Saturday, November 7, 2026

கட்டுநாயக்க முதுவாடிய பாலத்திற்கு அருகில் கோடாவுடன் நபர் கைது!

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதுவாடிய பாலத்திற்கு அருகில் நேற்று வியாழக்கிழமை (5) சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும்  கோடாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, இலங்கை | 06.11.2026

கட்டுநாயக்க பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் 1,512 லீற்றர் கோடா (8 பீப்பாய்கள்) கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஆவார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment