யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு யாழ். பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்றது.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மாணவர்களின் கற்றலுக்கு நிதி ஆதாரத்தினை வழங்கும் நோக்கில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பரிசிலை உத்தியோகபூர்வமாக வழங்கிவைத்தார்.

அதன் போது, முதலாம் வருடத்தில் கல்வி கற்கும் அனைத்து பீடங்களையும் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 100 மாணவர்களுக்கான புலமைப்பரிசிலினை வழங்கிவைத்தார்.

மாதந்தோறும் 8 ஆயிரம் ரூபா வீதம் அவர்களின் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் நிறைவடையும்வரை இத்தொகை வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக பதில் துணை வேந்தரும். கலைப்பீட பீடாபதியுமான நாகமுத்து பிரதீபராஜா யாழ். இந்நிய  துணை தூதுவர் சாய் முரளி, விரிவுரையாளர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related posts

இந்திய முதல்வர்களின் சொத்து வெளிப்படுத்தல் பட்டியல் வெளியீடு; தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் மூன்றாவது இடத்தில்!

பொருளாதாரத்தைப் பாதிக்காத வகையில் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. – சிலோன் பெட்ரோலியம் கூட்டுத்தாபனம்

கொழும்பு, கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோணியர் ஆலயத் திருவிழா, நேற்று கொடியேற்றும் விழாவுடன் தொடங்கியது!