விஜய் ஆட்சி அமைத்தால் பேரழிவு: தினகரன் கடும் கோபம்

சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:

த.வெ.க., ஆட்சி அமைக்க, அ.ம.மு.க., – எம்.எல்.ஏ., காமராஜ் ஆதரவு அளித்திருப்பதாக, கவர்னரிடம் த.வெ.க., தலைவர் விஜய் கடிதம் கொடுத்தார். அதை அறிந்து அதிர்ச்சி அடைந்து, இது குறித்து கவர்னரை சந்தித்து, புகார் மனு கொடுத்தேன். த.வெ.க.,வுக்கு, அ.ம.மு.க., — எம்.எல்.ஏ., எந்தவித ஆதரவும் வழங்கவில்லை என, கவர்னரிடம் தெரிவித்தேன்.

இதற்கிடையில், அ.ம.மு.க., – எம்.எல்.ஏ., ஆதரவு கடிதத்தில் கையெழுத்திடுவது போன்ற வீடியோவை, த.வெ.க.,வினர் வெளியிட்டுள்ளனர். மேலும், அ.ம.மு.க., பொதுச்செயலரான, என் முழு ஒப்புதல் பெற்று, சுய நினைவுடன், மகிழ்ச்சியுடன் அ.ம.மு.க., – எம்.எல்.ஏ., கையெழுத்திட்டதாக தெரிவித்துள்ளனர்.

எவ்வளவு திமிரும், வன்மமும் இருந்தால், த.வெ.க.,வினர் இப்படி ஒரு பதிலை கூறுவர். ‘வீடியோ’ பதிவு உண்மையாக இருந்தால், அதை த.வெ.க., வெளியிட வேண்டும். காமராஜ் வழங்கிய ஆதரவு கடிதத்தின் அசலையும் வெளியிட வேண்டும். அவர்கள் வெளியிட்ட வீடியோ, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

ஆதரவு கடிதத்துக்கு நான் ஒப்புதல் கொடுத்ததாக சொன்னால் தான் நான் பயப்படுவேன்; தே.ஜ., கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என, த.வெ.க., நினைக்கிறது. விஜய்க்கு ஆதரவு தர, மன்னார்குடி அ.ம.மு.க., – எம்.எல்.ஏ., அவருக்கு மாமனா, மச்சானா. முதல்வராவதற்கு விஜய் மோசடி செய்துள்ளார். அவர் ஆட்சி அமைத்தால், தமிழகத்தில் பேரழிவு ஏற்படும். இவ்வாறு தினகரன் கூறினார்.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.