அல்லைப்பிட்டியில் “முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை” நினைவஞ்சலி! முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி பரிமாறல்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான நேற்றைய தினம் புதன்கிழமை (13-05-2026) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது.

இதன்போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் நினைவாக அல்லைப்பிட்டி பங்குத் தந்தையால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அத்தோடு அல்லைப்பிட்டி சேமக் காலையில், அல்லைப்பிட்டி படுகொலையின்போது உயிரிழந்தவர்களுக்கும் சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.