அமிழ்து
www.amizhthu.com
  • முகப்பு
  • NEWS
  • நாட்காட்டி
  • தமிழீழம்
    • மாவீரர்கள்
    • நினைவு வணக்கம்
    • அகவை வாழ்த்து
    • குருதிச் சுவடுகள்
    • அடிக்கற்கள்
    • கரும்புலிகள்
    • புகழ் வணக்கம்
    • ஈழத்தின் வரலாறு
    • தமிழ் இனப்படுகொலை
  • தமிழகம்
  • புலம்பெயர் தமிழர்கள்
  • இந்தியா
  • இலங்கை
  • சர்வதேசம்
    • அமெரிக்கா
    • கனடா
    • ஆசியா
    • ஆப்பிரிக்கா
    • ஆஸ்திரேலியா
    • ஐரோப்பா
    • பிரித்தானியா
    • மத்திய கிழக்கு
  • கட்டுரைகள்
  • கவிதை
  • காணொளி செய்திகள்
  • நிகழ்வுகள்
  • மங்கையர் உலகம்
  • விளையாட்டு
  • 0
Category:

முதன்மை செய்திகள்

NEWS

Brampton’s Recognition and the Historical Study of Tamil National Identity

by Amizhthu 21 November 2025
written by Amizhthu

The Socio-Psychological Impact of Diasporic Recognition of a Nation

Introduction

The formal recognition of the Tamil Eelam national flag by the City of Brampton, Canada, is far more than a symbolic municipal gesture. It represents a profound socio-political and psychological milestone for the Tamil diaspora, particularly for those whose collective identity has long been subjected to suppression, displacement, and historical erasure. This recognition stands as a powerful assertion of existence, memory, and resistance, reinforcing a national consciousness that transcends geographical borders and political constraints.

This article examines the deep historical, psychological, cultural, and political implications of Brampton’s recognition, situating it within the broader narrative of Tamil national identity and the lived realities of a stateless nation in exile. It explores how such recognition reshapes diasporic self-perception, strengthens intergenerational continuity, and contributes to the internationalisation of Tamil political and justice-oriented struggles.

1. Psychological Victory of Recognition

Reaffirmation of a Suppressed Identity

For decades, the Tamil nation has endured systematic attempts to weaken or erase its symbols, institutions, and historical memory. In such a context, the official recognition of a Tamil national emblem by a Western democratic municipality functions as an act of psychological restoration. It transmits a clear message: the identity that was marginalised in the homeland is acknowledged and respected in the global democratic arena.

This recognition instils a renewed sense of dignity and pride among diasporic Tamils, reinforcing the belief that their collective history and aspirations are neither invisible nor irrelevant. It transforms internalised trauma into a shared consciousness of resilience and legitimacy.

From Fear to Assertion

In the homeland, the display of Tamil national symbols has often been associated with surveillance, intimidation, and danger. Brampton’s recognition removes that fear within the diasporic space, allowing Tamils to publicly express their identity without fear of persecution. This shift is not merely symbolic; it reconfigures the psychological landscape of a community that moves from survival to self-assertion.

The ability to stand openly under one’s national flag fosters confidence, social cohesion, and a stronger sense of belonging in the host country while remaining rooted in one’s historical narrative.

2. Cultural Preservation and Intergenerational Transmission

A Bridge for the Younger Generation

Children and youth born and raised in Canada often grow up navigating multiple identities. Without institutional recognition, the connection to ancestral history risks dilution. The recognition of a Tamil national flag by Brampton acts as a cultural bridge, enabling the younger generation to understand the historical depth, emotional gravity, and political significance of their inheritance.

Commemorative events such as National Flag Day and memorial observances become educational spaces where history transforms into lived memory. These formal acknowledgements help prevent cultural dislocation and promote continuity of heritage.

Reflection within a Multicultural Framework

Brampton is a model of multicultural coexistence. Within this framework, recognizing a Tamil national symbol affirms the value of diversity and promotes intercultural dialogue. It allows Tamil culture, history, and political reality to be introduced to other communities with dignity and legitimacy, fostering mutual respect and understanding.

Instead of existing as a marginal narrative, the Tamil story becomes interwoven into the shared civic identity of the municipality.

3. A Platform for Political Advocacy and Justice

Strengthening Documentation and Memory

Brampton’s proclamation identifying November 21 as a day commemorating continuous resistance against genocide is not a mere ceremonial note. It constitutes a formal historical record within a Western legal framework. Such documentation strengthens the Tamil community’s capacity to present its struggle in international human rights forums and legal institutions.

These recognitions become reference points in the global discourse on transitional justice, accountability, and genocide prevention, lending credibility and institutional weight to Tamil advocacy.

Indirect Political Pressure

Municipal recognition creates a ripple effect. It places moral and political pressure on provincial and federal governments to acknowledge Tamil issues, including war crimes, enforced disappearances, and systemic discrimination. This acts as a catalyst for broader engagement with policymakers and international stakeholders.

In this sense, Brampton’s action becomes part of a larger geopolitical process that amplifies the Tamil voice on the world stage.

4. Organisation and Strength of the Diaspora

Collective Unity and Mobilisation

Such a milestone is never accidental. It is the outcome of sustained efforts by Tamil civil organisations, community leaders, and advocacy groups. The success of securing official recognition reflects the maturity and organisational strength of the diaspora.

This process unites diverse strands of the community around a shared objective, reinforcing the understanding that collective action is the foundation of national progress in exile.

Development of Political Agency

Engagement with mayors, councillors, and municipal institutions cultivates political literacy and strategic competence within the Tamil community. This strengthens the community’s ability to influence policy, shape public narratives, and negotiate its place within the political structures of the host nation.

Political agency thus evolves from passive existence to active participation.

5. A Message to the Youth: Continuity and Responsibility

This recognition conveys a crucial message to younger generations: national identity is not a static inheritance but a living responsibility. Victory is not individual; it is collective and historical.

Engage in Local Politics

Recognition is achieved through participation, not silence. Youth are encouraged to involve themselves in municipal affairs, community leadership, and advocacy movements. Their voice is vital in sustaining and expanding these achievements.

Renew and Reimagine Identity

National symbols must not remain confined to nostalgia. They must evolve within contemporary realities. Youth are called upon to reinterpret and innovate ways of expressing identity, making it relevant, inclusive, and globally intelligible.

Conclusion: A Defining Moment in Diasporic History

Brampton’s recognition of the Tamil Eelam national flag marks a defining moment in the historical evolution of Tamil national consciousness. It affirms that identity, once silenced in the homeland, can find recognition and legitimacy in global democratic spaces.

More than an honour, this act is a foundation – a starting point for broader international acknowledgment, deeper unity, and sustained struggle for justice. It reinforces the truth that a nation may be displaced, but it cannot be erased.

The Tamil nation, through its diaspora, continues to transform memory into movement, history into identity, and recognition into renewed purpose.

╭────────────────────╮
Written by  Eelaththu Nilavan
╰────────────────────╯
21/11/2025


Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
21 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழகம்

பெண்கள் வாழ முடியாத மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது: இது திமுகவின் சாதனை என்கிறார் சீமான்.

by Amizhthu 21 November 2025
written by Amizhthu

பெண்கள் வாழமுடியாத மாநிலமாக தமிழகத்தை மாற்றியதுதான் திமுக ஆட்சியின் சாதனை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

அவரது அறிக்கை:

ராமநாதபுரத்தில் 12ம் வகுப்பு மாணவி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது. திமுக ஆட்சியில் பெண்கள் மீதான பாலியல் சீண்டல், வன்கொடுமை, படுகொலை, நகை பறிப்பு உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் நடைபெறாத நாளே இல்லை என்ற அளவிற்குச் சட்டம் ஒழுங்கு முற்று முழுதாகச் சீரழிந்துள்ளது.

நாட்டையே உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை, கும்மிடிப்பூண்டி பள்ளிச்சிறுமி பாலியல் வன்கொடுமை, கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை என்று அடுத்தடுத்து தொடரும் பெண்கள் மீதான கொடுமைகளின் உச்சமாகத் தற்போது பட்டப்பகலில் 12ம் வகுப்பு பள்ளி மாணவி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

திமுக ஆட்சியில் தொடர்ச்சியாக பெண்கள் மீது கொடுந்தாக்குதல் தொடுக்கும் துணிவு சமூக விரோதிகளுக்கு எங்கிருந்து வருகின்றது? பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் திமுக அரசு அதனை அலட்சியம் செய்வது ஏன்? ஒவ்வொரு முறையும் குற்றம் நடந்த பிறகு கடுமையான நடவடிக்கை எடுப்பது போலத் திமுக அரசு நடத்தும் நாடகம் இன்னும் எத்தனை நாட்களுக்குத் தொடரப்போகிறது?

பெண்கள் மீதான வன்முறைகள் நடைபெறாமல் தடுக்கவும், குறைக்கவும் திமுக அரசு என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளது? அனைத்துச் சமூகக் குற்றங்களுக்கும் அடிப்படை காரணமான மதுக்கடைகளை மூடுவதற்குத் திமுக அரசிற்கு இன்னும் என்ன தயக்கம்? பெண்கள் மீதான வன்முறையில் இந்தியாவிலே தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றியதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?

திமுக ஆட்சியில் கட்டுக்கடங்காத போதைப்பொருள் புழக்கத்தால் சாமானிய மனிதரையும் சமூக விரோதியாக உருமாற்றியதுதான் திமுக அரசின் நான்கு ஆண்டுகாலச் சாதனையாகும். திமுக ஆட்சி தொடரும் கடைசி நாள்வரை பெண்கள் மீதான இத்தகைய கொடும் வன்முறைகள் தொடருமோ? என்று பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். 12ம் வகுப்பு மாணவி கொலை வழக்கில் அதிவிரைவாகக் கடும் தண்டனையைப் பெற்றுத்தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனியும், இதுபோன்ற பெண்களுக்கு எதிரான கொடும் வன்முறைகள் தொடராமல் தடுக்க உடனடியாக முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாகக் கட்டுப்படுத்திச் சட்டம் ஒழுங்கை சீர்படுத்தம். பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கான சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
21 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழகம்

கோயம்புத்தூர், மதுரை மெட்ரோ திட்டம் தாமதம்: திமுக அரசின் அலட்சியம் காரணம் என நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

by Amizhthu 21 November 2025
written by Amizhthu

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்கள் தாமதமாகும் காரணம், திமுக அரசின் நிர்வாக அலட்சியமே எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நவம்பர் 20 அன்று வெளியிட்ட அறிக்கையில், “மத்திய அரசு திட்டங்களை நிராகரிக்கவில்லை; ஆனால், மாநில அரசு தரவேண்டிய முழுமையான திட்ட அறிக்கைகள் (DPR) தவறாகவும், தாமதமாகவும் அனுப்பப்பட்டது” என அவர் கூறினார். இதனால் மத்திய அரசு திட்டங்களை திருப்பி அனுப்பி, மேலும் விளக்கங்கள் கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கோயம்புத்தூரில் மெட்ரோ பாதைகள் மான சாலைகள்—போன்ற ஸ்டேட் பாங்க் ரோடு, காந்திபுரம்—மூலம் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டிருப்பது பொதுமக்கள் வசதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்தார். மதுரையில் மெட்ரோவுக்கு பதிலாக வேகப்பாதை பேருந்து திட்டம் (BRTS) பரிந்துரைக்கப்படுவது, மக்களின் எதிர்பார்ப்புக்கு எதிரானது எனவும் அவர் கூறினார்.

“திட்டங்களை சரியாக தயாரித்து அனுப்பியிருந்தால், இன்று இந்த நகரங்களில் மெட்ரோ சேவை தொடங்கியிருக்கும்” என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார். மத்திய அரசின் தரவுக் கோரிக்கை என்பது வழக்கமான நிர்வாக நடவடிக்கையாகும், திட்ட நிராகரிப்பு அல்ல என்றும் அவர் விளக்கினார்.

இந்த விவகாரம், மாநில-மத்திய அரசுகளுக்கிடையேயான கட்டமைப்பு திட்டங்களில் ஏற்படும் பதற்றங்களை பிரதிபலிக்கிறது. மாநில அரசின் செயல்திறன் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து புதிய கேள்விகளை எழுப்பும் வகையில், இந்த குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெறுகிறது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
21 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

மன்னார் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு

by Amizhthu 21 November 2025
written by Amizhthu

மாவீரர் வாரத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைத்து அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (20.11.2025) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்றது.

மன்னார் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஏற்பாட்டில் மாவீரர்களின் உறவுகளுடன் சுமார் 150க்கும் மேற்பட்டோரின் பங்குபற்றலுடன் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

இதன்போது மாவீரர்களை நினைவுகூர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இதில் கலந்துகொண்ட மாவீரர்களின் உறவுகள் கண்ணீர் மல்க உயிர் நீத்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதனையடுத்து, மாவீரர் தியாகங்கள் பற்றிய உரைகள் நடத்தப்பட்டதோடு, மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோருக்கான கௌரவங்கள் அளிக்கப்பட்டது.

பின்னர், இந்நிகழ்வின் நினைவாக மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த மதிப்பளிப்பு நிகழ்வில் அருட்தந்தையர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
21 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் புதன்கிழமை (19.11.2025) இரவு உயிரிழந்துள்ளார்.

by Amizhthu 21 November 2025
written by Amizhthu

தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்த சுதாகரின் மனைவி கடந்த 2018 ஆம் ஆண்டு கணவரின் பிரிவால் நோயுற்ற நிலையில் மரணமானார்.

இதனால் அநாதரவாக நிர்க்கதியாக நின்ற பிள்ளைகளை வயதான காலத்திலும் பராமரித்து வந்த பேத்தியாரான கமலா (வயது 75) என்பவர் நோயுற்று கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (19.11.2025) இரவு உயிரிழந்துள்ளார்.

தந்தையார் சிறையில் வாடுகின்ற நிலையில், பேத்தியும் இவ்வாறு உயிரிழந்த சம்பவம் சிறுவர்களாக இருக்கும் ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளுக்கு மாத்திரமின்றி தமிழ் மக்களுக்கு ஒரு பேரதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
21 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: நீதிமன்றம் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

by Amizhthu 21 November 2025
written by Amizhthu

திருகோணமலை கோட்டை வீதியில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விஹாரைக்குச் சொந்தமான தற்காலிக கட்டிடத்தின் தற்போதைய கட்டுமானங்களை அப்படியே விட்டுவிடவும், புதிய கட்டுமானங்கள் அல்லது மாற்றங்களைச் செய்யக்கூடாது என்றும் திருகோணமலை பிரதான நீதவான் எம்.என்.எம். சம்சுதீன் விஹாராதிபதிக்கு புதன்கிழமை (19.11.2025) உத்தரவிட்டார்.

திருகோணமலை பொலிஸ் நிலைய கண்காணிப்பாளர் ஜே.எல். அஜித் குமார, துறைமுக பொலிஸ் பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் தலைமை ஆய்வாளர் கே.டபிள்யூ.ஜி.எஸ்.கே. சமரசிங்க ஆகியோர் சமர்ப்பித்த பீ அறிக்கையை பரிசீலித்த பின்னர் நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

திருகோணமலையில் உள்ள டச்சு விரிகுடா கடற்கரையில் ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விஹாராதிபதி தற்காலிக கட்டிடம் கட்டுவது தொடர்பாக கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மைத் துறையால் தாக்கல் செய்யப்பட்ட புகாரைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையிலான தகராறு தொடர்பாக பொலிஸார் இந்த பீ அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.

முன்வைக்கப்பட்ட உண்மைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, தொடர்புடைய கட்டுமானத்தின் முன்னேற்றம் மற்றும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைக் குறிக்கும் அறிக்கையை 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு துறைமுக காவல்துறைக்கு நீதவான் உத்தரவிட்டார்.

இதற்கிடையில், சம்பந்தப்பட்ட நீதிமன்ற உத்தரவின் நகல்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஹாராதிகாரி தேரர் மற்றும் தயாக சபையின் செயலாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
21 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
கனடா

எல்லைகளைக் கையகப்படுத்த மத அடையாளங்களைப் பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது – கனடியத் தமிழர் பேரவை 

by Amizhthu 21 November 2025
written by Amizhthu

சட்டவிரோதமாக காணிகளைக் கையகப்படுத்துவதையும், எல்லைப்பகுதிகளை உரிமைகோருவதற்கு மத அடையாளங்களைப் பயன்படுத்துவதையும் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனக் கண்டனம் வெளியிட்டுள்ள கனடியத் தமிழர் பேரவை, இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை உடன் முடிவுக்குக் கொண்டுவந்து சகல சமூகங்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் தொடர்பில் கனடியத் தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அண்மையில் பௌத்தம் எனும் போர்வையில் திருகோணமலையில் பதிவாகியிருக்கும் குண்டர் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஒடுக்குமுறை மற்றும் வலுகட்டாயத் திணிப்புடன்கூடிய இந்நடவடிக்கை அப்பிராந்தியத்தில் பல தலைமுறைகளாக வாழும் தமிழ் மற்றும முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் கடும் அச்சத்தையும், பதற்றத்தையும் தோற்றுவித்துள்ளது.

அப்பகுதி மக்களின் வலுவான எதிர்ப்புக்கு மத்தியிலும் சட்டவிரோத நிர்மாணப்பணிகளை முன்னெடுப்பதற்கு வாய்ப்பேற்படுத்தி உதவும் வகையிலான இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மிகுந்த கரிசனை கொள்கின்றோம். தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் அச்சத்தை விதைக்கக்கூடிய இவ்வாறான செயற்பாடுகள், இலங்கையில் சிறுபான்மையின மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக நடாத்தப்பட்டுவதை மீளுறுதிப்படுத்துகின்றது.

சட்டவிரோத நிர்மாணப்பணிகளை ஆதரித்தல், சட்டவிரோதமாக காணிகளைக் கையகப்படுத்தல் மற்றும் எல்லைப்பகுதிகளை உரிமைகோருவதற்கு மத அடையாளங்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. அவ்வாறான நடவடிக்கைகள் சட்டத்தின் ஆட்சியை சீர்குலைப்பதுடன், இன ரீதியான முரண்பாடுகளைத் தீவிரப்படுத்தி, அர்த்தமுள்ள நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான நம்பிக்கையில் பின்னடைவை ஏற்படுத்துகின்றன.

இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட விகாரைக்கு அருகாமையில் உள்ள காணியில் சட்டவிரோத நிர்மாணப்பணிகளை முன்னெடுப்பதை உடன் நிறுத்துமாறு அவ்விகாரையின் விகாராதிபதிக்கு சுற்றாடல் அமைச்சு கடந்த ஒக்டோபர் மாதம் உத்தியோகபூர்வமாக அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறிருந்தும் சுற்றாடல் அமைச்சின் அறிவுறுத்தலுக்குப் புறம்பாக நிர்மாணப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டதுடன், புத்தர் சிலை ஒன்றை நிறுவுவதற்கான ஆயத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறானதொரு பின்னணியில் தமது அறிவுறுத்தல்களை உரியவாறு அமுல்படுத்துமாறும், சகல சமூகங்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்துமாறும், இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அதுமாத்திரமன்றி இவ்விவகாரங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும், திருகோணமலை உள்ளடங்கலாக நாடளாவிய ரீதியில் வாழும் சிறுபான்மையின மக்களின் உரிமைகள், கௌரவம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் சர்வதேச சமூகத்திடம் கேட்டுக்கொள்கின்றோம் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
21 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
சர்வதேசச் செய்திகள்

பிராம்ப்டன் நகர சபை தமிழீழத்தின் தேசியக் கொடியை அங்கீகரித்து அறிவித்துள்ளது

by Amizhthu 21 November 2025
written by Amizhthu

பிராம்ப்டன் நகர சபை தமிழீழத்தின் தேசியக் கொடியை அங்கீகரித்து அறிவித்துள்ளது

தமிழ் ஈழ தேசியக் கொடி தினம்

எங்கே: ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21 அன்று, உலகெங்கிலும் உள்ள ஈழத் தமிழர்கள் தமிழ் ஈழ தேசியக் கொடி தினத்தை நினைவுகூர்கின்றனர். இந்த நாள் ஈழத் தமிழ் தேசத்தின் கூட்டு அடையாளத்தையும், 1930களில் இருந்து தங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு எதிரான அவர்களின் தொடர்ச்சியான எதிர்ப்பையும் குறிக்கிறது.

உலகளாவிய தமிழர் உரிமைகளின் குரல் என்பது தமிழ் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதிக்காக வாதிடுவதற்கும், தமிழ் வரலாற்றைப் பாதுகாப்பதற்கும், காப்பகப்படுத்துவதற்கும், ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.

இந்த நாளில், தமிழ் ஈழ தேசியக் கொடி சடங்கு ரீதியாக ஏற்றப்படுகிறது, மேலும் இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பை மதிக்கும் வகையில் தொடர்ச்சியான நிகழ்வுகள் மற்றும் பட்டறைகள் நடத்தப்படுகின்றன, அதே நேரத்தில் தமிழ் வரலாறு, கலாச்சாரம் மற்றும் அடையாளம் குறித்த உரையாடலை வளர்க்கின்றன.

இந்த நடவடிக்கைகள் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், கொடி தினத்தின் முக்கியத்துவத்தைக் கொண்டாடுதல் மற்றும் ஈழத் தமிழர்கள், பிராம்ப்டன் குடியிருப்பாளர்கள் மற்றும் பரந்த சமூகத்தினரிடையே பகிரப்பட்ட புரிதல் மற்றும் ஒற்றுமை உணர்வை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

எனவே: பிராம்ப்டன் நகர சபையின் சார்பாக மேயர் பேட்ரிக் பிரவுன் என்ற நான், நவம்பர் 21, 2025 அன்று பிராம்ப்டன் நகரில் “தமிழ் ஈழ தேசியக் கொடி தினம்” என்று இதன் மூலம் அறிவிக்கிறேன்.

மேயர் பேட்ரிக் பிரவுன், பிராம்ப்டன் நகரம்

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
21 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
ஈழத்தின் வரலாறு

புலிகளின்குரல் வானொலி தமிழீழ தேசியத் தலைவரினால் உத்தியோக புர்வமாக தொடக்கிவைக்கப்பட்ட நாள் 21.11.1990

by Amizhthu 21 November 2025
written by Amizhthu

புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஓராண்டு பூர்த்தி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில்…

“எமது எதிரியான சிங்கள அரசும் அதன் கைக்கூலிகளான தமிழ்த் துரோகக் குழுக்களும் எமக்கு எதிராக மிகவும் கேவலமான விஷமப் பிரச்சாரங்களை ஆற்றி வருகின்றன. எதிரியின் பொய்ம்மையான கருத்துப் போருக்கு எதிராக உண்மையின் ஆயுதமாக எமது வானொலியின் குரல் ஒலிக்க வேண்டும். ஒரு சத்திய யுத்தத்தின் போர் முரசாக புலிகளின் குரல் ஒலிக்க வேண்டும்” என்றார்.

புலிகளின் குரல் வானோசையின் பத்தாமாண்டு நிறைவையொட்டி தமிழீழத்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தியினை   தட்டச்சு செய்து வெளியீடு செய்கின்றோம்.

மேலும் புலிகளின் குரல் வானொலியில் பணியாற்றி வீரசாவடைந்த  நாட்டுப்பற்றாளர்கள் மற்றும்  மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தி அவர்களுக்காக  சமர்ப்பிக்கின்றோம் இவ்வாழ்த்து செய்தியினை.

தமிழீழத்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வழங்கிய வாழ்த்துச்  செய்தி:

சிங்களப் பேரினவாத அரசானது, எமக்கு எதிராக ஓர் ஆயுதப் போரை மட்டுமன்றி
ஒரு கருத்துப் போரையும் நடத்தி வருகின்றது. உண்மைகளை மூடிமறைத்து, பொய்
யையும் ,புரட்டையும்  நுட்பமாகப் புனைந்து, சாணாக்கியத் திறமையோடு நடத்தப்படும் இந்தக் கருத்துப்போரின் முக்கிய குறிக்கோள் எமது விடுதலைப் போராட்டத்திற்கு களங்கம் கற்பிப்பதாகும்

ஒரு இனத்தின் தேச விடுதலைப் போர் என்ற பரிமாணத்தில் எமது விடுதலைப் போராட்டம் முழு உலகின் கவனத்தையும் ஈர்த்து  வருகிறது . அத்தோடு
போரியற் கலையிலும் எமது இயக்கம் பெற்று வரும் அபார சாதனைகள் சர்வ தேசத்தை திகைப்பிலும் ஆழ்த்தி வருகின்றது

இப்படியாக எமது இயக்கமும் எமது விடுதலைப் போராட்டமும் அனைத்துலக
ரீதியாக அடைந்து வரும் பெயரையும், புகழையும் சகிக்க முடியாத சிங்களப் பேரி
னவாதம், எமக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் ஒரு விசமத்தனமான
பிரச்சாரப் போரை நடத்தி வருகின்றது. வீரம் செறிந்த எமது விடுதலைப் படை யணிகளை குழந்தை இராணுவம் எனக் கொச்சைப் படுத்தியும், நுட்பம் மிக்க எமது போர் நடவடிக்கைகளை பயங்கரவாதம் எனச் சித்தரித்தும் எமது இயக்கத்திற்கு இழிவு தேட முற்படுகிறான் எதிரி.

அனைத்துலக ரீதியாக எமக்கு அணிதிரண்டு வரும் ஆதரவையும், அனுதாபத்தையும், தடுத்து நிறுத்தி உலக அரங்கினை எமக்கு எதிராகத் திருப்பிவிடுவதே எதிரியின் நோக்கம். சிங்களத்தின் பொய்யான பரப்புரைகளை விசாரணையின்றி விழுங்கிக்கொண்ட ஒரு சில நாடுகள் எமது இயக்கத்திற்கு  பயங்கரவாதமுத்திரை குததி தடை செய்தும் உள்ளன  இது எமக்கு ஏமாற்றத்தையும் கவலையையும் தருகின்றது

பொய்களையே ஆயுதமாகக் கொண்டு நடத்தப்படும் சிங்களத்தின் விசமத்தமான கருத் களதத விசமத்தனமான கருத்துப்போரை, முறியடிப்பதே இன்று நாம் எதிர்கொண்டு நிற்கும் முக்கிய சவாலாகும். எமது இயக்கத்தின் முக்கிய  மக்கள் தொடர்புச் சாதனமான புலிகளின் குரல்
வானோசையின் பணி பெரிதும் பாராட்டத்தக்கது

உண்மையின் குரலாக ஒலித்து, ஒடுக்கப்படும் எமது மக்களின் விடிவிற்காகக் குரல் எழுப்பி, எமது விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சிக்கும், எழுச்சிக்குமாக புலிகளின் குரல் ஆற்றி வரும் பணி அற்புதமானது. போர்ச்சூழலில் மிகவவும் நெருக்கடியான நிலையில் எத்தனையோ இடையூறுகளிற்கும் சாவல்களிற்கும் முகம் கொடுத்துகடந்த பத்து ஆண்டு காலமாக புலிகளின் குரல் மகத்தான சேவையாற்றி வந்துள்ளது

இவ்வானோசையின் மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக நின்று சேவையாற்றி  வரும் நிர்வாக பொறுப்பாளர்களுக்கும் , எழுத்தாளர்களுக்கும்  , கலைஞர்களுக்கும் எனது மனமுவந்த பாராட்டுக்கள். புலிகளின் குரல் வானோசையின் உன்னதமான விடுதலைப் பணி செம்மையாகத் தொடர எனது நல்லாசிகள்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
21 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
நிகழ்வுகள்

பிரித்தானியா வருகை தரும் பேரினவாதத்தின் (JVP=NPP) கோரமுகமான ரில்வின் சில்வவிற்கெதிரான மாபெரும் போராட்டம்

by Amizhthu 20 November 2025
written by Amizhthu

232025 ஞாயிறு பி.ப 1.00 மணி
Alperton community school
Ealing Road
Wembley
HAO 4PW

TCC-UK
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா
Tamil’s Coordinating Committee (UK)
+44 203 371 9313
www.tccuk.org

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
20 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இந்தியா

ரஷியா இந்தியாவுக்கு போர்விமான உற்பத்தி தொழில்நுட்பத்தை முழுமையாக மாற்ற ஒப்புதல் வழங்கியது

by Amizhthu 20 November 2025
written by Amizhthu

புதுட்டில்லி, நவம்பர் 20, 2025 — இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு திறன்களை மேம்படுத்தும் வகையில், ரஷியா தனது ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமான Su-57-இன் முழுமையான உற்பத்தி தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு மாற்ற ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பு துபாய் ஏர் ஷோ 2025 நிகழ்வில் வெளியிடப்பட்டது. இது ரஷிய அதிபர் விளாடிமிர் புடினின் இந்தியா வருகைக்கு முன்னதாக நிகழ்ந்தது.

ரஷியாவின் அரசாங்க ஆயுத ஏற்றுமதி நிறுவனமான ரோசோபோரோனெக்ஸ்போர்ட் (Rosoboronexport) இந்த ஒப்பந்தத்தை முன்மொழிந்துள்ளது. இதில் Su-57 விமானங்களை இந்தியாவில் உரிமையுடன் உற்பத்தி செய்வதுடன், அதன் முக்கிய தொழில்நுட்பங்கள் — என்ஜின்கள், ரேடார் அமைப்புகள், ஸ்டெல்த் பொருட்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய விமானக் கணினி அமைப்புகள் — அனைத்தையும் இந்தியாவுடன் பகிர்வது அடங்கும்.

“இந்தியாவில் Su-57 விமானங்களை உற்பத்தி செய்யும் வகையில் தொழில்நுட்பங்களை வழங்க தயாராக இருக்கிறோம்,” என ரோசோபோரோனெக்ஸ்போர்ட் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். “ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பங்களை முழுமையாக கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை இந்தியாவுக்கு வழங்குகிறோம். எந்த விதமான தடையும், பொருட்கள் தாமதமும் இல்லாமல்.”

ரஷியாவின் ராஸ்டெக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி செர்கெய் செமேசோவ் கூறுகையில், “இந்தியா மற்றும் ரஷியா பல ஆண்டுகளாக நெருங்கிய கூட்டாளிகள். இந்தியா தடைகளுக்கு உள்ளாக இருந்த போதும், அதன் பாதுகாப்பிற்காக நாங்கள் ஆயுதங்களை வழங்கியுள்ளோம். இன்று அந்த பாரம்பரியத்தை தொடர்கிறோம்” என்றார்.

ரஷியாவின் யூனிடெட் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷனின் இயக்குநர் வாடிம் படேகா, “இந்தியாவின் தொழில்நுட்ப தேவைகள் அனைத்தும் ஏற்கப்பட்டுள்ளன. இரண்டு இருக்கை கொண்ட Su-57E/FGFA பதிப்பை இந்தியாவுடன் இணைந்து உருவாக்கும் வாய்ப்பும் உள்ளது” என உறுதிப்படுத்தினார்.

இந்த ஒப்பந்தம் படிப்படியாக இந்திய உற்பத்தி திறனை மேம்படுத்தும் திட்டத்துடன் வருகிறது. ஆரம்பத்தில் விமானங்கள் தொகுக்கப்படும்; பின்னர் முழுமையான உற்பத்தி இந்தியாவில் நடைபெறும். இந்திய ஆயுதங்களை ஒருங்கிணைக்கும் வாய்ப்பும் இதில் உள்ளது.

இந்த நிகழ்வு, இந்தியாவின் பாதுகாப்பு கொள்கையில் ஒரு பரந்த போக்கை பிரதிபலிக்கிறது — பல்வேறு நாடுகளுடன் கூட்டாண்மையை விரிவுபடுத்தி, உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்தும் நோக்கம். ரஷியாவுடன் இந்தியா ஏற்கனவே பிரமோஸ் ஏவுகணை மற்றும் Su-30MKI போர் விமானங்களை இணைந்து உருவாக்கி வருகிறது. மேற்கத்திய நாடுகள் தொழில்நுட்ப பகிர்வில் கட்டுப்பாடுகளை விதிக்கும் சூழலில், ரஷியாவின் தடையற்ற ஒப்பந்தம் இந்தியாவின் தன்னிறைவு நோக்கத்திற்கு ஏற்றதாக இருக்கலாம்.

உலகளாவிய பாதுகாப்பு கூட்டணிகள் மாறிக்கொண்டிருக்கும் நிலையில், ரஷியா-இந்தியா Su-57 ஒப்பந்தம், தெற்காசியாவில் எதிர்கால விமானப் போர் வலிமையை மறுநிர்ணயிக்கக்கூடியது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
20 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
NEWS

A Decade-long Wait? Or a Misguided Political Strategy?

by Amizhthu 20 November 2025
written by Amizhthu

Introduction

For more than seven decades, the search for a political solution to the Tamil national question in Sri Lanka has continued without reaching any meaningful destination. International interventions, India’s regional calculations, and internal political transitions have all failed to address the long-standing aspirations of the Tamil people. Instead, each decade dissolves into another cycle of waiting, cultivating an atmosphere of uncertainty and disillusionment.

This article examines the current political landscape facing the Tamil nation and highlights the need for alternative pathways rooted in long-term, structured political strategy. It also analyzes the historical roots of the ethnic conflict, the Sinhala political establishment’s refusal to accept Tamil national rights, and the systemic political diversion that has prevented any sustainable solution.

The Root Causes: Denial, Concealment, and Political Diversion

The Sinhala Ruling Class and Its Foundational Refusal

Successive Sinhala-dominated governments in Sri Lanka have consistently refused to acknowledge that beyond the Sinhala-Buddhist identity, the Tamil, Muslim, and Hill Country Tamil communities possess legitimate national claims. This denial forms the first—and most significant—obstacle to reaching any durable solution.

Concealment of Root Causes

Instead of addressing structural crises such as:

• deep economic instability,

• overwhelming national debt,

• poverty,

• and institutional decay,

the ruling class repeatedly foregrounds superficial issues such as development, poverty alleviation, and drug eradication. These are deployed as political tools to divert public attention, preventing the Sinhala masses from understanding the underlying national problem and thereby safeguarding the ruling elite.

International Paralysis

Despite significant efforts by Tamil activists at platforms such as the UN and Geneva, the international community has not taken decisive steps. Mechanisms of international justice stretch across decades — while the nation that awaits justice risks fragmentation and decline.

The Sinhala-Buddhist Nationalist Fortress

Understanding the psychology of Sinhala political resistance toward Tamil aspirations is crucial. Their rejection is not rooted in a genuine concern for the nation but in the fear that accommodating Tamil aspirations will undermine their political survival.

The Dominance of the Vote Bank

No Sinhala politician is willing to risk losing the Sinhala vote bank. Any movement towards power-sharing is perceived as a threat to their future political existence.

The Political Authority of Buddhist Monastic Institutions

Buddhist monastic establishments serve as the spiritual and political center of Sinhala-Buddhist nationalism. Without their endorsement, no political solution can receive social or legal legitimacy.

Events such as:

• the postponement of Provincial Council elections,

• the removal of devolution provisions from constitutional reforms,

• and the derailment of new constitution-making efforts

are all manifestations of pressure exerted by these institutions.

The Need for an Alternative Path: Reimagining Civil Society’s Role

There is now a harsh realization that electoral politics alone cannot resolve the Tamil national question. A new political space beyond traditional party politics has become indispensable.

Reframing the Discourse

Describing it merely as “the Tamil people’s issue” only reinforces a sense of alienation among the Sinhala majority. Instead, it must be reframed as:

Sri Lanka’s national crisis — the failure of a multi-ethnic state to embrace coexistence.

Constructive Dialogue

Tamil representatives must develop the capacity to communicate their political claims to Sinhala civil society, intellectuals, and religious leaders through constructive and positive dialogue. The approach of constant confrontation must give way to the pursuit of common ground.

Intellectual Leadership

A broad, non-partisan platform of:

• intellectuals,

• thinkers,

• human rights advocates,

• legal experts,

• and social activists

is required. Although political parties may support them in the background, the platform must be free from personal ambitions.

A New Strategy for Engagement: Dialogue with Buddhist Leadership

Avoiding Direct Confrontation

Direct communication with Buddhist monastic authorities often creates a “glass barrier” due to religious and ceremonial formalities, preventing honest and in-depth discussions.

Engaging Through Trusted, Non-Political Intermediaries

Tamil leadership can request Buddhist institutions to appoint neutral representatives — intellectuals and legal scholars who are respected by the Sinhala majority — for meaningful and structured dialogue.
Through these discussions,

• Points of Convergence (possible agreements) and

• Points of Divergence (areas of conflict)

can be identified objectively.
This enables civil society to gradually plant new ideas within the Sinhala public consciousness, beyond the limitations of electoral politics.

Conclusion: From the Edge of Annihilation to the Dawn of Liberation

Tamils can no longer remain trapped within the historical cycle of waiting—
a cycle that has only pushed us toward gradual destruction.
The time has come to end the outdated political habits that have held us back for decades:

• Waiting without action

• Passive hope and helpless expectation

• Extending time without strategy

• The illusion that foreign powers will solve our problems

“A nation that waits endlessly for others to deliver its freedom eventually gets consumed by time.”

This historical truth can no longer be ignored.

Why did other communities progress, while we fell behind?

Although living within the same country, both Sinhalese and Muslims advanced through disciplined, collective, and strategic action:

• Institutionally: Schools, colleges, business networks, cultural foundations

• Economically: Strong business communities, property ownership, investment systems, entrepreneurship

• Politically: Unity of purpose and a consistent national vision

Meanwhile, the Tamil community continues to face severe internal obstacles:

• Political stagnation: Absence of new ideas and modern strategies

• Social fragmentation: Lack of unity and responsibility

• Generational disconnect: Weak dialogue between youth and elders

• Dependency on external actors: Expecting outsiders to resolve core problems

As a result, we have been unable to build the political, economic, and social structures we desperately need.

The key to liberation lies in our own hands

Liberation cannot be built through blind trust in the actions of foreign powers.
The true strength of Tamil political survival rests in knowledge, unity, planning, and action.

Paths to the New Era

1. Building an Intellectual Leadership

Scholars, researchers, thinkers, social activists, and visionary political leaders must work together to form a collective intellectual leadership that guides the nation forward.

2. Strengthening the Social Foundation

Transformation does not flow only from the top.
It must rise from the people — from youth, civil society, and grassroots movements.

3. A New Culture of Dialogue Based on Respect

Framing Sinhalese people as enemies will not move us forward.
Our true challenge lies in institutional racism and structural oppression, not ordinary people.
A new dialogue rooted in truth, understanding, and mutual respect is essential.

4. Breaking the Cycle of Vote-Bank Ethnic Politics

Election-time emotional manipulation must be rejected firmly.
The only power capable of defeating this pattern is public awareness.

Liberation: A History to Be Created, Not a Gift to Be Received

If Tamils build upon these foundations, a new social and political era can emerge — one that is:

• Dignified

• Knowledge-driven

• Economically strong

• Politically united

This is the rebirth of Tamil nationalism.

Liberation is not a miracle delivered from afar.
It is a history shaped by strategic planning, unwavering determination, and collective effort.

The time has come for Tamils to write their own destiny.

╭────────────────────╮
Written by  Eelaththu Nilavan
╰────────────────────╯
20/11/2025


Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
20 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
Newer Posts
Older Posts

Copyright © amizhthu.com 2026

அமிழ்து
  • முகப்பு
  • NEWS
  • நாட்காட்டி
  • தமிழீழம்
    • மாவீரர்கள்
    • நினைவு வணக்கம்
    • அகவை வாழ்த்து
    • குருதிச் சுவடுகள்
    • அடிக்கற்கள்
    • கரும்புலிகள்
    • புகழ் வணக்கம்
    • ஈழத்தின் வரலாறு
    • தமிழ் இனப்படுகொலை
  • தமிழகம்
  • புலம்பெயர் தமிழர்கள்
  • இந்தியா
  • இலங்கை
  • சர்வதேசம்
    • அமெரிக்கா
    • கனடா
    • ஆசியா
    • ஆப்பிரிக்கா
    • ஆஸ்திரேலியா
    • ஐரோப்பா
    • பிரித்தானியா
    • மத்திய கிழக்கு
  • கட்டுரைகள்
  • கவிதை
  • காணொளி செய்திகள்
  • நிகழ்வுகள்
  • மங்கையர் உலகம்
  • விளையாட்டு

Shopping Cart

Close

No products in the basket.

Close
 

Loading Comments...
 

    %d