“இலங்கையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு” எதிரான போராட்டத்தின் செய்தி அறிக்கை – 22/06/2026.

தமிழீழ சுயநிர்ணய அமைப்பு
MOVEMENT FOR SELF-DETERMINATION OF TAMIL EELAM

Ground Floor Right, 164 Pinner Road, Harrow. HA1 4J
www.msdte.org
admin@msdte.org

ஸ்ரீலங்காவில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்கக்கோரிய போராட்டம்

எம் தமிழீழத் தாயக நிலப்பரப்பில் தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா சிங்கள பௌத்த பேரினவாத அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற அடக்குமுறைகளுக்கும், அவ்வாறான கொடூர செயற்பாடுகளுக்கு சட்டபூர்வமான ஆதரவைக் கொடுக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக தமிழீழ சுயநிர்ணய அமைப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தது.

தாயகம், தேசியம், தன்னாட்சி எனும் மாறாக் கொள்கைகளுடன் கூடிய எம் தானைத்தலைவர் மேதகு’ அவர்களது வழிகாட்டலை சிரமேற்கொண்டு செயற்படும் எமது அமைப்பானது காலத்தின் தேவை கருதியதோர் செயற்பாடாகவே பிரித்தானியா- லண்டனிலுள்ள ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகரத்திற்கு முன்னால் 20.06.2026 சனிக்கிழமையன்று மதியம் 01:00 மணியளவில் இந்தப் போராட்டத்தினை நாம் ஏற்பாடு செய்தோருந்தோம்.

தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி சிங்கள பௌத்த பேரினவாதத்தின் மேலாதிக்கத்தை எம் தமிழீழத் தாய் நிலத்திலும் எம் மக்கள் மீதும் திணிப்பதற்கும், தமது காலடியில் எம்மை அடிமைகளாக வைத்திருப்பதற்காகவே திட்டமிட்டுக் கொண்டுவரப்பட்ட ஒரு கொடூர சட்டமாக தற்போதும் நடைமுறையிலுள்ள இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் இரண்டு தசாப்தங்கள் கடந்தும் அரசியல் கைதிகளாக இன்னும் சிறைகளில் தம் வாழ்வைத்
தொலைத்துக்கொண்டிருக்கும் எம் உறவுகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். குறித்த சட்டத்தினூடாக எம் உறவுகள் மேலும் கைது செய்யப்படக்கூடாது. பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பன சர்வதேசத்தை நோக்கிய எமது இந்தப் போராட்டத்தின் மிக முக்கிய விடயங்களாக முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தன.

கலை வெளிப்பாட்டின் மூலம் தேசிய ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் விளைவித்ததாகக்கூறி அண்மையில் எமது தாயக நிலப்பரப்பில் வைத்து சொல்லிசைக்கலைஞரான தமிழ் இளைஞன் ஒருவர் ஸ்ரீலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டமை உலகளாவிய ரீதியில்பேசுபொருளான நிலையில், எம் மக்களின் மனங்களில் பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்த அதீத பயமும் கவலையும் அதிகரித்துப்போயிருந்தது. அத்துடன், மக்களின் கோபமும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களாகவும் மாற்றம் பெற்றிருந்தது
கண்கூடு.

இந்தநிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக துணிந்துநின்று தாயகத்தில் குரலெழுப்பும் எம் மக்களின் உணர்வுகளையும், எமது மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இந்தக் கொடூர சட்டத்தின் பின்னாலுள்ள கொடூரத்தையும் வெளிப்படுத்தியும், அதேவேளை ஸ்ரீலங்காவின் பேரினவாத அரசானது தற்போது நடைமுறையில் வைத்துள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கவும், மாற்றீடாக வேறெந்த புதிய பயங்கரவாத சட்ட மூலங்களையும் நடைமுறைப்படுத்தக் கூடாது என்று அரசியல் ரீதியிலான அழுத்தங்களை வழங்க வேண்டும் என்றும், காலப்பொருத்தமான இந்த ஆர்ப்பாட்டத்தினூடாக பிரித்தானிய அரசிற்கும் சர்வதேச நாடுகளுக்கும் எமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.

பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் எமது தார்மீக உரிமைகளுக்கான கோரிக்கைகள் ஆகியவை ராணுவ இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படுவதோடு, இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலமாக ஒவ்வொரு தமிழ் மக்களினதும் இருப்பும் வாழ்வியலும் காலதிகாலமாக எமது பூர்வீக தாயக நிலப்பரப்பில்
கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது. ஆகவே, இந்தப் பயங்கரநிலை மாறவேண்டும். ஈழத் தமிழர்கள் எமக்கான சுயநிர்ணய உரிமை எம்மை வந்தடையவேண்டும். அதற்கான ஒரே வழி தனித் தமிழீழம் மட்டுமே. அந்தவகையில், எமது அமைப்பின் செயற்பாடுகள் எம் மக்களின் ஆதரவோடும் கருத்தியலோடும் என்றும் ஒன்றித்துப் பயணிக்கும் என்பதை இவ்வேளையில் உறுதி கூறுகின்றோம்.

Hon. Dr. S. Yogalingam
Director

Hon. Dr.A. Rajalingam
Secretary

Mr.G.Ragavan
Media Secretary

“தமிழரின் தலைவிதி தமிழரின் கையில்”
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

Organisation Reg No. 15780578

Related posts

கத்தார் எரிவாயு நிலைய வெடிப்பில் 13 பேர் பலி; இந்தியர் ஒருவரும் உயிரிழப்பு

உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல் அடித்தவர் என்ற புதிய சாதனையை லயோனல் மெஸ்ஸி படைத்துள்ளார்.

கிலோ அரிசி விலை ரூ. 8 வரை உயர்வு: தமிழகத்தில் டீசல் விலை உயர்வின் எதிரொலி!