தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில், எல்லை பாதுகாப்பு படை தலைமையகம் உட்பட இரண்டு இடங்களில் அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இதற்கான சதிச் செயல்களின் பின்னணியில், பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., இருப்பது தெரியவந்துள்ளது.

இக்குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பின், நாடு முழுதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்காத நிலையில், கல்பாக்கம் அனல் மின் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு, மத்திய உளவுத் துறையும் எச்சரிக்கை செய்துள்ளது.

இது தொடர்பாக, கவர்னர் மற்றும் டி.ஜி.பி., அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளது. இதையடுத்து, மண்டல ஐ.ஜி.,க்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.,க்கள் வாயிலாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன; வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

விஜயின் குரூர துணிச்சல் ! | முதல்வர் பதவின் மீதான வெறி !

தமிழீழ விடுதலைப்புலிகள் அகவை 50 – சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் ஊர்வலம் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் நினைவிடத்தில் இருந்து ஆரம்பமானது.