இன்று (மே 07) முக்கிய நிகழ்வுச் செய்திகள்

தமிழ்நாட்டிலும், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகள். இன்று (மே 7) நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?

அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.

  • தவெக தலைவர் விஜய் முதல்வர் பதவியேற்கும் விழா ரத்தாகியிருக்கும் நிலையில், கட்சியின் எம்.எல்.ஏக்களுக்கு தலைமை அழைப்பு விடுத்துள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக எம்.எல்.ஏக்களை இன்று காலை 11 மணிக்கு பனையூர் அலுவலகத்தில் பொதுச்செயலாளர் ஆனந்த் சந்திக்கிறார்.
  • கேரளாவில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடக்கிறது; இந்த கூட்டத்தில் முதல்வர் யார் என்று தேர்வு செய்யப்பட உள்ளார்.
  • பீஹார் முதல்வர் சாம்ராட் சௌத்ரி இன்று தனது அமைச்சரவையை விரிவுபடுத்தவுள்ளார். பாட்னா காந்தி மைதானத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
  • திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று மாலை 5.30 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது; இந்த கூட்டத்தில் தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
  • தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி ஆணையர் அறிவிப்பு; tngasa.in என்ற இணையதளம் மூலம் மே 29 வரை விண்ணப்பிக்கலாம்; 181 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் 1,26,959 சேர்க்கை இடங்கள் உள்ளன.
  • கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
  • பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்றிரவு லக்னோ-பெங்களூரு இடையிலான போட்டி லக்னோவில் நடக்க உள்ளது.

Related posts

விஜயின் குரூர துணிச்சல் ! | முதல்வர் பதவின் மீதான வெறி !

தமிழீழ விடுதலைப்புலிகள் அகவை 50 – சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் ஊர்வலம் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் நினைவிடத்தில் இருந்து ஆரம்பமானது.