24 மற்றும் 25 ஆம் தேதிகளில் மழைப்பொழிவு அதிகரிக்கும் – இலங்கை வானிலை ஆய்வுத் துறை

Sri Lanka weather report

எல் நினோ நிலைமை தற்போது இலங்கையை நேரடியாகப் பாதிக்கவில்லை. எல் நினோ நிலைமையின் போது பொதுவாக தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் மழை குறையும். இது குறிப்பாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களிலேயே பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும். 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் மழையின் அளவு ஓரளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாத இறுதியின் பின்னரே இந்த காலநிலையில் மாற்றம் ஏற்படக் கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உலகளாவிய ரீதியில் தற்போது பலவீனமான எல் நினோ காலநிலை நிலைமை காணப்படுகிறது. இந்த எல் நினோ நிலைமையானது வரும் காலங்களில் நடுத்தரமான அல்லது ஒரு வலுவான எல் நினோ நிலைமையாக வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எல் நினோ தாக்கத்தின் காரணமாக, இலங்கையின் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் மழையின் அளவில் ஒரு சிறிய குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் தென்மேற்கு பருவக்காற்று ஓட்டம் ஓரளவுக்குக் குறைவடைந்துள்ளமையாகும்.

இப்போதைக்கு எல் நினோ நிலைமை இலங்கையை நேரடியாகப் பாதிக்கவில்லை. எல் நினோ நிலைமையின் போது பொதுவாக தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் மழை குறையும். இது குறிப்பாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களிலேயே பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.இலங்கை செய்திகள்

தற்போழுது மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் மழை வீழ்ச்சி ஓரளவு குறைந்துள்ளதால், மின் உற்பத்தி நிலையங்களைச் சார்ந்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் குறையும் நிலை காணப்படுகிறது. எனினும், இந்த தென்மேற்கு பருவக்காற்று அவ்வப்போது தீவிரமடைவதால் கடலை ஒட்டிய பகுதிகளான வடமேல் மாகாணம், மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம் மற்றும் காலி வரை ஓரளவுக்கு பலத்த மழை பெய்து வருகிறது.

24 மற்றும் 25 ஆம் திகதிகளில் மழையின் அளவு ஓரளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாத இறுதி வரை வடமேல், மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் மற்றும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.

இன்னும் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களின் பின்னர், அதாவது ஜூலை மாதமாகும் போது இந்த மழைப்பொழிவு படிப்படியாகக் குறைவடைந்து செல்லும். அதன் பின்னர், எல் நினோ தாக்கத்தினால் ஜூலை மாத இறுதிப் பகுதியிலும் மற்றும் ஆகஸ்ட் மாதத்திலும் மழை மிகவும் குறைவாகவே காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கு எல் நினோவின் மறைமுகத் தாக்கம் தற்போது ஆரம்பித்துள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் காற்றின் வேகம் குறைவடைந்துள்ளதுடன், ஈரப்பதனான காற்று வீசுவதும் குறைந்துள்ளது. எனவே, ஜூலை மாதத்திற்குப் பிறகு இதன் தாக்கம் ஓரளவுக்குத் தெரிய ஆரம்பித்து, ஆகஸ்ட் மாதமாகும்போது இலங்கைக்கு நன்றாகவே உணரப்படும். ஆகஸ்ட் மாதத்தில் மழைப்பொழிவு பெருமளவில் குறையும்.Travel Guides & Travelogues

எல் நினோ நிலைமை என்றால் மழை குறையும் என்று மட்டும் கூற முடியாது, மழையின் அளவு அதிகரிப்பதும் குறைவதும் ஆகிய இரண்டுமே இதில் நடக்கும். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மழை மிகவும் குறையும். ஆனால், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழக்கமான மழையளவை விடக் கூடுதலான மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம்.

டிசம்பர் மாதத்தின் பின்னர் எல் நினோவின் நேரடிப் பாதிப்பு அடுத்த வருடத்தின் (2027) ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களின் முதல் காலாண்டில் கடுமையான வறட்சியாக இலங்கையை பாதிக்கக்கூடும். அந்த காலப்பகுதியில் மழைப்பொழிவு மிகவும் குறைவடைவதுடன், நாட்டின் வெப்பநிலையும் பெருமளவில் அதிகரிக்கும். இது நாட்டின் அனைத்து துறைகளிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

Related posts

கத்தார் எரிவாயு நிலைய வெடிப்பில் 13 பேர் பலி; இந்தியர் ஒருவரும் உயிரிழப்பு

உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல் அடித்தவர் என்ற புதிய சாதனையை லயோனல் மெஸ்ஸி படைத்துள்ளார்.

கிலோ அரிசி விலை ரூ. 8 வரை உயர்வு: தமிழகத்தில் டீசல் விலை உயர்வின் எதிரொலி!