பழநி நில மோசடி விவகாரத்தில் 100 சதவீதம் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நிருபர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: பழநி கோவில் மோசடி வழக்கு விசாரணை விரிவுபடுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்; இதுபோன்ற பல இடங்களில் மோசடி பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது; அனைவரும் முன்வந்து புகார் அளிக்க வேண்டும். பழநி கோவில் நிலமுறைகேடு விவகாரத்தில் 100 சதவீதம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விவகாரத்தில் தவெக அரசு துரித நடவடிக்கை எடுத்துள்ளது. தவெக எம்எல்ஏக்களை வாங்கும் திமுகவின் நடவடிக்கை நேற்று வரை தொடர்கிறது. எம்எல்ஏக்களை வாங்க வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் பணம் பிடிப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளது. திருச்சி சிவா மத்திய அமைச்சராவார் என எந்த அடிப்படையில் கூறுகின்றனர். இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.