்கொள்ள முடியும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். காரிய அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். எடுக்கும் முயற்சிகளில் சிறு, சிறு தடை பிரச்னைகள் வந்தாலும், தொடர்ந்து முயற்சி செய்யவும். உடன் பிறப்புக்கள் உதவிகரமாக இருப்பர். உறவினர்களால் சின்ன சின்ன மனக்கஷ்டங்கள் வந்து போகும். தெய்வ அனுகூலம் உண்டு. உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிரிகள் விலகிச் செல்வர். நாள் பட்ட பிரச்னைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே பனிப்போர் ஏற்படும். வழக்கு விஷயங்கள் சாதகமாக முடியும். பிரபலங்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். புது நண்பர்களால் ஆதாயம் இருக்கும். மற்றவர்களிடம் உதவி கேட்க தயக்கம் ஏற்படும். கடனாக கொடுத்த பணம் கைக்கு திரும்ப வரும். உங்களுக்கு எதிராக வரும் எதிர்ப்புகள் முற்றிலும் நீங்கும். உத்யோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். வேலையில் வெற்றியையும் காண முடியும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
சந்திராஷ்டமம் : 12,13,14 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் நிதி நிலை வழக்கத்தை விட நன்றாகவே இருக்கும். பணம் சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். மனதில் புது உற்சாகம் பிறக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். புது முதலீடுகளை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். இம்மாதத்தில் ஒரு சிலர் உங்களுக்கு எதிராக செயல்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிரியமானவர்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துகொள்வதால் மனக்குறைகள் நீங்கும். கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு செலவுகள் அதிகம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை, சச்சரவுகள் நீங்கும். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். நண்பர்கள் மத்தியில் நல்ல மரியாதை கிடைக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். புதுமண தம்பதிகள் நல்ல செய்திகளைப் பெறலாம். பொருளாதார நிலையில் உயர்வு ஏற்படும். புதிய நபர்களால் நன்மை உண்டு. ஆன்மீக பெரியோரின் ஆசி கிட்டும். உடன்பிறப்புகளால் நன்மை உண்டு. வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். உறவினர்களிடையே சின்ன மன கசப்புக்கள் வந்து நீங்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுவது அவசியம். பழைய வீட்டை சீரமைக்க வேண்டியிருக்கும். திட்டமிட்ட காரியத்தை தாமதின்றி முடிக்க முடியும். யாரிடத்திலும் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். உத்யோகம் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
சந்திராஷ்டமம் : 14,15,16 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

துலாம் ராசி அன்பர்களே, இந்த மாதம் பல திருப்புமுனைகள் நிறைந்து இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சமூகத்தில் நற்பெயர் அதிகரிக்கும். புதிய மாற்றங்களைக் காணக்கூடும். மாத தொடக்கம் சற்று மெதுவாக இருந்தாலும், போக போக ஆற்றலும், உற்சாகமும் அதிகரிக்கும். ஆன்மீக சுற்றுலா செல்லும் எண்ணம் இருக்கும். நிதி நிலைமை வலுவடையும். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை குடும்ப மருத்துவரிடம் சென்று உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. சொந்த பந்தங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்கள் பிடிவாத குணத்தை ஒதுக்கி வைப்பது எல்லா வகையிலும் நல்லது. குடும்பத்தில் தொலைத்து போன சந்தோஷம் மீண்டும் வரும். மன தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தில் அனுசரித்து போகவும். உறவினர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும். அக்கம் பக்கத்தினருடன் விட்டுக்கொடுத்து போவது நன்மை தரும். குடும்பத்தில் சிறு பிரச்னைகள் வந்தாலும் மகிழ்ச்சி இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடன்பிறப்புகள் பக்கபலமாக. புது வாகனம் வாங்குவதில் உள்ள தடைகள் அகலும். வாகன பயணங்களில் கவனம் தேவை. தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். வராமல் நின்று போன பணம் கைக்கு வரும். உடல் உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு ஏற்படலாம். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். உங்களை சுற்றி நிறைய விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். தொழில், வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் அடங்கும். கூட்டு தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம் : 16,17,18 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் இழுபறியில் இருந்த பல காரியங்கள் சீக்கிரத்தில் முடியும். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். புதிய முயற்சிகள் பலிதமாகும். வருமானமும், செலவுகளும் நிலையாக இருக்கும். அதாவது வந்த வேகத்தில் பணம் செலவாகும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். இதன் மூலம் நிறைய செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். மறைமுக எதிரிகளிடம் சற்று கவனமாக இருக்கவும். நீண்ட தூர பயணங்களை தவிர்க்கவும். குடும்பத்திற்குள் மனக்கசப்புகள் அல்லது கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஒரு சில முக்கிய விஷயங்களை நேரடியாக சென்று முடிப்பது நல்லது. வீடு, மனை சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். பொருளாதார நிலையில் ஏற்ற தாழ்வு இருக்கும். குடும்பத்தில் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். நண்பர்களிடம் மனக்குறைகளை சொல்ல முடியும். விஐபிகளின் அறிமுகமும், அவர்களால் ஆதரவும் கிடைக்கும். உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். வேண்டிவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர இயலும். சொந்த பந்தங்களின் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சியை தரும். கணவன் மனைவிக்கிடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். உங்கள் சாதுரியமான பேச்சால் நினைத்த காரியத்தை சாதிக்க முடியும். குடும்ப விவகாரங்களில் அடுத்தவர் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் அதை மன உறுதியடன் போராடி வெற்றி பெற முடியும். உத்யோகத்தில் பணிகளை கவனமாக மேற்கொள்ளவும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும். சந்திராஷ்டமம் : 18,19,20 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்கள் வாழ்கை தரத்தை உயர்த்திக்கொள்ள வழி கிடைக்கும். புதிய வருமான வழிகளை கண்டறிய முடியும். தனிப்பட்ட வாழ்க்கையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். நிதி நிலைமை வலுவடையும். குடும்பத்தில் தன வரவுக்கு வாய்ப்புண்டு. திட்டமிட்ட பயணங்களை மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளது. குடும்பத்தை பற்றிய கவலை அதிகம் இருக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். மனக்குறைகளை மற்றவர்களிடம் சொல்வதால் மன பாரம் குறையும். பணம் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. உற்றார், உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவர். குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணைவர். மனதில் இருந்த குழப்பநிலை மாறி மனதில் ஒரு தெளிவு ஏற்படும். உடன்பிறப்புகளின் நலனில் அக்கறைகொள்ளவும். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும். நண்பர்கள் சிலர் விரோதமாக செயல்பட வாய்ப்புண்டு. எதிர்பாப்புகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் வளைந்து கொடுத்து போகவும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். புதிய முயற்சிகளை சிறிது காலம் தள்ளி வைக்கவும். பெற்றோர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வாகனம் வாங்கும் முயற்சிகள் தடைப்படும். கடன் தொந்தரவு பெரியளவில் இருக்காது. எதையும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக பேசுவது நல்லது. எதிர்பார்த்த காரியங்கள் காலதாமதின்றி சீக்கிரத்தில் முடியும். உத்யோகத்தில் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும்.
சந்திராஷ்டமம் : 20,21,22,23 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் எல்லாம் சாதகமாக அமையும். வீடு தேடி நல்ல வாய்ப்புகள் வரும். மனம் மகிழும் செய்தி ஒன்று வரும். புது வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் வரும். குடும்ப வாழ்வில் நேர்மறையான மாற்றங்களைக் காண முடியும். இம்மாதத்தில் கோபத்தையும், பிடிவாதத்தையும் தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் அது உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும். தியானத்தால் மனம் அமைதி பெரும். குடும்பத்தில் பிரச்சனைகள் நாளடைவில் சீராகும். விட்டுக்கொடுத்து போகும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளவும். எத்தனை தடைவந்தாலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களில் வெற்றி பெற முடியும். வீடு, வாகன சேர்க்கை ஏற்படும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலனை பெற முடியும். குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். எதிலும் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். குடும்ப சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டு. எதிர்த்து நின்றவர்கள் நண்பர்களாக மாறுவர். உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். மனதில் உள்ள குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுக்க முடியும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். குடும்பத்தில் சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்கவும். வாகன பயணங்களில் கவனம் தேவை. வரும் எதிர்ப்புகளை சமாளிக்கும் பக்குவம் இருக்கும். உத்யோகம் தொடர்பான பயணங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சில தடைகளை சந்தித்தாலும், மாத இறுதியில் நிலைமை மேம்படும்.
சந்திராஷ்டமம் : 23,24,25 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளும் நல்ல நிதி ஆதாயங்களும் கிடைக்கும். உங்கள் அறிவாற்றலை வெளிப்படுத்த முடியும். திறமைகள் மேம்படும். மன கவலை நீடித்தாலும், தன்னம்பிக்கையால் அனைத்தையும் திறம்பட சமாளிப்பீர்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உங்களை சுற்றி இருந்த எதிர்ப்புகள் முழுமையாக நீங்கும். குடும்ப பிரச்சனைகள் தலைதூக்கும். புத்தி சாதூர்யத்தால் எந்த ஒரு தடைகள் வந்தாலும் அதை சமாளிக்க முடியும். குடும்பத்தில் யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. யாரையும் முழுமையாக நம்ப வேண்டும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. குடும்பத்தில் முடிவுகளை கலந்தாலோசித்து எடுப்பது நன்மை தரும். உடன்பிறப்புகளால் சில பண விரையம் ஏற்படும். புது முயற்சிகளில் ஒரு சில தடைகள் வரலாம். நட்பு வழியில் நல்ல தகவல் வரும். உற்றார், உறவினர்களால் சில பண நெருக்கடிகள் வர வாய்ப்புண்டு. உடல் நலம் சீராகும். குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கும் சந்தர்ப்பங்கள் வரும். மனதில் நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் கூடும். கணவன் மனைவிக்கிடையே ஈகோ பிரச்சனையை தவிர்க்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். புது வீடு, மனை வாங்குவதில் ஆர்வம் கூடும். எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதை துணிச்சலுடன் எதிர்கொள்ள முடியும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உத்யோகத்தில் கடுமையாக உழைக்க வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
சந்திராஷ்டமம் : 25,26,27 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

மீன ராசி அன்பர்களே

மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் யோகமான மாதமாக அமையும், தலையெழுத்தை மாற்றும் முக்கிய மாற்றங்கள் நிகழலாம். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். செலவுகள் அதிகரித்தாலும், சேமிக்கவும் முடியும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை உஷ்ணம் தொடர்பான தொந்தரவுகள் வர வாய்ப்புண்டு. பெற்றோரின் வழிகாட்டுதலும் கிடைக்கும். உங்களை சுற்றி இருப்பவர்களிடம் ஏற்பட்ட கசப்பான விஷயங்கள் மறையும். மேலும் உங்கள் எதிர்பார்ப்புக்கு தகுந்தாற்போல் ஒருவர் அறிமுகமாவார். சற்றும் எதிர்பார்க்காத செலவுகள் அதிகம் வரும். உடல் உபாதைகள் நீங்கும். புது நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் சிலர் உதவியை கேட்டு வருவர். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். கோர்ட் வழக்கில் இழுபறி நிலை நீடிக்கும். முக்கிய பிரபலங்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும். பணவரவு சிறிது தாமதத்திற்கு பின் கைக்கு வரும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். புதிதாக அறிமுகமானவர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. உடன்பிறப்புகளிடம் விட்டுக்கொடுத்து போகவும். கணவன் மனைவிக்குள் சுமுகமான சூழல் நிலவும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். வெளியில் கடன் வாங்கி செலவு வேண்டிய சூழ்நிலை உருவாகும். வாகனத்தில் நிதானமாக செல்லவும். பொதுப் பிரச்சனைகளை எதிர்கொள்வதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.
சந்திராஷ்டமம் : 27,28,29,30 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்
.


Related posts

இன்றைய ராசி பலன் 30 ஏப்ரல் 2026 வியாழக்கிழமை

இன்றைய ராசி பலன் 29 ஏப்ரல் 2026 புதன்கிழமை

இன்றைய ராசி பலன் 27 ஏப்ரல் 2026 திங்கட்கிழமை