ஈழத்தாரகை – 2026 | Eelath Thaaragai Season-01

நடனப்போட்டி நிகழ்வுக்கான விதிமுறைகள்:

ஈழத்தாரகை – 2026
Eelath Thaaragai Season-01

ஈழத்தாரகை
*தமிழர் கலைபண்பாட்டுப் பாசறை – பிரித்தானியா அமைப்பினரால் நடாத்தப்படும் மாபெரும் நடனப்போட்டி நிகழ்ச்சியாகும்.

*தமிழர்கள் மட்டுமே ஈழத்தாரகை நடனப்போட்டியில் பங்குபற்ற முடியும்.

*தமிழீழத் தாயகப் பாடல்களுக்கு மட்டுமே போட்டியாளர்கள் நடனமாட முடியும்.

*போட்டிகள் அனைத்தும் வரையறைக்கு உட்பட்டது.


ஈழத்தாரகை நடனப்போட்டியில் கலந்துகொள்ளும் (தனி நடனம் / குழு நடனம்) போட்டியாளர்களின் வயதுப் பிரிவுகள் மற்றும் நிலைகள்:

*06 வயதிலிருந்து 12 வயதிற்கு உட்பட்டோர்.

(01.09.2014 -31.08.2020)
விண்ணொளி தனிப்பிரிவு
விண்ணொளி குழுப்பிரிவு

*13 வயதிலிருந்து 17 வயதிற்கு உட்பட்டோர்.

(01.09.2008-31.08.2014)
நிலவொளி தனிப்பிரிவு
நிலவொளி குழுப்பிரிவு

*18 வயதிலிருந்து 25 வயதிற்கு உட்பட்டோர்.

(01.09.2001-31.08.2008)
கதிரொளி தனிப்பிரிவு
கதிரொளி குழுப்பிரிவு

போட்டி விதிமுறைகள்:

*ஒவ்வொரு நடன நிகழ்சிகளும் 5 நிமிடத்திற்குக் குறையாமலும், 8 நிமிடத்திற்கு அதிகமாகாமலும் இருத்தல் வேண்டும்.

*ஒவ்வொரு குழு நடனங்களிலும் குறைந்த பட்சம் 4 போட்டியாளர்களும், அதிக பட்சம் 8 போட்டியாளர்களும் பங்குபற்ற வேண்டும்.

*நிகழ்ச்சி நிரல் ஒழுங்கின்படி அடுத்தடுத்த போட்டியாளர்கள் மேடையருகில் தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.

*குறிப்பு: மாவீரர் துயிலும் இல்லப் பாடல், மற்றும் தமிழீழத் தேசியக்கொடிப் பாடல் இரண்டும் போட்டி நிகழ்வில் பயன்படுத்தக்கூடாது.

அனைத்துப் போட்டிகளும் விதிமுறைகளுக்கு உட்பட்டவை, நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. விதிமுறைகளை கடைப்பிடிக்க தவறும் போட்டியாளர்கள் நடுவர்களால் தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள்.

நடனப் பிரிவுகள் மற்றும் கட்டணம்:

*பதிவுக்கட்டணமாக, குழு நடனத்தில் பங்பெறும் ஒவ்வொருவரும் £10.00 பதிவுக் கட்டணமாகச் செலுத்துதல் வேண்டும்.

*தனி நடனப் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் £25.00 பதிவுக் கட்டணமாகச் செலுத்துதல் வேண்டும்.

கட்டணம் செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கிலக்கம்:

MONZO BANK
Name: MR BALATHARMAKUMAR SELVARATHINAM
Sort Code: 04-00-04
Account No: 7489 0162
Ref: (Applicant Name)

சுட்டெண்:
*ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுக்கு வழங்கப்படும் சுட்டெண்ணை (Index Number) பார்வைக்கு தெரியும்படி போட்டியின் போது அணிந்திருத்தல் வேண்டும்.

*உங்கள் ஆசிரியர் பெயர்கள் எந்த இடத்திலும் பயன்படுத்தக் கூடாது. தங்களுக்கு வழங்கப்பட்ட சுட்டெண்களை மட்டுமே பயன்படுத்துதல் வேண்டும்.


முதலாம் சுற்று: (தேர்வு)
செப்டெம்பர் மாதம் – SEPTEMBER 2026
காலை 10 முதல் மாலை 5 மணிவரை நடைபெறும்.
தனி நடனம்: ஒவ்வொரு வயதுப் பிரிவில் இருந்தும் 8 போட்டியாளர்களும்,
குழு நடனம்: ஒவ்வொரு வயதுப் பிரிவில் இருந்தும் 8 குழு போட்டியாளர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்.
(இவர்கள் இரண்டாம் சுற்றுக்குத் தகுதிபெறுவார்கள்.)

(தேர்வு நடைபெறும் இடம் மற்றும் நாள் பின்னர் அறியத்தரப்படும்)


இரண்டாம் சுற்று: (தெரிவு)
ஒக்டோபர் மாதம் – OCTOBER 2026
காலை 10 முதல் மாலை 5 மணிவரை நடைபெறும்.
தனி நடனம்: ஒவ்வொரு வயதுப் பிரிவில் இருந்தும் 4 போட்டியாளர்களும்,
குழு நடனம்: ஒவ்வொரு வயதுப் பிரிவில் இருந்தும் 4 குழு போட்டியாளர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்.
(இவர்கள் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறுவார்கள்.)

(தெரிவு நடைபெறும் இடம் மற்றும் நாள் பின்னர் அறியத்தரப்படும்)


இறுதிச்சுற்று:
31 ஒக்டோபர் மாதம் – 31 OCTOBER 2026
காலை 10 மணிக்கு பிரமாண்டமாக ஆரம்பமாகும்.
தனிநபர் மற்றும் குழு நடனத்தில் முதலாம் இடத்தைப்பெறும் போட்டியாளர்கள் இவ்வாண்டிற்கான “ஈழத்தாரகை” எனும் அதியுயர் விருதைப் பெறுவார்கள்.

இறுதிப்போட்டியில் பங்குபற்றிய போட்டியாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கி மதிப்பளிக்கப்படும்.

(இடம் பின்னர் அறியத்தரப்படும்)

குறிப்பு: நடனப்போட்டியில் பங்குபற்றும் அனைத்துப் போட்டியாளர்களும் தங்களின் அடையாள அட்டையை முதல்சுற்றுப் போட்டியின் போது அவசியம் கொண்டுவர வேண்டும்.

விண்ணப்ப முடிவுத் திகதி/Application Deadline:
15/09/2026

மேலதிகத் தகவல்களுக்கு:
eelaththaaragai@gmail.com
0736 656 0598 | 0782 758 1499 | 0779 451 6514

நன்றி

தமிழர் கலைபண்பாட்டுப் பாசறை
பிரித்தானியா

Related posts

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் சங்கீதன்’க்கு இன்னும் “தடுப்புக்காவல் உத்தரவு” பிறப்பிக்கப்படவில்லை.

உரிமைக்காக ஒரு எழுச்சிப்பயணம் – எழு தமிழா உரிமைக்காக நீ எழு தமிழா

இது பாசிசமா ? பாயசமா ப்ரோ ? | உடைத்து பேசிய மாரிதாசின் கைது பின்னணி என்ன ?