| தமிழ் நாட்காட்டி ஜூன் 2026 | |
|---|---|
| அமாவாசை | 14-ஜூன்-2026 ஞாயிறு |
| பௌர்ணமி | 29-ஜூன்-2026 திங்கட்கிழமை |
| கார்த்திகை | 13-ஜூன்-2026 சனிக்கிழமை |
| சஷ்டி விரதம் | 20-ஜூன்-2026 சனிக்கிழமை |
| சங்கடஹர சதுர்த்தி | 04-ஜூன்-2026 வியாழன் |
| சதுர்த்தி | 18-ஜூன்-2026 வியாழன் |
| பிரதோஷம் | 12-ஜூன்-2026 வெள்ளிக்கிழமை 27-ஜூன்-2026 சனிக்கிழமை |
| திருவோணம் | 05-ஜூன்-2026 வெள்ளிக்கிழமை |
| மாத சிவராத்திரி | 13-ஜூன்-2026 சனிக்கிழமை |
| ஏகாதசி | 11-ஜூன்-2026 வியாழன் 25-ஜூன்-2026 வியாழன் |
| அஷ்டமி | 08-ஜூன்-2026 திங்கட்கிழமை 22-ஜூன்-2026 திங்கட்கிழமை |
| நவமி | 09-ஜூன்-2026 செவ்வாய்கிழமை 23-ஜூன்-2026 செவ்வாய் |
| அரசு விடுமுறை நாட்கள் | 26-ஜூன்-2026 வெள்ளிக்கிழமை மொஹரம் பண்டிகை |
| திருமண நாட்கள் | 04-ஜூன்-2026 வியாழன் தேய்பிறை 07-ஜூன்-2026 ஞாயிறு தேய்பிறை 17-ஜூன்-2026 புதன்கிழமை வளர்பிறை 18-ஜூன்-2026 வியாழன் வளர்பிறை 24-ஜூன்-2026 புதன்கிழமை வளர்பிறை 25-ஜூன்-2026 வியாழன் வளர்பிறை |
| திருவிழாக்கள் | 22-ஜூன்-2026 திங்கட்கிழமை ஆனி உத்திர தரிசனம் 26-ஜூன்-2026 வெள்ளிக்கிழமை மொஹரம் |
இன்றைய ராசி பலன் 01 ஜூன் 2026 திங்கட்கிழமை
மேஷ ராசி அன்பர்களே,
வெளிவட்டாரத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
அதிர்ஷ்ட கிழமை : செவ்வாய் & ஞாயிறு
அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான்
பரிகாரம் : செவ்வாய்க்கிழமை விரதங்களை மேற்கொள்வது நல்லது
நட்சத்திர பலன்கள்
அசுவினி : நல்ல ஒரு மதிப்பை பெற முடியும்.
பரணி : தேக ஆரோக்கியம் பலம் பெரும்.
கிருத்திகை 1 : வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
ரிஷப ராசி நேயர்களே,
தெய்வ வழிபாடு நன்மையை தரும். பிரியமானவர்கள் ஒத்தாசையாக இருப்பர். வெளியாட்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
அதிர்ஷ்ட குறியீடுகள் :
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
அதிர்ஷ்ட கிழமை : வெள்ளி & புதன்
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : மகாலட்சுமி
பரிகாரம் : குல தெய்வத்தை முறையாக வணங்கி வழிப்படவும்
நட்சத்திர பலன்கள்:
கிருத்திகை 2,3,4 : பிராத்தனைகள் நிறைவேறும்
ரோகிணி : எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும்.
மிருகசீரிடம் 1,2 : ஆதாயம் கிடைக்கூடிய நாள்
மிதுன ராசி அன்பர்களே,
குடும்பத்தினர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திட்டமிட்டு செய்ய நினைக்கும் காரியங்கள் கை கூடும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
அதிஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட கிழமை : புதன் & வெள்ளி.
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : அன்னை மீனாட்சி
பரிகாரம் : புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடைகள் பயன்படுத்துவது அதிர்ஷ்டத்தைத் தரும்.
நட்சத்திர பலன்கள்:
மிருகசீரிடம் 3,4 : முன்னேற்றம் தரக்கூடிய நாள்
திருவாதிரை : எதிர்பார்த்த காரியம் நடக்கும்.
புனர்பூசம் 1,2,3 : உங்களை சுற்றி நிறைய ஆதரவு கிடைக்கும்.
கடக ராசி நேயர்களே,
குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பம் நீங்கும். உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்கள் ஆலோசனை வழங்குவர். புது தொழில் யோகம் அமையும்.
அதிர்ஷ்ட குறியீடுகள்
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட கிழமை : திங்கள் & வியாழன்.
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : சந்திரசேகரர் (சிவபெருமான்)
பரிகாரம் : பௌர்ணமி தினங்களில் ஏழைகளுக்கு அரிசி தானம் செய்வது துரதிர்ஷ்டங்களைப் போக்கும்.
நட்சத்திர பலன்கள்:
புனர்பூசம் 4 : மனதில் இருந்த குழப்ப நீங்கும்.
பூசம் : வெளி உணவுகளை தவிர்க்கவும்
ஆயில்யம் : நிறைய யோசனைகள் கிடைக்கும்
சிம்ம ராசி நேயர்களே,
பயணங்களால் அதிக அலைச்சல் இருக்கும். நண்பர்கள் சிலர் உதவி கேட்டு வருவர். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிக்க முடியும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
அதிஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : தங்க நிறம்
அதிர்ஷ்ட கிழமை: ஞாயிறு & செவ்வாய்
அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : ஸ்ரீ நரசிம்மர்
பரிகாரம் : ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானை வணங்குவது அதிக நன்மையை தரும்.
நட்சத்திர பலன்கள்:
மகம் : பயண அலைச்சல் ஏற்படும்
பூரம் : மற்றவர்களுக்கு உதவ முடியும்
உத்திரம் 1 : முக்கிய வேலைகள் முடிவடையும்
கன்னி ராசி நேயர்களே,
எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்கவும். உறவினர்கள் வகையில் சங்கடங்கள் வரும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
அதிர்ஷ்ட கிழமை: புதன் & வெள்ளி
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : ஸ்ரீமன் நாராயணன்
பரிகாரம் : பறவைகளுக்குத் தினமும் ஊறவைத்த பச்சைப் பயறு தானமாக வழங்கலாம்.
நட்சத்திர பலன்கள்
உத்திரம் 2,3,4 : எதிரிகள் காணாமல் போவர்
அஸ்தம் : சேமிப்பில் கவனம் செலுத்தவும்
சித்திரை 1,2 : மனசங்கடங்கள் நீங்கும்
துலாம் ராசி நேயர்களே,
குடும்ப பொருளாதாரத்தில் சிக்கல் வரும். தடைபட்ட உறவு மீண்டும் துளிர்க்கும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்யோகத்தில் மனநிறைவு ஏற்படும்.
அதிர்ஷ்ட குறியீடுகள்
அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : மென்மையான பிங்க்
அதிர்ஷ்ட கிழமை: வெள்ளி & புதன்,
அதிர்ஷ்டமான திசை : மேற்கு
வணங்க வேண்டிய தெய்வம் : ஸ்ரீ ரங்கநாதர்
பரிகாரம் : ஏழைப் பெண்களுக்கு வெள்ளை நிற ஆடைகளை தானம் செய்வது நன்மை தரும்.
நட்சத்திர பலன்கள்:
சித்திரை 3,4 : பண நெருக்கடிகள் குறையும்
ஸ்வாதி : புது நட்பு கிடைக்கும்
விசாகம் 1,2,3 : சேவை மனப்பான்மை இருக்கும்
விருச்சிக ராசி நேயர்களே,
குடும்ப வருமானத்தை பெருக்க முடியும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நண்பர்களுடன் சிறு சிறு விரிசல்கள் வரக்கூடும். உத்யோகத்தில் திருப்தி நிலை உண்டாகும்.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : கருப்பு
அதிர்ஷ்ட கிழமை: செவ்வாய் & ஞாயிறு
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : சண்முகர் (முருகன்)
பரிகாரம் : மன அமைதி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு, பசுவின் பால், தயிர், சர்க்கரை தானம் செய்வது நற்பலனைத் தரும்.
நட்சத்திர பலன்கள்:
விசாகம் 4 : வருமானம் வெகுவாக உயரும்
அனுஷம் : கனவு நினைவாகும் நாள்
கேட்டை : நண்பர்களுடன் மனக்கசப்புகள் வரும்
தனுசு ராசி நேயர்களே,
குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஊதா
அதிர்ஷ்ட கிழமை: வியாழன் & செவ்வாய்
அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : தட்சிணாமூர்த்தி
பரிகாரம் : வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடவும்
நட்சத்திர பலன்கள்:
மூலம் : மன அமைதி கிடைக்கும்
பூராடம் : திட்டங்கள் நிறைவேறும் நாள்
உத்திராடம் 1 : பராமரிப்பு செலவுகள் கூடும்
மகர ராசி நேயர்களே,
எந்த காரியத்திலும் அவசரபட வேண்டாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். கணவன் மனைவிக்குள் விட்டு கொடுத்தல் அவசியம். உத்யோகக்தில் அமைதி நிலவும்.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
அதிர்ஷ்ட கிழமை: சனி & வெள்ளி
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
வணங்க வேண்டிய தெய்வம் : காலபைரவர்
பரிகாரம் : நவகிரங்களை தினமும் 9 முறை வலம் வந்து வழிபடுவது சிறப்பு
நட்சத்திர பலன்கள்:
உத்திராடம் 2,3,4 : நிதானமாக செயல்பட வேண்டிய நாள்
திருவோணம் : நல்ல தகவல் ஒன்று வரும்
அவிட்டம் 1,2 : விட்டுக்கொடுத்து போவது முக்கியம்
கும்ப ராசி நேயர்களே,
குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். புதிய முயற்சிகள் கைகூடும். பெற்றோர்கள் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளி நிறம்
அதிர்ஷ்ட கிழமை: சனி & புதன்
அதிர்ஷ்டமான திசை திசை : வடக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : யோக கணபதி
பரிகாரம் : சனிக்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது வாழ்வில் ஏற்றத்தைத் தரும்.
நட்சத்திர பலன்கள் :
அவிட்டம் 3,4 : உறவுகளுக்கு முக்கியதுவம் தர வேண்டும்
சதயம் : வெற்றியை கொண்டாடும் நாள்
பூரட்டாதி 1,2,3 : விருப்பங்கள் நிறைவேறும் நாள்
மீன ராசி நேயர்களே,
மனதிற்கு இதமான செய்தி ஒன்று வரும். சொந்த பந்தங்களால் நிறைய நன்மைகள் உண்டு. முக்கிய பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் புஷ்பராகம்
அதிர்ஷ்ட கிழமை: வியாழன் & திங்கள்
அதிர்ஷ்டமான திசை திசை : வடக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : தத்தாத்ரேயர்
பரிகாரம் : மகான்களின் ஜீவ சமாதிக்குச் சென்று வழிபாடு செய்வது சிறப்பு.
நட்சத்திர பலன்கள்:
பூரட்டாதி 4 : மகிழ்ச்சியான நாள்
உத்திரட்டாதி : நன்மைகள் கிடைக்கும் நாள்
ரேவதி: சவால் விடக்கூடிய பொறுப்புகள் வரும்
தமிழ் ராசி பலன் வாரந்தோறும் 01-06-2026 To 07-06-2026
மேஷ ராசி அன்பர்களே
மேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, நீண்ட நாள் கனவு விரைவில் நிறைவேறும். உங்களை சுற்றி இருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். வெளியிடங்களில் அனாவசிய பேச்சை குறைப்பது நன்மை தரும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. சில நேரங்களில் குடும்ப நபர்களின் செய்கைகள் கோபத்தை தூண்டுவதாக இருக்கும். எப்போதும் நிதானத்தை கடைபிடிப்பது வீண் பிரச்னை வராமல் தடுக்கும். குடும்ப விஷயங்களை பற்றி மற்றவர்களிடம் விவாதிக்காமல் இருப்பது சிறப்பு. வீடு மாற மாற வேண்டிய சூழல் இருக்கும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உடல் நலம் சீராகும். பழைய வாகனத்தை மாற்ற வேண்டிவரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
பரிகாரம் : குன்றத்தூர் முருகரை வணங்கி வழிபடவும்.
ரிஷப ராசி அன்பர்களே
ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, மனதில் தெளிவு நிலை உண்டாகும். அடுத்தவர்களுக்காக பரிந்து பேசுவது போது கூடுதல் கவனம் தேவை. குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். வெளியிடங்களில் வார்த்தைகளை குறைத்து பேசுவது நன்மையை தரும். தேக நலத்தில் கவனம் செலுத்தவும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். ஆடம்பர செலவுகளை குறைக்கவும். உடன்பிறப்பு வகையில் அனுகூலம் ஏற்படும். நட்பு வழியில் ஆதாயங்கள் உண்டு. கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். தெய்வ காரியங்களில் ஈடுபாடும் உண்டாகும். அண்டை வீட்டாரிடம் கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் இழந்த செல்வாக்கை திரும்ப பெற முடியும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
பரிகாரம் : ஸ்ரீ லஷ்மி நரசிம்மரை வணங்கி வழிபடவும்.
மிதுன ராசி அன்பர்களே
மிதுன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் திருப்திகரமான சூழல் அமையும். பொருளாதார நிலை சீராக இருக்கும். கடுமையான முயற்சியால் எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்ய முடியும். எதை விரும்பினாலும் அது கிடைக்க வழி தெரியும். குடும்பத்தில் அவ்வப்போது ஏதாவது சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். உங்களை சுற்றி நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். கணவன் மனைவி இருவரும் விட்டுக்கொடுத்து போவதின் மூலம் வரும் பிரச்சனைகளை தவிர்க்கலாம். இழுபறியாக இருந்த சில வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். குடும்ப தேவைக்காக அதிக நேரம் செலவிட நேரிடும். உத்தியோக மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
பரிகாரம் : மஹாவிஷ்ணுவை வணங்கி வழிபடவும்.
கடக ராசி அன்பர்களே
கடக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் சில கசப்பான விஷயங்களை சகித்து கொள்ள வேண்டியிருக்கும். வாக்கு சாமர்த்தியம் உண்டாகும். நீங்கள் செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டை பெற முடியும். குடும்பத்தில் புது பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். ஒரு சில காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். தேவையில்லாத செயல்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். காரிய தடை விலகும். வீடு, வாகனம் போன்ற விஷயங்களில் செலவுகளும் விரயங்களும் ஏற்படும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
பரிகாரம் : வராகியை வணங்கி வழிபடவும்.
சிம்ம ராசி அன்பர்களே
சிம்ம ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப சூழ்நிலை மன அமைதியை தரும். பல நாட்களாக எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாகும். குடும்ப நபர்களின் செயல்கள் நன்மை அளிக்கும். பொருளாதாரத்தில் நிலவிய பிரச்சனைகள் விலகும். வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள முடியும். குடும்பத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது. சுற்று வட்டாரத்தில் உங்கள் பேச்சுக்கும், செயலுக்கும் மரியாதை கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். தடைபட்ட காரியங்கள் தடையின்றி இனிதே நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
பரிகாரம் : தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்
கன்னி ராசி அன்பர்களே
கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற ஆரம்பிக்கும். மனதில் இருந்த சஞ்சலம் நீங்கும். எதிர்ப்புகள் அகலும். பயணங்கள் சாதகமான பலனை தரும். குடும்ப பிரச்னைகள் தீரும் பிரியமானவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெற்றோர்கள் சொல் கேட்டு நடக்கவும். குடும்பத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கும். உற்றார், உறவினர்கள் வருகையால் நன்மை உண்டாகும். முடிந்துபோன விஷயங்களை நினைத்து கவலைப்படுவதால் எந்த பயனும் இல்லை, இனி நடக்கவேண்டியதை செய்து முடியுங்கள் வெற்றி கிட்டும். நெருக்கடியான நேரத்தில் நண்பர்கள் கைகொடுப்பர். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பர். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
பரிகாரம் : கால பைரவரை வணங்கி வழிபடவும்.
துலாம் ராசி அன்பர்களே
துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப வருமானம் போதிய அளவு இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. முக்கிய வேலைகளை முடிப்பதில் தாமதம் ஏற்படும். உடல் ஆரோக்யம் மேம்படும்.குடும்பத்தில் மகிழ்ச்சிக்கும் குறை இருக்காது. புது வாகனம் வாங்கும் எண்ணம் வரும். பிரியமானவர்கள் உறுதுணையாக இருப்பர். குடும்ப ரகசியங்களை வெளியில் பகிர வேண்டாம். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்தல் அவசியம். கடன் வாங்கும் சூழ்நிலையை தவிர்க்கவும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்து காரியம் விரைவில் முடியும். உத்தியோகத்தில் நெருக்கடிகள் குறையும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்
பரிகாரம் : சுக்கிர பகவானை வணங்கி வழிபடவும்
விருச்சிக ராசி அன்பர்களே
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப பெருமையை உயர்த்த புது வழி கிடைக்கும். சமூக அந்தஸ்து வெகுவாக உயரும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதில் உற்சாகம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமும் மன நிம்மதியும் இருக்கும். பிரியமானவர்களின் வருகை உற்சாகம் தரும். மருத்துவ செலவுகள் அவ்வப்போது வந்து போகும். உடன்பிறப்பு வகையில் சில பிரச்சனைகள் வரும். யாரிடமும் வீண் வாக்கு வாதம் செய்ய வேண்டாம். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். குடும்பத்தில் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். வழக்கு விவகாரங்களை தள்ளிப்போடுவது நன்மை தரும். எந்த ஒரு பிரச்னையானாலும் சுமூகமாக கையாளவும். உத்தியோகத்தில் அதிகாரிகள் ஆதரிப்பர். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
பரிகாரம் : சாஸ்தாவை வணங்கி வழிபடவும்.
தனுசு ராசி அன்பர்களே
தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் விவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். வரவுக்கு மீறிய செலவுகளால் பணப் பற்றாக்குறை ஏற்படுகிறது. உடல் நலத்தில் அக்கறை கொள்ளவும். யாரையும் சார்ந்து இருக்க வேண்டாம். எத்தனை இடையூறுகள் வந்தாலும் புத்திசாலித்தனத்தால் அதை எதிர்த்து போராட முடியும். கணவன் மனைவிக்கிடையே பனிப்போர் ஏற்படும். தேவையில்லாத விஷயங்களுக்கு கவலைப்படுவதால் மன சஞ்சலம் ஏற்படும். தெய்வ அனுகூலம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்ப்புகள் அடங்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
பரிகாரம் : நவக்கிரகத்தை தினமும் 9 முறை வளம் வரவும்
மகர ராசி அன்பர்களே
மகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் ஏற்படும். புது நபர்களின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். பணம் தொடர்பாக வாக்குறுதிகள் தர வேண்டாம். எந்த ஒரு சிக்கலையும் எளிதாக சமாளிக்க முடியும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். உடல் நலமும், மன நலமும் சீராக இருக்கும். கடன் வாங்கும் சூழல் தற்சமயம் ஏற்படாது. கணவன், மனைவிக்கிடையே சுமூகமான உறவு காணப்படும். பெற்றோர்கள் வழியில் நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். ஆன்மிக ஈடுபாடு வரும். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் ஏற்படும். தொழில், வியாபாரம் பெரியளவில் பேசப்படும்.
பரிகாரம் : விநாயகரை அருகம்புல் வைத்து வழிபடவும்
கும்ப ராசி அன்பர்களே
கும்ப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, மற்றவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டியிருக்கும். பொது காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு வரும். குடும்பத்தில் உங்கள கருத்துக்கு ஆதரவு பெருகும். எதிர்பார்த்த இடத்திலிருந்த்து நல்ல செய்தி வரும். பெரியோர்களின் ஆலோசனை கைகொடுக்கும். பிரபலங்களின் அறிமுகம் ஆதாயத்தை தரும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். தொடர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். புது வீடு, வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வாகனத்தில் செல்லும் போது மித வேகம் பின்பற்றவும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரம் சீரான முறையில் இருக்கும்.
பரிகாரம் : ஆஞ்சநேயரை துளசி மாலையிட்டு வழிபடவும்.
மீன ராசி அன்பர்களே
மீன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தின் பேராதரவை பெற முடியும். மனதில் துணிச்சல், தன்னம்பிக்கை அதிகரிக்கும். பொருளாதார நிலை திருப்தியளிக்கும். வேண்டியவர்கள் மூலமாக நடக்க வேண்டிய காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். எதிரிகளின் பலம் அறிந்து செயல்படவும். கணவன் மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். நண்பர்கள் சிலர் விரோதமாக செயல்பட வாய்ப்புண்டு. எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். உத்தியோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
பரிகாரம் : குரு பகவானை வணங்கி வழிப்படவும்
ஜூன் மாத ராசி பலன்கள் 2026
| ஜூன் மாத ராசி பலன்கள் 2026 |
| ஜூன் மாத ராசி பலன்கள் – (2026) (பராபவ வருடம் வைகாசி மாதம் 18ம் தேதி முதல் ஆனி மாதம் 16ம் தேதி வரை ) வாக்கிய பஞ்சாங்கப்படி 01-06-2026 முதல் 30-06-2026 வரை பலன்கள் கணித்து எழுதப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு ராசிக்கும் தனித் தனியே கிரக நிலையின் அடிப்படையில் எழுதப்பட்ட பொது பலன்கள் ஆகும். மேலும் அவரவர் ஜாதகத்தில் நடக்கும் நடப்பு திசை, புத்தி சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு பலன்கள் சற்று மாறுபடக்கூடும். இருப்பினும் ஒவ்வொருவரும் தெய்வ அனுகூலங்களை கூட்டுவதின் மூலமாக தனக்கு வரும் கெடுபலன்களை குறைத்து நல்ல பலன்களை அனுபவிக்க முடியும். கிரக நிலை மாற்றம் 08-06-2026 – கடக சுக்கிரன் 15-06-2026 – மிதுன சூரியன் 20-06-2026 – ரிஷப செவ்வாய் 22-06-2026 – கடக புதன் ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் ஆலந்தூர் ஜோதிடர் A.வினோத் குமார் P.hd Astrology (அலைபேசி: 09003019831) |
மேஷ ராசி அன்பர்களே
அஸ்வினி 1, 2, 3, 4 பாதம், பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1ம் பாதம் முடிய)
மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களுக்கு ஏற்ற இறக்கமாகவே உள்ளது. உங்கள் பேச்சில் நிதானமும், செய்யும் செயல்களில் கவனமும் தேவை. பணவரவு சுமாராக இருக்கும். புதிய முயற்சிகள் சாதகமான பலனை தரும். எதையும் திட்டமிட்டு செய்தால் வெற்றி நிச்சயம். அடுத்தவர்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. உங்கள் விருப்பத்திற்கு மாறாக ஒரு சில காரியங்கள் நடக்கலாம் குல தெய்வ வழிபாடுகளை தவறாமல் மேற்கொள்ளவும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். கொடுக்கல், வாங்கலில் மிகுந்த கவனம் தேவை. உங்கள் காரிய வெற்றிக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். கடன் தொல்லைகள் சில நேரங்களில் மனதை பாதிக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடும் கவனமும் தேவை. சுப காரியங்கள் கைகூடும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்க முடியும். குடும்பத்துடன் கலந்து ஆலோசிப்பது எல்லா விஷயத்திற்கும் நல்லது. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரம் தொடர்பாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.
சந்திராஷ்டமம் : 1,26,27,28,29 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
ரிஷப ராசி அன்பர்களே
(கார்த்திகை 2, 3, 4, ரோகினி 1, 2, 3, 4, மிருகசீரிஷம் 1, 2 பாதங்கள் முடிய)
ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் எந்த சூழ்நிலையிலும் நிதானமாக முடிவு எடுப்பது நல்லதும். தினமும் தியானம் செய்வது மனதிற்கும், உடலுக்கும் நல்லது. மனதில் புதிய உற்சாகமும் தைரியமும் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த காரியங்களை கூட எளிதில் முடிக்க முடியும். குடும்பத்தில் பொருள் விரயங்கள் ஏற்பட்டாலும் அது சுப விரயங்களாகவே இருக்கும். தடைபட்ட காரியங்கள் கூட மாறி கை கொடுக்கும். நண்பர்கள் ஒத்துழைப்பு கிடைத்து சுகமும் நிம்மதியும் கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழல் நிலவும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மன கசப்பு மாறும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். திட்டமிடாத பயணங்களை மேற்கொள்ள வேண்டிவரும். வழக்கில் இருந்த இழுபறி நிலை நீடிக்கும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். உத்யோகத்தில் இட மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் இருக்கும்.
சந்திராஷ்டமம் : 1,2,3,4 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
மிதுன ராசி அன்பர்களே
(மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை 1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 முடிய)
மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களுக்கு எல்லா வகையிலும் அனுகூலமாகவே உள்ளது. பல சிக்கலான விஷயங்களை கூட சாதுர்யமாக பேசி முடிக்க முடியும். பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும். உங்களை சுற்றி இருப்பவர்கள் மத்தியில் மதிப்பு உயரும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பர். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பெற்றோர்களின் ஆலோசனை முக்கியமான நேரத்தில் கிடைக்கும். வெளியிடத்தில் கடன் வாங்கி அனாவசியமாக செலவு செய்ய வேண்டாம். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். உடல் நிலை பொறுத்தவரை சின்ன சின்ன பாதிப்புகள் வரலாம். தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் ஏற்படும். பயணத்தில் மூலம் நல்ல லாபம் உண்டாகும். குடும்பத்தில் புது நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
சந்திராஷ்டமம் : 4,5,6 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கடக ராசி அன்பர்களே
(புனர்பூசம் 4ம் பாதம் முடிய, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 பாதங்கள் முடிய)
கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் பல நல்லதும், கெட்டதும் கலந்தே நடக்கும். உங்களது செயல்களில் வேகமும், விவேகமும் இருக்கும். பண வரவு அவ்வப்போது இருக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். உடன்பிறப்பிடம் சுமூகமான உறவு இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுவும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். குடியிருக்கும் வீட்டை சீரமைக்க வேண்டிவரும். கொடுக்கல், வாங்கலில் சிக்கல்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். பெற்றோர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் எந்த குறையும் இல்லாமல் இருக்கும். கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும். உங்கள் மேல் சுமத்தப்பட்ட வீண் பழி நீங்கும். உத்யோகத்தில் வேலை பளு அதிகரிக்கும், தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
சந்திராஷ்டமம் : 6,7,8,9 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
சிம்ம ராசி அன்பர்களே
(மகம் 1, 2, 3, 4, பாதங்கள், பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1ம் பாதம் முடிய )
சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துகொள்ளவும். தேக நலனில் அக்கறைகொள்ளவும். வர வேண்டிய பண கூட சற்று தாமதித்து பின் கைக்கு வரும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் நிறைய மாற்றங்களை சந்திக்க வேண்டிவரும். மனதில் தன்னம்பிக்கை தைரியம் திகரிக்கும். பொருளாதார சிக்கல்களை திறமையாக சமாளிக்க முடியும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சியான போக்கு நீடிக்கும். உடல் நலம் சீர்பெறும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பெண்களால் சில பிரச்சனைகள் வரும். உங்களுக்கு எதிராக வரும் எதிர்ப்புகள் முற்றிலும் நீங்கும். வெளியில் கடனாக கொடுத்த பணம் கைக்கு திரும்ப வரும். குடும்பத்தில் திட்டமிடாத செலவுகள் வரும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில், வியாபாரம் திருப்தி தரும். உத்யோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.
சந்திராஷ்டமம் : 9,10,11 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கன்னி ராசி அன்பர்களே
(உத்திரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம் 1, 2, 3, 4, சித்திரை 1, 2 பாதங்கள் முடிய )
கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் எந்த காரியத்தை செய்தாலும் பல முறை யோசித்து செய்வது உத்தமம். குடும்பத்தில் ஆதரவு பெருகும். தள்ளி போன காரியங்கள் விரைவில் முடியும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புது நட்பு வட்டாரம் உருவாகும். சொந்த பந்தங்களிடே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். அடுத்தவர் பிரச்னையில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் அதை மனஉறுதியடன் போராடி வெற்றி பெற முடியும். உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்களிடம் ஆலோசனை கேட்பது பல வகையில் உதவியாக இருக்கும். சிறு உடல் உபாதைகள் வந்து போகும். மனக்குழப்பம் தோன்றி மறையும். பெரிய மனிர்தர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்யோக பணியில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் கடுமையான போட்டி இருக்கும்.
சந்திராஷ்டமம் : 11,12,13 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
துலாம் ராசி அன்பர்களே
(சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 முடிய )
துலாம் ராசி அன்பர்களே, இந்த மாதம் பல திருப்பு முனையான விஷயங்கள் நடக்கும். குடும்பத்தில் தொலைத்து போன சந்தோஷம் மீண்டும் வரும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். வராது என்று நினைத்த பொருள் கைக்கு வரும். ஒரு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படும். அக்கம் பக்கம் உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதம் ஏற்படும். உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு ஏற்படலாம். உங்கள் பிடிவாத குணத்தை விட்டு விடுவது எல்லா வகையிலும் நல்லது. குடும்பத்தில் எல்லாரிடமும் மற்றவர்களிடம் முக்கிய விஷயத்தில் அனுசரித்து செல்வது நல்லது. பணம் தொடர்பான விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்கவும். பேச்சில் நிதானம் அவசியம் தேவை. புதிய வீடு வாங்கும் முயற்சிகள் தாமதம் ஆகும். ஆன்மிக எண்ணம் மேலோங்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு பின் சீராகும். சொந்த பந்தங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
சந்திராஷ்டமம் : 13,14,15 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
விருச்சிக ராசி அன்பர்களே
(விசாகம் 4ம் பாதம் முடிய, பனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 பாதங்கள் முடிய )
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் பல சிக்கல்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் தானாகவே வரும். குடும்பத்தில் பல அவசர முடிவுகளால் பிரச்சனைகள் கொடுக்கும் சூழ்நிலைகள் ஏற்படலாம். வீட்டை புதிப்பிக்கவோ, வீடு மாற்றி செல்லவோ வாய்ப்பு வரும். பல பிரச்சனைக்கு நடுவே பணம் கைக்கு வந்து சேரும். குடும்ப பொறுப்புகள் அதிகமாகும். வரவுக்கு மீறிய செலவுகள் இருந்து கொண்டே இருக்கும். மனதில் உள்ள குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு கட்டுப்பாடு அவசியம். வீடு, வாகனங்களுக்கான செலவு அதிகரிக்கும். குடும்பத்துடன் பயணிக்க விருப்பம் ஏற்படும். நீங்கள் எதிர்பார்க்கற இடங்களிலிருந்து நல்ல செய்திகள், மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேருவதற்கான வாய்ப்பிருக்கிறது. கடன் வாங்கும் என்னத்தை கை விடுவது நல்லது. உடல் நலம் தொடர்பாக மருத்துவ செலவு ஏற்படலாம். திட்டமிட்ட பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் சாதகமான சூழல் நிலவும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
சந்திராஷ்டமம் : 15,16,17 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
தனுசு ராசி அன்பர்களே
(மூலம் 1, 2, 3, 4 பாதம், பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1ம் பாதம் முடிய )
தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் தொடக்கத்தில் மனக்குழப்பத்துடன் காணப்பட்டாலும், பிற்பாதியில் நல்ல திருப்பம் உண்டாகும். மனதில் உள்ளதை ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக பேசுவது நல்லது. பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். குடும்பத்தில் ஏற்படும் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் நாளடைவில் சீராகும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். புதிய முயற்சிகளை இப்போதைக்கு தள்ளி போடவும். வண்டி, வாகனம் வாங்கும் எண்ணத்தை சிறிது காலம் தள்ளி வைக்கவும். தொலைதூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.பணம் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். தியானத்தால் மன நிம்மதி ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிரமம் இருக்கும். குடும்பத்தில் வரவை விட செலவுகள் அதிகரிக்கும். எங்கும், எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்யோகத்தில் அமைதி நிலவும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
சந்திராஷ்டமம் : 17,18,19 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
மகர ராசி அன்பர்களே
(உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 பாதங்கள் முடிய)
மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த காரியம் விரைவில் முடியும். எதிர்பாராத பொருளாதார சிக்கல் ஏற்பட்டு விலகும். குடும்பத்தில் வரவுகளும், செலவுகளும் சரிசமமாக இருக்கும். உங்களிடம் புத்திசாலித்தனம் அதிகமாக இருக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய வண்டி வாகன சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே மன வருத்தம் ஏற்படலாம். ஒரு காரியம் செய்யும் முன் தீர யோசித்து செய்வது நல்லது. யாருக்காகவும், எப்போதும் ஜாமீன் கையெழுத்து போட்டு பிரச்சனையில் மாட்டிக்கொள்ள வேண்டாம். பொதுப்பிரச்சனைகளை எதிர்கொள்வதில் அதிக கவனம் தேவைப்படும். எதிர்பாராத சில செலவுகளால் வெளியில் கடன் வாங்கி செலவு வேண்டிய சூழ்நிலை உருவாகும். பாலிய நண்பர்களின் நிறைய ஆலோசனை கிடைக்கும். முக்கிய காரியங்களை நீங்களே செய்து முடிப்பது நல்லது. வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். குடும்பத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது. உத்யோகத்தில் மனநிறைவு ஏற்படும்.புதிய தொழில் யோகம் அமையும்.
சந்திராஷ்டமம் : 19,20,21 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கும்ப ராசி அன்பர்களே
(அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் முடிய )
கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தில் பல சௌபாக்கியங்களை பெற முடியும். மனதில் புத்துணர்ச்சியும். தெம்பும் பிறக்கும். சற்றும் எதிர்பாராத பணவரவும், அதிர்ஷ்டங்களும் வந்து சேரும். புத்தி சாதூர்யத்தால் எதையும் சாதிக்க முடியும். எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதை துணிச்சலுடன் எதிர்கொள்ளும் சாமர்த்தியம் பிறக்கும். வீட்டில் புது பொருள் சேர்க்கை உண்டாகும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். பிரியமானவர்கள் வழியில் ஏதாவது மனகசப்பு ஏற்பட்டு மறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. யாருக்கும் எந்த உத்திரவாதமும் கொடுக்க வேண்டாம். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். புதிய வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டு. கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் உயர் பதவிகள் தேடி வரும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும்.
சந்திராஷ்டமம் : 21,22,23,24 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
மீன ராசி அன்பர்களே
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 பாதங்கள் முடிய )
மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்கள் விருப்பத்தினை நிறைவேற்ற நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். முயற்சி செய்யும் எல்ல காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பணவரவை பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இருக்காது. எதிர்ப்புகளை சமாளிக்கும் மனவலிமை உருவாகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கும். பிரபலங்களின் அறிமுகமும் அவர்களால் நிறைய ஆதாயமும் உண்டு. தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் வரும். எதிரிகளின் பலம் குறையும். குடும்பத்தில் இதமான சூழல் நிலவும். கடன் பிரச்சனைகள் தீரும். பெற்றோர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். உங்களை சுற்றி இருப்பவர்களை அனுசரித்து போவது நல்லது. கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். அடுத்தவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடா வேண்டாம். குடும்ப பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். உத்யோகத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
சந்திராஷ்டமம் : 24,25,26 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்