மாவீரர் வாரத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைத்து அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (20.11.2025) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்றது.

மன்னார் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஏற்பாட்டில் மாவீரர்களின் உறவுகளுடன் சுமார் 150க்கும் மேற்பட்டோரின் பங்குபற்றலுடன் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

இதன்போது மாவீரர்களை நினைவுகூர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இதில் கலந்துகொண்ட மாவீரர்களின் உறவுகள் கண்ணீர் மல்க உயிர் நீத்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
- ஹார்முஸ் நெருக்கடி: உலகளாவிய எரிசக்தியின் இராணுவமயமாக்கல் மற்றும் போக்குவரத்து முடக்கம்
- சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்ட ஏர் ஏசியா விமானத்தின் மீது பறவை மோதியதில் இன்ஜின் பகுதி சேதம் அடைந்தது.
- நினைவு வணக்கம் | ஜனவரி 21
- பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இராமநாதன் அர்ச்சுனாவை பதவி நீக்கம் செய்தல்
- செம்மணி மனிதப் புதைகுழித் தளத்தின் அகழ்வாராய்ச்சியில் மேலும் ஆறு கூடுகள் அடையாளம் காணப்பட்டன!
- பனிப்புயல் தாக்கம்: இங்கிலாந்து விமான நிலையங்களில் பரவலான ரத்து, தாமதம்

அதனையடுத்து, மாவீரர் தியாகங்கள் பற்றிய உரைகள் நடத்தப்பட்டதோடு, மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோருக்கான கௌரவங்கள் அளிக்கப்பட்டது.

பின்னர், இந்நிகழ்வின் நினைவாக மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த மதிப்பளிப்பு நிகழ்வில் அருட்தந்தையர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.


