| தமிழ் நாட்காட்டி ஜூன் 2026 | |
|---|---|
| அமாவாசை | 14-ஜூன்-2026 ஞாயிறு |
| பௌர்ணமி | 29-ஜூன்-2026 திங்கட்கிழமை |
| கார்த்திகை | 13-ஜூன்-2026 சனிக்கிழமை |
| சஷ்டி விரதம் | 20-ஜூன்-2026 சனிக்கிழமை |
| சங்கடஹர சதுர்த்தி | 04-ஜூன்-2026 வியாழன் |
| சதுர்த்தி | 18-ஜூன்-2026 வியாழன் |
| பிரதோஷம் | 12-ஜூன்-2026 வெள்ளிக்கிழமை 27-ஜூன்-2026 சனிக்கிழமை |
| திருவோணம் | 05-ஜூன்-2026 வெள்ளிக்கிழமை |
| மாத சிவராத்திரி | 13-ஜூன்-2026 சனிக்கிழமை |
| ஏகாதசி | 11-ஜூன்-2026 வியாழன் 25-ஜூன்-2026 வியாழன் |
| அஷ்டமி | 08-ஜூன்-2026 திங்கட்கிழமை 22-ஜூன்-2026 திங்கட்கிழமை |
| நவமி | 09-ஜூன்-2026 செவ்வாய்கிழமை 23-ஜூன்-2026 செவ்வாய் |
| அரசு விடுமுறை நாட்கள் | 26-ஜூன்-2026 வெள்ளிக்கிழமை மொஹரம் பண்டிகை |
| திருமண நாட்கள் | 04-ஜூன்-2026 வியாழன் தேய்பிறை 07-ஜூன்-2026 ஞாயிறு தேய்பிறை 17-ஜூன்-2026 புதன்கிழமை வளர்பிறை 18-ஜூன்-2026 வியாழன் வளர்பிறை 24-ஜூன்-2026 புதன்கிழமை வளர்பிறை 25-ஜூன்-2026 வியாழன் வளர்பிறை |
| திருவிழாக்கள் | 22-ஜூன்-2026 திங்கட்கிழமை ஆனி உத்திர தரிசனம் 26-ஜூன்-2026 வெள்ளிக்கிழமை மொஹரம் |
இன்றைய ராசி பலன் 22 ஜூன் 2026 திங்கட்கிழமை
மேஷ ராசி – அக்கம் பக்கத்தினருடன் நல்லுறவை மேம்படுத்த முடியும். பிரியமானவர்கள் வழியில் ஆதாயம் உண்டு. முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
அதிர்ஷ்ட குறியீடுகள் :
அதிர்ஷ்ட எண் : 1 & 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய் & ஞாயிறு
ஏற்றமான திசைகள் : கிழக்கு, வடக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான்
பரிகாரம் : செவ்வாய்க்கிழமை விரதங்களை மேற்கொள்வது நல்லது
நட்சத்திர பலன்கள்
அசுவினி : சுற்றத்தாரின் ஆதரவு பெருகும்
பரணி : ஆதாயம் கிடைக்கும் நாள்
கிருத்திகை 1 : உடல் நலனில் கவனம் தேவை
ரிஷப ராசி – கொடுத்த சொல்லைக் காப்பாற்ற இயலும். கொடுக்கல், வாங்கலில் விழிப்புணர்வு தேவை. கணவன் மனைவிடையே பனிப்போர் வரும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 5 & 6
அதிர்ஷ்ட நிறம் : மண் நிறம்
அதிர்ஷ்ட கிழமைகள் : வெள்ளி & புதன்
ஏற்றமான திசைகள் : மேற்கு, தெற்கு
வணங்க வேண்டிய தெய்வம் : மகாலட்சுமி
பரிகாரம் : குல தெய்வத்தை முறையாக வணங்கி வழிப்படவும்
நட்சத்திர பலன்கள்
கிருத்திகை 2,3,4 : வாக்குறுதியை காப்பாற்ற முடியும்
ரோகிணி : பண விஷயத்தில் கவனம் தேவை
மிருகசீரிடம் 1,2 : தம்பதியற்குள் பனிப்போர் ஏற்படும்
மிதுன ராசி – திட்டமிட்ட வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்தவும். ஞாபக மறதி தொந்தரவு இருக்கும். கடன் தொல்லைகள் ஓரளவு குறையும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 5 & 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
அதிர்ஷ்ட கிழமைகள் : புதன் & வெள்ளி.
ஏற்றமான திசைகள் : வடக்கு, மேற்கு
வணங்க வேண்டிய தெய்வம் : அன்னை மீனாட்சி
பரிகாரம் : புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடைகள் பயன்படுத்துவது அதிர்ஷ்டத்தைத் தரும்.
நட்சத்திர பலன்கள்
மிருகசீரிடம் 3,4 : காரியத்தில் எப்போதும் கவனமாக இருக்கவும்
திருவாதிரை : அடிக்கடி ஞாபக மறதி வரும்
புனர்பூசம் 1,2,3 : கடன் நெருக்கடிகள் குறையும்
கடக ராசி – கடக ராசி :
மன சங்கடங்கள் நீங்கி தெளிவான சிந்தனை பிறக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 2 &7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளி நிறம்
அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள் & வியாழன்
ஏற்றமான திசைகள் : வடக்கு, கிழக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : சந்திரசேகரர் (சிவபெருமான்)
பரிகாரம் : பௌர்ணமி தினங்களில் ஏழைகளுக்கு அரிசி தானம் செய்வது துரதிர்ஷ்டங்களைப் போக்கும்.
நட்சத்திர பலன்கள்
புனர்பூசம் 4 : மனதில் தெளிவு நிலை உண்டாகும்
பூசம் : பிரபலங்கள் அறிமுகமாவர்
ஆயில்யம் : தம்பதியற்குள் அன்யோன்யம் ஏற்படும்
சிம்ம ராசி – குடும்ப வரவு, செலவு கட்டுப்பாட்டில் வைக்க முடியும். உடல் நலம் பலம் பெரும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். உத்தியோகத்தில் உயர்வு நிலை உண்டு.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 1 & 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் ஆரஞ்சு
அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு & செவ்வாய்
ஏற்றமான திசைகள்: கிழக்கு, தெற்கு
வணங்க வேண்டிய தெய்வம் : ஸ்ரீ நரசிம்மர் பரிகாரம் : ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானை வணங்குவது அதிக நன்மையை தரும்.
நட்சத்திர பலன்கள்
மகம் : பண விஷயத்தில் கறாராக இருக்கவும்
பூரம் : தேகம் பலம் பெரும்
உத்திரம் 1 : ஜாமின் கையெழுத்தை தவிர்க்கவும்
கன்னி ராசி – கன்னி ராசி :
குடும்பத்தில் பல நன்மைகள் நடக்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். இழுபறியில் இருந்த பிரச்சனைக்கு தீர்வு வரும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 5 & 6
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
அதிர்ஷ்ட கிழமைகள் : புதன் & வெள்ளி
ஏற்றமான திசைகள் : வடக்கு, தெற்கு
வணங்க வேண்டிய தெய்வம் : ஸ்ரீமன் நாராயணன்
பரிகாரம் : பறவைகளுக்குத் தினமும் ஊறவைத்த பச்சைப் பயறு தானமாக வழங்கலாம்.
நட்சத்திர பலன்கள்
உத்திரம் 2,3,4 : பல நன்மைகள் கிடைக்கும் நாள்
அஸ்தம் : வீண் செலவுகள் நிறைய வரும்
சித்திரை1,2 : இழுபறியில் இருந்த வேலைகள் முடிவடையும்
துலாம் ராசி – துலாம் ராசி :
குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். பொது விஷயங்களில் தலையிடுவது தவிர்த்தல் நல்லது. நெடுந்தூர பயணங்களை தவிர்க்க பார்க்கவும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 6 & 8
அதிர்ஷ்ட நிறம் : லாவெண்டர்
அதிர்ஷ்ட கிழமைகள் : வெள்ளி & புதன்
ஏற்றமான திசைகள் : மேற்கு, தெற்கு
வணங்க வேண்டிய தெய்வம் : ஸ்ரீ ரங்கநாதர்
பரிகாரம் : ஏழைப் பெண்களுக்கு வெள்ளை நிற ஆடைகளை தானம் செய்வது நன்மை தரும்.
நட்சத்திர பலன்கள்
சித்திரை 3,4 : திருப்திகரமான சூழல் அமையும்
ஸ்வாதி : சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம்
விசாகம் 1,2,3 : தூர பயணங்களை தவிர்க்கவும்
விருச்சிக ராசி – குடும்பத்தில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு விலகும். தேவையற்ற மனபயத்தை குறைக்கவும். நண்பர்கள் நல்ல ஒத்துழைப்பை தருவர். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 3 & 9
அதிர்ஷ்ட நிறம் : கருப்பு
அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய் & ஞாயிறு
ஏற்றமான திசைகள் : வடக்கு, கிழக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : சண்முகர் (முருகன்)
பரிகாரம் : மன அமைதி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு, பசுவின் பால், தயிர், சர்க்கரை தானம் செய்வது நற்பலனைத் தரும்
நட்சத்திர பலன்கள்
விசாகம் 4 : நிதி நிலைமை சீர் பெரும்
அனுஷம் : மனபயத்தை போக்கவும்
கேட்டை : நண்பர்கள் ஆதரவு பெருகும்
தனுசு ராசி – குடும்ப சிக்கல்கள் குறைய தொடங்கும். பண தேவைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும். பிரியமானவர்களால் நன்மை வந்து சேரும். உத்யோகத்தில் பொறுமையை கடைப்பிடிக்கவும்.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 3 & 8
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
அதிர்ஷ்ட கிழமைகள் : வியாழன் & செவ்வாய்
ஏற்றமான திசைகள் : கிழக்கு, வடக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : தட்சிணாமூர்த்தி
பரிகாரம் : வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடவும்
நட்சத்திர பலன்கள்
மூலம் : நாள்பட்ட சிக்கல்கள் குறைய ஆரம்பிக்கும்
பூராடம் : பண தேவை அதிகம் இருக்கும்
உத்திராடம் 1 : எதிர்பார்த்த நன்மைகள் வந்து சேரும்
மகரம் ராசி – எதிர்கால திட்டங்கள் கைகூடி வரும். பிறருக்கு வாக்கு கொடுப்பதை தவிர்த்தல் நல்லது. பெற்றோர்கள் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 6 & 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட கிழமைகள் : சனி & வெள்ளி
ஏற்றமான திசைகள் : தெற்கு, மேற்கு
வணங்க வேண்டிய தெய்வம் : காலபைரவர்
பரிகாரம் : நவகிரங்களை தினமும் 9 முறை வலம் வந்து வழிபடுவது சிறப்பு
நட்சத்திர பலன்கள்
உத்திராடம் 2,3,4 : புது திட்டங்கள் கைகூடும்
திருவோணம் : யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம்
அவிட்டம் 1,2 : ஆதரவு பெருகும் நாள்
கும்ப ராசி – குடும்ப நபர்களின் அன்பும், ஆதரவும் கிட்டும். எல்லாவகையிலும் நன்மையும் மன அமைதியும் உண்டாகும். புது முயற்சிகளை தள்ளி வைக்கவும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 4 & 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளி நிறம்
அதிர்ஷ்ட கிழமைகள் : சனி & புதன்
ஏற்றமான திசைகள் : மேற்கு, கிழக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : யோக கணபதி
பரிகாரம் : சனிக்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது வாழ்வில் ஏற்றத்தைத் தரும்.
நட்சத்திர பலன்கள்
அவிட்டம் 3,4 : அன்பும், ஆதரவு கிடைக்கும் நாள்
சதயம் : நன்மையும், அமைதியும் கிடைக்கும்
பூரட்டாதி 1,2,3 : புது முயற்சிகள் தாமதமாகும்
மீன ராசி – புது வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள முடியும். உடனிருப்பவர்களால் சில தொல்லைகள் ஏற்படும். வெளிநாடு சென்று வர வாய்ப்புகள் வரும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 3 & 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் புஷ்பராகம்
அதிர்ஷ்ட கிழமைகள் : வியாழன் & திங்கள்
ஏற்றமான திசைகள்: வடக்கு, கிழக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : தத்தாத்ரேயர்
பரிகாரம் : மகான்களின் ஜீவ சமாதிக்குச் சென்று வழிபாடு செய்வது சிறப்பு
நட்சத்திர பலன்கள்
பூரட்டாதி 4 : நல்ல வாய்ப்புகள் தேடி வரும்
உத்திரட்டாதி : வேண்டியவர்களால் கூட சில தொல்லைகள் வரும்
ரேவதி : வெளிநாட்டு யோகம் உண்டு
தமிழ் ராசி பலன் வாரந்தோறும் 22-06-2026 To 28-06-2026
மேஷ ராசி அன்பர்களே
மேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலன் படி, உங்களுடைய சாமர்த்தியமான செயல்களால் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். எதை செய்ய நினைத்தாலும் அதை மன நிறையுடன் செய்வது நன்மையை தரும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடும் பாக்கியம் கிட்டும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். குடும்ப பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். அடுத்தவர்களின் ஆலோசனையை ஒரு அளவோடு எடுத்துக்கொண்டால் நல்லது. வீட்டில் சுப செலவுகள் நிறையவே வரும். முன்யோசனையுடன் செய்யும் செயல்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வித்திடும். யாரிடத்திலும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். இரவு நேர வாகன பயணங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் கவனமாக பணிகளை மேற்கொள்ளவும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.
பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும்
ரிஷப ராசி அன்பர்களே
ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் நிலவிய பொருளாதார சிக்கல்கள் படிப்படியாக குறையும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவதில் சிரமம் இருக்கும். தெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும். வருமானத்திற்கு ஏற்ற செலவுகள் செய்தால் சிக்கல் இல்லாமல் வாழலாம். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். குடும்பத்தை பற்றி சிந்தனை அதிகம் இருக்கும். உற்றார், உறவினர்கள் வழியில் பல நன்மைகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சின்னச் சின்ன கருத்து வேற்றுமைகள் வரும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். வாகனங்களில் செல்லும் போது பொறுமை அவசியம். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் பல புதுமைகள் நடக்கும்.
பரிகாரம் : தினமும் கிருஷ்ண கவசம் படிக்கவும்
மிதுன ராசி அன்பர்களே
மிதுன ராசி அன்பர்களே, இந்த வார பலன் படி, குடும்பத்தில் ஒரு சில கஷ்டங்கள் வந்தாலும் அதை திறமையாக சமாளித்து வெற்றி காண முடியும். பண சேமிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும். எதிர்பாராத பயணங்கள் நிறைய மேற்கொள்ள வேண்டிவரும். மன ரீதியான பிரச்சனைகளை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம், அதுவே தானாக சரியாகிவிடும். உற்றார், உறவினர்களால் உற்ற நேரத்தில் உதவிகள் கிடைக்கும். புது வீடு மாற்றம் மற்றும் புதிய வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். புது நட்பு வழியில் நிறைய ஆதாயங்கள் இருக்கும். கணவன் மனைவிக்கிடையில் பனிப்போர் ஏற்படும். அக்கம் பக்கம்தினருடன் நல்லுறவு ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை இருக்கும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.
பரிகாரம் : குலதெய்வத்தை வழிபடவும்
கடக ராசி அன்பர்களே
கடக ராசி அன்பர்களே, இந்த வார பலன் படி, எதை செய்ய நினைத்தாலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி மனநிம்மதி ஏற்படும். பண புழக்கத்தில் தடை வரலாம், இருப்பினும் அதை சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எதிர்பாராத சில அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குடும்பத்தில் ஆடம்பர செலவுகளை குறைக்க பார்க்கவும். சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக அமையும். நெருங்கிய உறவினர்கள் ஆதரவாக செயல்படுவர். கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். கணவன் மனைவிடையே நெருக்கம் உண்டாகும். தொடர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கியே நிற்கும். தொழில், வியாபாரத்தில் கடுமையாக உழைக்க வேண்டிவரும்.
பரிகாரம் : வராகியை வணங்கி வழிப்படவும்
சிம்ம ராசி அன்பர்களே
சிம்ம ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, குடும்ப விஷயங்களை பற்றி வெளியில் பகிராமல் இருப்பது நல்லது. புது பொருள் சேர்க்கை உண்டாகும். மற்றவர்களிடம் பேசும் வார்த்தைகளில் எப்போதும் நிதானம் தேவை. அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கை நட்பு வட்டத்தை விரிவடையச் செய்யும். உங்களை சுற்றி இருப்பவர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பழைய கடன்கள் ஓரளவு அடைப்படும். ஆன்மீக தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். குடும்ப முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். நீண்ட நாட்களாக நடக்காத காரியம் ஒன்று நடந்து முடியும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
பரிகாரம் : தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்
கன்னி ராசி அன்பர்களே
கன்னி ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, உங்களது உயர்வான எண்ணங்களும், நேர்மையான சிந்தனைகளும் உங்களை பெரியளவில் உயர்த்தும். மனதில் பட்டதை தயக்கமின்றி தைரியமாக பேச முடியும். யோசிக்காமல் எடுக்கும் சில முடிவுகளால் வீண் பிரச்சனைகள் வரக்கூடும். உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு ஏற்படலாம். பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஒரு சில நேரங்களில் நெருங்கிய உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு மன அமைதி பாதிக்கலாம். பிரிந்து சென்ற கணவன் மனைவி மீண்டும் ஒன்று சேருவர். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். வாகன பயணத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் அனுசரித்து செல்வது பல வழியில் நன்மையை தரும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் இருக்கும்.
பரிகாரம் : மகாவிஷ்ணுவை வணங்கி வழிப்படவும்
துலாம் ராசி அன்பர்களே
துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். பொருளாதார உயர்வால் வாழ்க்கைத் தரம் உயரும். முக்கியமான பணிகளில் நேரடியாக களத்தில் இறங்குவது நல்லது. குடும்பத்தில் புது விஷயங்கள் தொடர்பாக நிறைய நபர்களை சந்திக்க வேண்டியிருக்கும். முக்கிய சமயங்களில் அனுபவ அறிவை வெளிப்படுத்தவும். பண தொடர்பாக யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். உடல் நலம் சீராகும். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த பொருளையும் சாப்பிட வேண்டாம். வீண் விவாதங்களை தவிர்க்கவும். காரிய தடை விலகும். குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்கும். உத்யோகத்தில் இட மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரம் விருத்தியடையும். .
பரிகாரம் : சுக்கிர பகவானை வணங்கி வழிபடவும்
விருச்சிக ராசி அன்பர்களே
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, நீண்ட நாள் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். பொருளாதார சிக்கல் வந்தாலும் பெரிதாக பாதிக்காது. பிரியமானவர்களிடம் எப்போதும் அனுசரித்து செல்வது நல்லது. பல பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய முயற்சிகள் பலிதமாகும். உடல் நிலை சீராக இருக்கும். முடிந்தவரை அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. கடன் வாங்கும் சூழ்நிலையை தவிர்த்து வரவும். சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் அகலும். புது வாகனம் வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். உத்யோகத்தில் முழு கவனம் செலுத்தவும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
பரிகாரம் : துர்கையை வணங்கி வழிபடவும்
தனுசு ராசி அன்பர்களே
தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன் படி, பொது நல காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சுற்றி இருப்பவர்களிடம் அனுசரித்து போவதால் மட்டுமே எல்லா பிரச்சனைகளும் சரி செய்து கொள்ள முடியும். நெருங்கிய உறவினர்களிடம் தேவையில்லாத மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். மருத்துவரின் தகுந்த ஆலோசனையின்றி எந்த மருந்து மாத்திரையும் உட்கொள்ள வேண்டாம். பிரியமானவர்கள் ஒத்தாசையாக இருப்பர். புதிய முயற்சிக்காக பல புதிய நபர்களை சந்திக்க வேண்டி வரும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். பயணங்களால் செலவுகளும் அலைச்சல்களும் ஏற்படும். உத்யோகத்தில் மனநிறைவு ஏற்படும். தொழில், வியபாரத்தில் மேன்மை நிலை உண்டாகும்.
பரிகாரம் : பைரவரை வணங்கி வழிபடவும்
மகர ராசி அன்பர்களே
மகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்களது செயல்களில் வேகமும், விவேகமும் வேகமாக இருக்கும். உங்கள் சுய கௌரவத்தை விட்டு தர வேண்டாம். குடும்ப பொருளாதாரம் வெகுவாக உயரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். ஓயாத அலைச்சல் காரணமாக உடல் நலம் பாதிக்கலாம். பண விஷயங்களில் கவனம் தேவை. வெளிநாடு சென்று வரும் பாக்கியம் கிட்டும். பகைவர்களை வெல்லும் ஆற்றல் உண்டாகும். கணவன் மனைவிடையே இருந்த ஈகோ பிரச்சனை தீரும். பணம் எவ்வளவு வந்தாலும் அதற்கேற்றாற் போல செலவுகளும் இருந்து கொண்டே இருக்கும். சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகமும் அதனால் கடன்களும் உண்டாகும். குடும்பத்தில் இருந்த குழப்ப நிலை நீங்கும். உத்யோகத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
பரிகாரம் : பைரவரை வணங்கி வழிபடவும்
கும்ப ராசி அன்பர்களே
கும்ப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, பேச்சில் எப்போதும் நிதானமும் செயலில் பொறுமையும் இருப்பது நல்லது. குடும்பத்தின் அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்ள முடியும். முக்கிய தருணங்களில் முடிவு எடுப்பதில் சிரமம் ஏற்படும். சொந்த பந்தங்களுடன் வேண்டாத விவாதம் செய்ய வேண்டியிருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த மந்த நிலை மாறும். சுப காரிய முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து போவதும் நல்லது. பெரியோர்களின் ஆலோசனைகள் கைகொடுக்கும். புதிய மனிதர்களின் சந்திப்பு கிட்டும். பொது பிரச்சனைகளில் அதிகம் தலையிடாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் ஏற்பட்ட சில தடைகள் நீங்கும். புது தொழில் யோகம் அமையும்.
பரிகாரம் : விநாயகரை வணங்கி வழிபடவும்
மீன ராசி அன்பர்களே
மீன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, முக்கிய தருணங்களில் முடிவு எடுப்பதில் அவசரம் காட்ட வேண்டாம். தினசரி செலவுகள் கட்டுப்படுத்த புது யுக்திகளை கையாள வேண்டிவரும். எதிர்பார்க்கும் விஷயங்களும், எதிர்பாராத விஷயங்களும் நடக்கக்கூடும். எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அதை தனியாளாக நின்று செய்து முடிக்க முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். உற்றார், உறவினர்களிடம் நல்லுறவு ஏற்படும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே இருந்த பகைமை நீங்கும். திட்டமிட்ட பயணங்களை மேற்கொள்ள முடியும். பெண்கள் வழியில் சில தொந்தரவு வரலாம். பிறர் விஷயங்களில் தலையிடாதிருந்தால் வீண் பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
பரிகாரம் : குரு பகவானை வணங்கி வழிபடவும்
ஜூன் மாத ராசி பலன்கள் 2026
| ஜூன் மாத ராசி பலன்கள் 2026 |
| ஜூன் மாத ராசி பலன்கள் – (2026) (பராபவ வருடம் வைகாசி மாதம் 18ம் தேதி முதல் ஆனி மாதம் 16ம் தேதி வரை ) வாக்கிய பஞ்சாங்கப்படி 01-06-2026 முதல் 30-06-2026 வரை பலன்கள் கணித்து எழுதப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு ராசிக்கும் தனித் தனியே கிரக நிலையின் அடிப்படையில் எழுதப்பட்ட பொது பலன்கள் ஆகும். மேலும் அவரவர் ஜாதகத்தில் நடக்கும் நடப்பு திசை, புத்தி சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு பலன்கள் சற்று மாறுபடக்கூடும். இருப்பினும் ஒவ்வொருவரும் தெய்வ அனுகூலங்களை கூட்டுவதின் மூலமாக தனக்கு வரும் கெடுபலன்களை குறைத்து நல்ல பலன்களை அனுபவிக்க முடியும். கிரக நிலை மாற்றம் 08-06-2026 – கடக சுக்கிரன் 15-06-2026 – மிதுன சூரியன் 20-06-2026 – ரிஷப செவ்வாய் 22-06-2026 – கடக புதன் ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் ஆலந்தூர் ஜோதிடர் A.வினோத் குமார் P.hd Astrology (அலைபேசி: 09003019831) |
மேஷ ராசி அன்பர்களே
அஸ்வினி 1, 2, 3, 4 பாதம், பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1ம் பாதம் முடிய)
மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களுக்கு ஏற்ற இறக்கமாகவே உள்ளது. உங்கள் பேச்சில் நிதானமும், செய்யும் செயல்களில் கவனமும் தேவை. பணவரவு சுமாராக இருக்கும். புதிய முயற்சிகள் சாதகமான பலனை தரும். எதையும் திட்டமிட்டு செய்தால் வெற்றி நிச்சயம். அடுத்தவர்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. உங்கள் விருப்பத்திற்கு மாறாக ஒரு சில காரியங்கள் நடக்கலாம் குல தெய்வ வழிபாடுகளை தவறாமல் மேற்கொள்ளவும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். கொடுக்கல், வாங்கலில் மிகுந்த கவனம் தேவை. உங்கள் காரிய வெற்றிக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். கடன் தொல்லைகள் சில நேரங்களில் மனதை பாதிக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடும் கவனமும் தேவை. சுப காரியங்கள் கைகூடும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்க முடியும். குடும்பத்துடன் கலந்து ஆலோசிப்பது எல்லா விஷயத்திற்கும் நல்லது. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரம் தொடர்பாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.
சந்திராஷ்டமம் : 1,26,27,28,29 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
ரிஷப ராசி அன்பர்களே
(கார்த்திகை 2, 3, 4, ரோகினி 1, 2, 3, 4, மிருகசீரிஷம் 1, 2 பாதங்கள் முடிய)
ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் எந்த சூழ்நிலையிலும் நிதானமாக முடிவு எடுப்பது நல்லதும். தினமும் தியானம் செய்வது மனதிற்கும், உடலுக்கும் நல்லது. மனதில் புதிய உற்சாகமும் தைரியமும் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த காரியங்களை கூட எளிதில் முடிக்க முடியும். குடும்பத்தில் பொருள் விரயங்கள் ஏற்பட்டாலும் அது சுப விரயங்களாகவே இருக்கும். தடைபட்ட காரியங்கள் கூட மாறி கை கொடுக்கும். நண்பர்கள் ஒத்துழைப்பு கிடைத்து சுகமும் நிம்மதியும் கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழல் நிலவும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மன கசப்பு மாறும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். திட்டமிடாத பயணங்களை மேற்கொள்ள வேண்டிவரும். வழக்கில் இருந்த இழுபறி நிலை நீடிக்கும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். உத்யோகத்தில் இட மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் இருக்கும்.
சந்திராஷ்டமம் : 1,2,3,4 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
மிதுன ராசி அன்பர்களே
(மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை 1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 முடிய)
மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களுக்கு எல்லா வகையிலும் அனுகூலமாகவே உள்ளது. பல சிக்கலான விஷயங்களை கூட சாதுர்யமாக பேசி முடிக்க முடியும். பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும். உங்களை சுற்றி இருப்பவர்கள் மத்தியில் மதிப்பு உயரும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பர். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பெற்றோர்களின் ஆலோசனை முக்கியமான நேரத்தில் கிடைக்கும். வெளியிடத்தில் கடன் வாங்கி அனாவசியமாக செலவு செய்ய வேண்டாம். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். உடல் நிலை பொறுத்தவரை சின்ன சின்ன பாதிப்புகள் வரலாம். தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் ஏற்படும். பயணத்தில் மூலம் நல்ல லாபம் உண்டாகும். குடும்பத்தில் புது நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
சந்திராஷ்டமம் : 4,5,6 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கடக ராசி அன்பர்களே
(புனர்பூசம் 4ம் பாதம் முடிய, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 பாதங்கள் முடிய)
கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் பல நல்லதும், கெட்டதும் கலந்தே நடக்கும். உங்களது செயல்களில் வேகமும், விவேகமும் இருக்கும். பண வரவு அவ்வப்போது இருக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். உடன்பிறப்பிடம் சுமூகமான உறவு இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுவும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். குடியிருக்கும் வீட்டை சீரமைக்க வேண்டிவரும். கொடுக்கல், வாங்கலில் சிக்கல்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். பெற்றோர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் எந்த குறையும் இல்லாமல் இருக்கும். கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும். உங்கள் மேல் சுமத்தப்பட்ட வீண் பழி நீங்கும். உத்யோகத்தில் வேலை பளு அதிகரிக்கும், தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
சந்திராஷ்டமம் : 6,7,8,9 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
சிம்ம ராசி அன்பர்களே
(மகம் 1, 2, 3, 4, பாதங்கள், பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1ம் பாதம் முடிய )
சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துகொள்ளவும். தேக நலனில் அக்கறைகொள்ளவும். வர வேண்டிய பண கூட சற்று தாமதித்து பின் கைக்கு வரும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் நிறைய மாற்றங்களை சந்திக்க வேண்டிவரும். மனதில் தன்னம்பிக்கை தைரியம் திகரிக்கும். பொருளாதார சிக்கல்களை திறமையாக சமாளிக்க முடியும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சியான போக்கு நீடிக்கும். உடல் நலம் சீர்பெறும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பெண்களால் சில பிரச்சனைகள் வரும். உங்களுக்கு எதிராக வரும் எதிர்ப்புகள் முற்றிலும் நீங்கும். வெளியில் கடனாக கொடுத்த பணம் கைக்கு திரும்ப வரும். குடும்பத்தில் திட்டமிடாத செலவுகள் வரும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில், வியாபாரம் திருப்தி தரும். உத்யோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.
சந்திராஷ்டமம் : 9,10,11 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கன்னி ராசி அன்பர்களே
(உத்திரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம் 1, 2, 3, 4, சித்திரை 1, 2 பாதங்கள் முடிய )
கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் எந்த காரியத்தை செய்தாலும் பல முறை யோசித்து செய்வது உத்தமம். குடும்பத்தில் ஆதரவு பெருகும். தள்ளி போன காரியங்கள் விரைவில் முடியும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புது நட்பு வட்டாரம் உருவாகும். சொந்த பந்தங்களிடே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். அடுத்தவர் பிரச்னையில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் அதை மனஉறுதியடன் போராடி வெற்றி பெற முடியும். உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்களிடம் ஆலோசனை கேட்பது பல வகையில் உதவியாக இருக்கும். சிறு உடல் உபாதைகள் வந்து போகும். மனக்குழப்பம் தோன்றி மறையும். பெரிய மனிர்தர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்யோக பணியில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் கடுமையான போட்டி இருக்கும்.
சந்திராஷ்டமம் : 11,12,13 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
துலாம் ராசி அன்பர்களே
(சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 முடிய )
துலாம் ராசி அன்பர்களே, இந்த மாதம் பல திருப்பு முனையான விஷயங்கள் நடக்கும். குடும்பத்தில் தொலைத்து போன சந்தோஷம் மீண்டும் வரும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். வராது என்று நினைத்த பொருள் கைக்கு வரும். ஒரு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படும். அக்கம் பக்கம் உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதம் ஏற்படும். உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு ஏற்படலாம். உங்கள் பிடிவாத குணத்தை விட்டு விடுவது எல்லா வகையிலும் நல்லது. குடும்பத்தில் எல்லாரிடமும் மற்றவர்களிடம் முக்கிய விஷயத்தில் அனுசரித்து செல்வது நல்லது. பணம் தொடர்பான விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்கவும். பேச்சில் நிதானம் அவசியம் தேவை. புதிய வீடு வாங்கும் முயற்சிகள் தாமதம் ஆகும். ஆன்மிக எண்ணம் மேலோங்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு பின் சீராகும். சொந்த பந்தங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
சந்திராஷ்டமம் : 13,14,15 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
விருச்சிக ராசி அன்பர்களே
(விசாகம் 4ம் பாதம் முடிய, பனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 பாதங்கள் முடிய )
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் பல சிக்கல்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் தானாகவே வரும். குடும்பத்தில் பல அவசர முடிவுகளால் பிரச்சனைகள் கொடுக்கும் சூழ்நிலைகள் ஏற்படலாம். வீட்டை புதிப்பிக்கவோ, வீடு மாற்றி செல்லவோ வாய்ப்பு வரும். பல பிரச்சனைக்கு நடுவே பணம் கைக்கு வந்து சேரும். குடும்ப பொறுப்புகள் அதிகமாகும். வரவுக்கு மீறிய செலவுகள் இருந்து கொண்டே இருக்கும். மனதில் உள்ள குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு கட்டுப்பாடு அவசியம். வீடு, வாகனங்களுக்கான செலவு அதிகரிக்கும். குடும்பத்துடன் பயணிக்க விருப்பம் ஏற்படும். நீங்கள் எதிர்பார்க்கற இடங்களிலிருந்து நல்ல செய்திகள், மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேருவதற்கான வாய்ப்பிருக்கிறது. கடன் வாங்கும் என்னத்தை கை விடுவது நல்லது. உடல் நலம் தொடர்பாக மருத்துவ செலவு ஏற்படலாம். திட்டமிட்ட பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் சாதகமான சூழல் நிலவும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
சந்திராஷ்டமம் : 15,16,17 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
தனுசு ராசி அன்பர்களே
(மூலம் 1, 2, 3, 4 பாதம், பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1ம் பாதம் முடிய )
தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் தொடக்கத்தில் மனக்குழப்பத்துடன் காணப்பட்டாலும், பிற்பாதியில் நல்ல திருப்பம் உண்டாகும். மனதில் உள்ளதை ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக பேசுவது நல்லது. பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். குடும்பத்தில் ஏற்படும் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் நாளடைவில் சீராகும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். புதிய முயற்சிகளை இப்போதைக்கு தள்ளி போடவும். வண்டி, வாகனம் வாங்கும் எண்ணத்தை சிறிது காலம் தள்ளி வைக்கவும். தொலைதூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.பணம் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். தியானத்தால் மன நிம்மதி ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிரமம் இருக்கும். குடும்பத்தில் வரவை விட செலவுகள் அதிகரிக்கும். எங்கும், எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்யோகத்தில் அமைதி நிலவும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
சந்திராஷ்டமம் : 17,18,19 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
மகர ராசி அன்பர்களே
(உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 பாதங்கள் முடிய)
மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த காரியம் விரைவில் முடியும். எதிர்பாராத பொருளாதார சிக்கல் ஏற்பட்டு விலகும். குடும்பத்தில் வரவுகளும், செலவுகளும் சரிசமமாக இருக்கும். உங்களிடம் புத்திசாலித்தனம் அதிகமாக இருக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய வண்டி வாகன சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே மன வருத்தம் ஏற்படலாம். ஒரு காரியம் செய்யும் முன் தீர யோசித்து செய்வது நல்லது. யாருக்காகவும், எப்போதும் ஜாமீன் கையெழுத்து போட்டு பிரச்சனையில் மாட்டிக்கொள்ள வேண்டாம். பொதுப்பிரச்சனைகளை எதிர்கொள்வதில் அதிக கவனம் தேவைப்படும். எதிர்பாராத சில செலவுகளால் வெளியில் கடன் வாங்கி செலவு வேண்டிய சூழ்நிலை உருவாகும். பாலிய நண்பர்களின் நிறைய ஆலோசனை கிடைக்கும். முக்கிய காரியங்களை நீங்களே செய்து முடிப்பது நல்லது. வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். குடும்பத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது. உத்யோகத்தில் மனநிறைவு ஏற்படும்.புதிய தொழில் யோகம் அமையும்.
சந்திராஷ்டமம் : 19,20,21 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கும்ப ராசி அன்பர்களே
(அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் முடிய )
கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தில் பல சௌபாக்கியங்களை பெற முடியும். மனதில் புத்துணர்ச்சியும். தெம்பும் பிறக்கும். சற்றும் எதிர்பாராத பணவரவும், அதிர்ஷ்டங்களும் வந்து சேரும். புத்தி சாதூர்யத்தால் எதையும் சாதிக்க முடியும். எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதை துணிச்சலுடன் எதிர்கொள்ளும் சாமர்த்தியம் பிறக்கும். வீட்டில் புது பொருள் சேர்க்கை உண்டாகும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். பிரியமானவர்கள் வழியில் ஏதாவது மனகசப்பு ஏற்பட்டு மறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. யாருக்கும் எந்த உத்திரவாதமும் கொடுக்க வேண்டாம். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். புதிய வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டு. கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் உயர் பதவிகள் தேடி வரும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும்.
சந்திராஷ்டமம் : 21,22,23,24 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
மீன ராசி அன்பர்களே
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 பாதங்கள் முடிய )
மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்கள் விருப்பத்தினை நிறைவேற்ற நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். முயற்சி செய்யும் எல்ல காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பணவரவை பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இருக்காது. எதிர்ப்புகளை சமாளிக்கும் மனவலிமை உருவாகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கும். பிரபலங்களின் அறிமுகமும் அவர்களால் நிறைய ஆதாயமும் உண்டு. தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் வரும். எதிரிகளின் பலம் குறையும். குடும்பத்தில் இதமான சூழல் நிலவும். கடன் பிரச்சனைகள் தீரும். பெற்றோர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். உங்களை சுற்றி இருப்பவர்களை அனுசரித்து போவது நல்லது. கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். அடுத்தவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடா வேண்டாம். குடும்ப பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். உத்யோகத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
சந்திராஷ்டமம் : 24,25,26 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்