அமிழ்து
www.amizhthu.com
  • முகப்பு
  • NEWS
  • நாட்காட்டி
  • தமிழீழம்
    • மாவீரர்கள்
    • நினைவு வணக்கம்
    • அகவை வாழ்த்து
    • குருதிச் சுவடுகள்
    • அடிக்கற்கள்
    • கரும்புலிகள்
    • புகழ் வணக்கம்
    • ஈழத்தின் வரலாறு
    • தமிழ் இனப்படுகொலை
  • தமிழகம்
  • புலம்பெயர் தமிழர்கள்
  • இந்தியா
  • இலங்கை
  • சர்வதேசம்
    • அமெரிக்கா
    • கனடா
    • ஆசியா
    • ஆப்பிரிக்கா
    • ஆஸ்திரேலியா
    • ஐரோப்பா
    • பிரித்தானியா
    • மத்திய கிழக்கு
  • கட்டுரைகள்
  • கவிதை
  • காணொளி செய்திகள்
  • நிகழ்வுகள்
  • மங்கையர் உலகம்
  • விளையாட்டு
  • 0
Category:

செய்திகள்

இலங்கை

தீவு முழுவதும் கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் வேலைநிறுத்தம். கதிரியக்கவியல் துறை முடங்கியது.

by Amizhthu 22 January 2026
written by Amizhthu

மளிகவத்தை சிறுநீரக வைத்தியசாலை பிரதி பணிப்பாளரின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரி்வித்தும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குதமாறு வசலியுறுத்தியும் புதன்கிழமை (21-01-2026) தினம் நாடளாவிய ரீதியில் உள்ள அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றும் கதிரியல் தொழிநுட்பவியளார்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராடத்தை முன்னெடுத்திருந்தனர்.

வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, நேற்றைய தினம் சகல வைத்தியசாலைகளிலும் கதிரியக்கச் சேவைகள் முடங்கியிருந்தன. தகுதியற்றவர்களைக் கொண்டு கதிரியல் பரிசோதனைகளை முன்னெடுத்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சார்ள்ஸ் நுகவெல, அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி பாரிய முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகக் அரச கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. தகுதியான அதிகாரிகள் இருக்கும்போது, கதிரியக்கப் பிரிவின் பொறுப்பதிகாரிக்குத் தெரியாமல் வெளியாட்களைக் கொண்டு கதிரியல் பரிசோதனைகளை முன்னெடுத்தமை, அரச சொத்துக்களை ஆபத்துக்குள்ளாக்கியமை மற்றும் அம்பியூலன்ஸ் வண்டிகளைத் தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தியமை போன்ற 8 பிரதான குற்றச்சாட்டுகள் முன்வைத்து இந்த தொழிற்சங்க போராட்டதைடதை முன்னெடுத்திருந்தனர்.

அதிகாரியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், குறித்த அதிகாரியைப் பதவியிலிருந்து நீக்குமாறு கோரியும் நேற்று 24 மணிநேர அடையாள வேலைநிறுத்ததில் ஈடுபட்டிருந்தனர். எனினும் இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சார்ள்ஸ் நுகவெல, வைத்தியசாலை கதிரியக்க உத்தியோகத்தர்கள் மேலதிக நேரக் கடமைகளில் இருந்து விலகியுள்ளதால், நோயாளிகளின் உயிரைப் பாதுகாக்கவே தான் மாற்று நடவடிக்கைகளை எடுத்ததாகக் குறிப்பிட்டார்.

அவசர எக்ஸ்-ரே பரிசோதனைகளுக்காக அழைக்கப்பட்டும் உத்தியோகத்தர்கள் வராதது குறித்து அமைச்சுக்குத் தெரியப்படுத்தியமையே அவர்கள் என் மீது கோபம் கொள்ளக் காரணம். நோயாளிகளின் நலன் கருதி, சர்வதேச தரச்சான்றிதழ் பெற்ற தனியார் வைத்தியசாலை உத்தியோகத்தர்களைக் கொண்டு தன்னார்வ அடிப்படையில் (ஊதியமின்றி) சேவைகளைப் பெற்றுக்கொண்டேன் என அவர் விளக்கமளித்திருந்தார். எவ்வாறொனினும் நேற்றைய தினம் வெளிநோயாளர் பிரிவு மற்றும் மாதாந்த சிக்கைக்காக வருகைத்தந்திருந்த நோயாளர்கள் பலர் இந்த பணிப்பகிஷ்கரிப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

மேலும் ஒரு சில பகுதிகளில் பொதுமக்கள் அவசர சிகிச்சைகளுக்காக கதிரியல் பரிசோதனைகளைத் தனியார் நிலையங்களில் அதிக பணம் கொடுத்துப் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்த இழுபறியால் தூர இடங்களிலிருந்து வருகைத் தந்திருந்த நோயாளர்களும் சிகிச்சையின்றி வீடு திரும்பியிருந்தனர். இருப்பினும் சுகாதார அமைச்சும், அமைச்சின் உயர் அதிகாரிகளும் உரிய விசாரணை மேற்கொண்டு, தீர்வு காணத் தவறியுள்ளதாகச் தொழிற்சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
22 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

இலங்கையின் நிட்டம்புவாவில் 61 கிலோ ஐஸ் போதைப் பொருளுடன் பாதாள உலகக் கும்பலுடன் தொடர்புடைய ஒருவர் கைது.

by Amizhthu 22 January 2026
written by Amizhthu

வெளிநாடு சென்று தலைமறைவாகியுள்ள பாதாள உலகக்குகுழுவைச் சேர்ந்த பாரியளவான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிவந்த நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.

கம்பஹா, நிட்டம்புவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட பாரிய சோதனை நடவடிக்கையின் போது, சுமார் 61 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பின்னகொல்லவத்தை பகுதியில் செவ்வாய்க்கிழமை (20-01-2026) பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மேல் மாகாண (வடக்கு) விசேட நடவடிக்கைப் பிரிவு அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட சோதனையின் போது, முச்சக்கர வண்டியோன்றில் கடத்தி செல்லப்பட்ட 61 கிலோகிராம் 836 கிராம் எடையுள்ள ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பின்னகொல்லவத்தை, நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணைகளுக்கமைய சந்தேகநபர்கள், வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள திட்டமிட்ட குற்ற கும்பல்கள் மற்றும் பாரியளவான போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணி வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த பாரிய கடத்தலின் பின்னணியில் உள்ள ஏனைய நபர்களைக் கண்டறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
22 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 41 கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

by Amizhthu 22 January 2026
written by Amizhthu

போக்குவரத்திற்கும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் இடையூறாக வீதிகளில் அலைந்து திரிந்த கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தும் நோக்கில், புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரால் செவ்வாய்க்கிழமை (20-01-2026) இரவு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அண்மையில் இரவு நேரங்களில் வீதிகளில் நிற்கும் கால்நடைகளால் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டிருந்தன. இதனைத் தடுக்க புதுக்குடியிருப்பு பிரதேச சபை, பொலிஸாரின் ஒத்துழைப்புடன் பிரதேச எல்லைக்குட்பட்ட வீதிகளில் கால்நடைகளை மடக்கிப் பிடிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.

இந்நடவடிக்கையின் போது மாடு கன்றுகள் என மொத்தமாக 41 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன. அவை தற்போது புதுக்குடியிருப்பு பிரதேச சபை வளாகத்தில் கட்டப்பட்டுள்ளன.

முன்னதாக மக்களிடம் பல முறை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தாலும், உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை கட்டுப்படுத்த தவறியிருந்தனர். இதனால் தபிசாளர் வேலாயுதம் கரிகாலன் தலைமையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பிடிக்கப்பட்ட கால்நடைகளை மீட்டுக்கொள்ள உரிமையாளர்கள் ஒருவர் ஒரு கால்நடைக்கு 10,000 ரூபா தொகையை பிரதேச சபைக்கு செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீதிகளில் கால்நடைகள் நிற்பதால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கவும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் பாதுகாக்கவும், இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என தபிசாளர் தெரிவித்தார்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
22 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

நில ஆக்கிரமிப்பு மற்றும் மொழி உரிமை மீறலுக்கு சட்டரீதியாக துணைபோகும் திணைக்களமாக தொல்லியல் திணைக்களம் செயற்பட்டு வருகிறது.

by Amizhthu 22 January 2026
written by Amizhthu

வடகிழக்கில் உள்ள சிறுபான்மை இன மக்களின் நில ஆக்கிரமிப்பு மற்றும் மொழி உரிமை மீறலுக்கு சட்டரீதியாக துணைபோகும் திணைக்களமாக தொல்லியல் திணைக்களம் செயற்பட்டு வருகிறது என சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் பற்று பிரதேச சபையின் 2026 ம் ஆண்டுக்கான முதலாவது சபை அமர்வில் பிரதேச சபையின் அனுமதி பெறப்படாமல் நடப்பட்ட தொல்லியல் திணைக்களத்தின் பெயர் பலகைகளை அகற்றுவது தொடர்பாக கொண்டுவரப்பட்ட பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் குழப்பத்தையும், முரண்பாடுகளையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. வடகிழக்கில் உள்ள சிறுபான்மை இன மக்களின் நில ஆக்கிரமிப்பு மற்றும் மொழி உரிமை மீறலுக்கு சட்டரீதியாக துணைபோகும் திணைக்களமாக தொல்லியல் திணைக்களம் செயற்பட்டு வருகிறது.

1987, 15ம் இலக்க சட்டத்தின் பிரகாரம் பிரதேச சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை மீறி பிரதேச சபையின் அனுமதி இன்றி தொல்லியல் திணைக்களம் பெயர்ப் பலகைகளை இட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர் பலகைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள், பெயர் பலகைகளை அகற்றிய வர்கள் என்று கூறி 56 பேரை கைது செய்துள்ளனர்.முன்னர் இருந்த எந்த அரசாங்கங்களும் செய்யாத செயற்பாட்டை தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் செய்துள்ளது.

இதைவிட தொல்லியல் திணைக்களத்தின் ஊடாக நடப்பட்ட அனைத்து பெயர் பலகைகளிலும் மொழி உரிமை மீறப்பட்டுள்ளது. இந்த நாட்டின் அரச கரும மொழிகளாக தமிழ், சிங்கள மொழிகள் காணப்படுகிறது, அதேபோல் வடகிழக்கின் நிர்வாக மொழியாக தமிழ் மொழியே காணப்படுகிறது.

இவ்வாறு இருக்கும் நிலையில் வடகிழக்கின் நிர்வாக மொழியான தமிழ் மொழியை முதலாவதாகவும், சிங்கள மொழியை இரண்டாவதாகவும் எழுதி இருக்க வேண்டும். ஆனால் தொல்லியல் திணைக்களத்தின் பெயர் பலகைகளில் மூன்றாவதாகவே தமிழ் மொழி அடையாளப்படுத்தும் பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் ஆட்சியின் கீழ் இருக்கும் பிரதேச சபைகளின் அதிகாரங்களை மீறி அரசியல் நோக்கங்களுக்காக, பிரதேச சபை சட்டங்களை மீறி தொல்லியல் திணைக்களம் செயற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதனை வன்மையாக கண்டிக்கின்றேன்.

தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர் பலகைகள் அகற்றப்பட்டு பிரதேச சபையின் அனுமதி பெற்று, தமிழ் மொழியை முதன்மைப் படுத்தி மீளவும் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
22 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

“சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுதந்திரத்தை உறுதி செய்யுங்கள்.” இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

by Amizhthu 22 January 2026
written by Amizhthu

சட்டமா அதிபரைக் குறிவைத்து அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் பதிவுகள் குறித்து இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. குறித்த சமூக ஊடகப் பதிவுகள், சட்டமா அதிபர் அலுவலகத்தின் சுயாதீனத்தன்மையில் நியாயமற்ற முறையில் தலையிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு அந்த சங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

குற்றவியல் விவகாரங்களைப் பொறுத்தமட்டில், சட்டமா அதிபர் ஒரு பகுதியளவு நீதித்துறை சார்ந்த கடமையை ஆற்றுகிறார் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். விசாரணை அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்படும் தகவல்களின் அடிப்படையில், ஒரு சந்தேக நபருக்கு எதிராகக் குற்றம் சுமத்துவதா அல்லது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதா என்பதை சட்டமா அதிபர் தீர்மானிக்க வேண்டும்.

அவ்வாறு செய்யும்போது, அந்தத் தகவல்கள் சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவையா என்பதையும், அவற்றின் அடிப்படையில் தண்டனை கிடைப்பதற்கான நியாயமான வாய்ப்புகள் உள்ளனவா என்பதையும் அவர் பரிசீலிக்க வேண்டியுள்ளது.

சட்டமா அதிபரின் தீர்மானங்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பேராணை அதிகார வரம்பின் மூலமாகவோ அல்லது உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் அதிகார வரம்பின் மூலமாகவோ மீளாய்வு செய்யப்படக் கூடியவை.

நீதித்துறை அதிகாரிகள் மற்றும் பகுதியளவு நீதித்துறை அதிகாரிகளால் சட்டத்திற்கு இணங்க எடுக்கப்படும் தீர்மானங்கள், சில சமயங்களில் பொதுமக்களின் கருத்தைப் பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

சட்டமா அதிபரின் அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் எந்தவிதமான தேவையற்ற தலையீடுகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தினதும் சட்ட அமலாக்க முகவர் அமைப்புகளினதும் கடமையாகும் என இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் உறுதியாக நம்புகிறது.

நம் நாட்டில் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்கு இன்றியமையாத சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் சுயாதீனத்தன்மையை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

நீதி மற்றும் சுதந்திரம் ஆகிய உன்னதக் கொள்கைகளைப் பாதுகாப்பதற்காக, சட்டமா அதிபர் அலுவலகத்தின் சுயாதீனத்தன்மை மற்றும் கண்ணியம் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
22 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

இலங்கையின் அம்பாறையில் கடல் அரிப்பு: அரசாங்கத்தின் உடனடி நடவடிக்கை தேவை – அமைச்சர் அரியநாயகம் கவீந்திரன் கோடீசுவரன்

by Amizhthu 22 January 2026
written by Amizhthu

அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் மற்றும் காரைதீவு பிரதேசங்கள் கடலரிப்பில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கண்ணுக்கு தெரியும் இந்த அனர்த்தங்களை தடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர் அரியநாயகம் கவீந்திரன் கோடீசுவரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21-01-2026) நடைபெற்ற தித்வா புயலின் பின்னரான நாட்டில் தற்போதைய நிலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

அம்பாறை மாவட்டத்தில் கடலரிப்பினால் சில பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. திருக்கோவில், காரைதீவில் பிரதேசத்தில் 200, 300 மீற்றர் கரையோரப் பகுதி கடலரிப்பில் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மாளிகைக்காட்டில் ஜனஸாக்கள் கடலில் அள்ளுண்டு போகின்றன. இவ்வாறான இடத்தைக்கூட பாதுகாக்க முடியாத நிலையில் இருக்கின்றோம். கண்ணுக்கு முன்னால் நடக்கும் அனர்த்தங்களை தடுக்க வேண்டும் என்று நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம்.

அதேவேளை, தித்வா நாட்டில் மிகவும் பாதிப்புகளை ஏற்படுத்திய அனர்த்தமாக விளங்கியது. அம்பாறை மாவட்டத்தில் பல இடங்களிலும் இந்த அனர்த்தம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அனர்த்தத்தின் பின்னர் 10 நாட்கள் வரையில் மின்சாரம் தடைப்பட்டும், தொலைத் தொடர்புகள் இன்றியும், வீதிகள் போக்குவரத்து செய்ய முடியாத நிலையுமே இருந்தது. இந்த நேரத்தில் அனர்த்தத்தை தெரிவிப்பதற்கு எவ்வித வசதிவாய்ப்புகளும் இருக்கவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக அனர்த்தம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க முடியாத நிலவியது. ஆனால் அந்த அதிகாரிகளினால் குறிப்பிட்ட காலக்கெடு விதிக்கப்பட்டு, அதற்குள் அனர்த்தம் தொடர்பில் அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தில் பண்ணையாளர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டிருந்தனர். பண்ணைகளில் மாடுகள் இறந்திருந்த நிலையைில் அவர்களுக்கு அது தொடர்பில் மிருக வைத்தியர் அல்லது அதிகாரிகளுக்கு அறிவிக்க வசதிகள் இருக்கவில்லை. இவ்வாறான நிலைமையில் அந்த மக்களுக்கு இதுவரையில் இழப்பீடுகள் கொடுக்கப்படவில்லை. ஆனால் தென்பகுதியில் கால நீடிப்புகள் வழங்கப்பட்டு பண்ணையாளர்களுக்கு நிவாரணங்களும் வழங்கப்பட்டுள்ள போதும், அம்பாறை மாவட்டத்தில் அவ்வாறு நிவாரணம் கிடைக்கவில்லை.

வீடுகள் பாதிக்கப்பட்டிருந்த போது அதனை புகைப்படம் எடுத்திருந்தீர்களா என்று அதிகாரிகள் கேட்கின்றனர். ஆனால் அந்த நேரத்தில் மின்சார வசதி, தொலைத் தொடர்பு வசதிகள் இல்லாத நிலைமையே காணப்பட்டது. இதனால் இந்த நிலைமையை கருத்திற்கொண்டு அந்த மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
22 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

மோட்டார் ஒருங்கிணைப்புத் தளபதி லெப்.கேணல் இசைக்குயிலன் உட்பட ஏனைய மாவீரர்களின் நினைவில்…

by Amizhthu 22 January 2026
written by Amizhthu

22.01.2009 அன்று தாய் மண்ணின் வெவ்வேறு பகுதியிலும், வெவ்வேறு கள சம்பவங்களின் போதும் வீரச்சாவைத்,தழுவிக்கொண்ட மோட்டார் ஒருங்கிணைப்புத் தளபதி லெப்.கேணல் இசைக்குயிலன் உட்பட ஏனைய மாவீரர்களின் 17’ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

​தாயக  விடுதலை  கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள்…..!​

லெப். கேணல் இசைக்குயிலன் (குருகுலசிங்கம் குணானந்தன் – திருகோணமலை)

மேஜர் நிலவன் / இசைக்கடல் (மேரியோசெப் சார்ள்ஸ்யோகு – மன்னார்)

மேஜர் காந்தரூபன் (சிறிகானந்தராசா ரஜீந்திரன் – அம்பாறை)

மேஜர் தமிழ்மாறன் / இசைக்கோன் (தங்கவேல் சுரேஸ்குமார் – திருகோணமலை)

கப்டன் காண்டீபன் (மாசிலாமணி யூட்ஜொனி – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் ஈழக்குன்றன் (இரத்தினசிங்கம் டிலோசன் – 2ம் வட்டாரம், கைவேலி, புதுக்குடியிருப்பு)

லெப்டினன்ட் தமிழின்பன் (சிங்கராசா பகீரதன் – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் தமிழ்க்குமரன் (முத்துக்குமார் சுரேஸ்குமார் – பாலிநகர், வவுனிக்குளம்)

லெப்டினன்ட் இசைப்பருதி (பேனார்ட் சாலினி – மாமூலை, முள்ளியவளை, முல்லைத்தீவு)

வீரவேங்கை பைந்துளசி / வல்லொளி (செல்வராசா யாழினி – செல்விபுரம், பூநகரி)

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
22 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
புலம்பெயர் தமிழர்கள்

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற தமிழர் திருநாள் பொங்கல் விழா 2026!

by Amizhthu 22 January 2026
written by Amizhthu

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் திருநாள் 2026!

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையானதும், தமிழ்ப் புத்தாண்டுமான தமிழர் திருநாள் பொங்கல் விழாவானது 18.01.2026 ஞாயிறு அன்று பேர்ண் மாநிலத்தில் சுவிஸ் வாழ் தமிழர் வர்த்தக நிறுவனங்களின் ஆதரவில் அரங்கம் நிறைந்த உறவுகளுடன்  சிறப்பாக நடைபெற்றது. 

சுவிஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பு மற்றும் சுவிஸ் தமிழர் இல்லம் இணைந்து நடாத்திய இப் பொங்கல் விழாவானது 13:00 மணிக்கு மங்கள விளக்கேற்றலுடன் தமிழர் பண்பாட்டிற்கமைய பொங்கல் பொங்கி அனைவரும் உணவருந்திய பின்னர் 15:30 மணியளவில் பொதுச்சுடரேற்றலுடன், நிகழ்வுச்சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

இவ் விழாவில் எழுச்சிப்பாடல்கள், எழுச்சி நடனங்கள், மேற்கத்தேய மற்றும் திரையிசை நடனங்கள், கவியரங்கம் போன்றவற்றுடன் காலத்தின் தேவைகருதிய சிறப்புரையும் இடம்பெற்றிருந்தது. நிகழ்வின் இறுதியாக தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் மகிழ்வுணர்வுடன் இனிதே நிறைவுபெற்றன.

தமிழர் திருநாள் 2026 நிகழ்வை நடாத்த பல்வேறு வகைகளிலும் ஒத்துழைப்பு நல்கிய அனுசரணையாளர்கள், ஆதரவாளர்கள், இன உணர்;வாளர்கள் உள்ளிட்ட அனைத்து எமது உறவுகளுக்கும் எமது பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
22 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
புலம்பெயர் தமிழர்கள்

தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து தியாகிகளின் தியாகத்தின் 33வது ஆண்டு நினைவு நாள் பெல்ஜியத்தில் நடைபெற்றது.

by Amizhthu 22 January 2026
written by Amizhthu

பெல்சியத்தில்  நடைபெற்ற தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 33ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு.  

தளபதி கேனல் கிட்டு உட்பட பத்து வீரவேங்கைகளின் 33 ஆவது  ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திங்கள் (19.01.2025) அன்று பெல்சியத்தில்    உணர்வுபூர்வமாக  நினைவுகூரப்பட்டது. ஆரம்ப நிகழ்வுகளுடன் தளபதி கேணல். கிட்டு அவர்கள் ஆற்றிய போராட்ட, அரசியல் நகர்வுகள் பற்றிய சிறப்புரையை திருமதி பிரபாகாரி அவர்கள் வழங்கினார். தளபதி.கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவுகளைத் தாங்கிய கவிதைகள் மற்றும் பேச்சுக்கள் இடம்பெற்றது. தாயக எழுச்சிப் பாடல்களும் இசைக்கப்பட்டன. இறுதியாக “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடல் இசைக்கப்பட்டு, எமது தாயக மந்திரமான “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” தாரக மந்திரத்துடன் இனிதே நிறைவு பெற்றது

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
22 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
புலம்பெயர் தமிழர்கள்

கடலில் கரைந்து விட்ட காலங்களும், வரலாற்றில் தடம் பதித்துவிட்ட நினைவுகளும். – நினைவுகள் பாகம் 1

by Amizhthu 22 January 2026
written by Amizhthu

தமிழீழப்போரிற்கு உயிரூட்டிய இரத்தநாளங்களின் ஈகவரலாறு. கடவின் மடியில் கடலின்மடியில் குழுமம் வெளியிடும் – நினைவுகள்..


எழுத்து: எஸ்.கே உலகெங்கும் 01.03.2026

தமிழீழக் கடலோடிகளின் வாழ்வு கத்திமேல் நடப்பதை விடக் கொடியது. அதுவும் தமிழீழத்திற்கு வலுவும் வளமும் சேர்த்துக்கொண்டு, பன்னாட்டுக் கடற்பரப்பில் நடமாடும் வல்லாதிக்க அரக்கர்களின் கைகளுக்குள்ளால் மீண்டு வருதலென்பது கடுந்தவம்.

உணவு உண்ண நேரமின்றி, உறங்க நேரமின்றி புயலோடும் காற்றோடும் மோதியபடியும், எதிரியின் கண்ணுக்கு நாடகமாடியபடியும், அவர்கள் சுமந்துவரும் பொருட்களே மண்மீட்புப் போருக்கு வலுச்சேர்த்தன.

ஒவ்வொரு கப்பலும் சுமந்துதிரிந்த பொருட்களும் கதைகளும் ஓராயிரம். அவை என்றுமே கரைவராத கப்பல்கள். என்றோ ஓர்நாள் தமிழீழம் விடியும்போது கரையேறுவோம் என்ற இலட்சியக்கனவோடு சுழன்று திரிந்த தமிழீழக் கடலோடிகளைச் சுமந்த கப்பல்கள். மண்ணை மீட்பதற்காகத் ஒவ்வொன்றாகத் தலைவன் அணிதிரட்டிய கப்பல்கள்.

கண்ணுக்குத் தெரியாமலே கரைந்துபோன கப்பல்களின் கதைகளாக, மண்மீட்புப் போருக்கு உரமூட்டிய இரத்தநாளங்களின் ஈகவரலாறாக…

தமிழீழக் கடலோடியும், நீண்டகாலத் தலைமை அதிகாரியுமாகிய எஸ்.கே யின் எழுத்தில் நினைவுகள்

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
22 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
அகவை வாழ்த்து

அகவை வாழ்த்து – ஜனவரி 22

by Amizhthu 22 January 2026
written by Amizhthu

இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை காந்தன்
செல்வராசா காந்தன்
அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 02.08.1986
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை சின்னண்ணா
சின்னத்துரை காங்கேயன்
கொல்லன்கலட்டி, மாவிட்டபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.07.1987
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் அகிலன்
பொன்னுத்துரை நற்குணேஸ்வரன்
உதயநகர் கிழக்கு
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.09.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் உத்தவா
தங்கவடிவேல் சந்திரகுமார்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.04.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை யமுனா
தியாகராசா சீதாலட்சுமி
சாஸ்திரிகூழாங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 10.07.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் ஜஸ்ரின்
கிருஸ்ணபிள்ளை சுதாகர்
கொற்றாவத்தை, அல்வாய் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் தங்கப்பன் (ஜெரோம்)
அப்புக்குட்டி ரவி
சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.02.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் வீரமணி
செல்லத்துரை பார்த்தீபன்
கீரிசுட்டான், ஒலுமடு
வவுனியா
வீரச்சாவு: 20.08.1993
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் இந்திரன்
முத்துசாமி சுபிர்குமார்
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 11.11.1993
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை தென்றல் (அமிர்தமலர்)
செல்வராசா சின்னமணி
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் சந்திரிக்கா (முகுந்தா)
நாகலிங்கம் ரவிச்சந்திரிக்கா
ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.07.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் செவ்வானம்
கிருஸ்ணபிள்ளை சுமதி
மூளாய் தெற்கு, சுழிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.09.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் அன்பு (அந்தமான்)
இராமசாமி இராஜ்பவான்
அல்வாய் மேற்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.09.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை தீவண்ணன்
கீறுவிலிஸ் ரஞ்சன்
அளவக்கை, முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 03.10.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் வேணுதாஸ்
கந்தப்போடி தர்மன்
கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் ஈழமோகன் (வல்லவன்)
கிருஸ்ணபிள்ளை பகீரதன்
புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.11.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் உமாநந்தன்
அருமைத்துரை ஜோசப்லெனஸ்யூடிற்
காக்கையன்குளம்
வவுனியா
வீரச்சாவு: 29.11.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் ராணி
வேதநாயகம் மங்களேஸ்வரி
புதுக்குடியிருப்பு, தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 18.07.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் உசா
சிவஞானசுந்தரம் லேகரோஜினி
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.07.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் கோகிலா(அருந்தவராணி)
நல்லையா நந்தினி
பெரியகுளம், கனகராயன்குளம்
வவுனியா
வீரச்சாவு: 09.01.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் முரளிதரன் (பிரிஞ்சன்)
கனகசபாபதி ஜெயராஜ்
விநாயகபுரம், பாண்டியன்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.05.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை செந்தமிழன்
கமலநாதன் பிரசாத்
டொக்கையா வீதி
திருகோணமலை
வீரச்சாவு: 07.06.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை இன்னழகன்
சின்னராசா சிவசண்முகம்
9ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.06.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் புலியவன்
சுந்தரலிங்கம் மதன்
நீர்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் தமிழவன் (சொய்யா)
சிதம்பரம் செல்வகுமார்
வந்துகாமம், கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 28.01.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் தாரகை (ரோகினி)
நாகராஜா இந்துரேகா
கைதடி கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.02.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் அறிவுக்கரசன்
கந்தசாமி ரவிராஜ்
மருதங்குளம், நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 12.03.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் அங்கையன் (தமிழழகன்)
பரமலிங்கம் செந்தமிழ்ச்செல்வன்
7ம் வட்டாரம் நயினாதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.09.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் ரட்ணா
பாலசுப்பிரமணியம் உதயதாரகை
காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.01.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை தயா
மாணிக்கம் சிந்தாமணி
கிருஸ்ணபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.01.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் சோபனா
சோமஸ்காந்தன் பிரபகலா
155ம் கட்டை, பாரதிபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.05.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை கன்னியன்
கண்ணப்பன் சத்தியசீலன்
பாலச்சோலை, வந்தாறுமூலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.11.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் அன்புமதி
முருகையா மேனகா
கோண்டாவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் புனிதா
கதிரேசபிள்ளை சுகந்தினி
7ம் வட்டாரம், சம்பூர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 26.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் ரவி
சுப்பையா கஜேந்திரன்
பாரதிபுரம் கிழக்கு
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.11.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் கலைத்தேவி
காளிமுத்து பூபதியம்மா
சாந்தபுரம், திருவையாறு
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.01.2001
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

ஜெகன்
சுந்தரம் ஜெகன்
கொக்குவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.2001
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

தெய்வேந்திரன்
ஆ.தெய்வேந்திரன்
சம்மாந்துறை
அம்பாறை
வீரச்சாவு: 19.07.1986
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் உதயன்
வீரச்சாவு: 24.07.2001
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare


“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
22 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

நினைவு வணக்கம் | ஜனவரி 22

by Amizhthu 22 January 2026
written by Amizhthu

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

மேஜர் தமிழ்மாறன் (இசைக்கோன்)
தங்கவேல் சுரேஸ்குமார்
திருகோணமலை
வீரச்சாவு: 22.01.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் ஈழக்குன்றன்
இரத்தினசிங்கம் டிலோசன்
2ம் வட்டாரம், கைவேலி, புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.01.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் தமிழின்பன்
சிங்கராசா பகீரதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.01.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் தமிழ்க்குமரன்
முத்துக்குமார் சுரேஸ்குமார்
பாலிநகர், வவுனிக்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.01.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் நிலவன் (இசைக்கடல்)
மேரியோசெப் சார்ள்ஸ்யோகு
மன்னார்
வீரச்சாவு: 22.01.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் இசைப்பருதி
பேனார்ட் சாலினி
மாமூலை, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.01.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை பைந்துளசி (வல்லொளி)
செல்வராசா யாழினி
செல்வபுரம், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.01.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் காண்டீபன்
மாசிலாமணி யூட்ஜொனி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.01.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் காந்தரூபன்
சிறிகானந்தராசா ரஜீந்திரன்
அம்பாறை
வீரச்சாவு: 22.01.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்.கேணல் இசைக்குயிலன்
குருகுலசிங்கம் குணானந்தன்
திருகோணமலை
வீரச்சாவு: 22.01.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் இன்பரன்
சிவபாதம் பிரதீபன்
வன்னியசிங்கம் வீதி, ஆனந்தபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.01.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் ஈழவன்
இராமையா இரகுநாதன்
கணேசபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.01.2007
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை கரன்
இரத்தினமணி கோகுலராசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.01.2007
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கணேசமூர்த்தி
பொன்னம்பலம் கணேசமூhத்தி
பரவிப்பாஞ்சன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.01.2004
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் இன்பன்
ஞானப்பிரகாசம் அன்ரனிஞானராஜா
அலம்பில்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.01.2001
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் துமிலன்
குமாரவேல் சந்திரகுமார்
கொழும்பு
சிறிலங்கா
வீரச்சாவு: 22.01.2001
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் இளங்கதிர்
ஆறுமுகம் வாமதேவன்
நவாலி தெற்கு, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.01.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை பருதிவேலன்
கந்தையா யோகேந்திரம்
ஆலடி, உடுவில், மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.01.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் பருதி
யோசப் மறியறெஜினோல்ட வசந்தகுமார்
மணற்காடு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.01.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை கலா
செல்லத்துரை சசிகரன்
4ம் கண்டம், கற்சிலைமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.01.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை நேசன்
செல்லையா குகனேஸ்வரன்
ஆழியவளை, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.01.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை கௌசிகா
சிவஞானசிங்கம் கஜேந்தினி
உப்புவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 22.01.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை கயல்விழி (கலைவிழி)
கறுப்பையா லட்சுமி
பல்லவராயன்கட்டு, ஜெயபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.01.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் வைதேகி
ரோசரி காமலின் சாமினி
கோவில் வீதி
திருகோணமலை
வீரச்சாவு: 22.01.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் செவ்வேள்
வேலாயுதம் செல்வேந்திரன்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.01.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் வைதேகி (ரூபலட்சுமி)
வல்லிபுரம் தங்கரூபி
இடைக்காடு, அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.01.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் இதயா
கதிர்காமு சேதுமனோகரி
முள்ளியான், வெற்றிலைக்கேணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.01.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை யாழ்விழி
நடரேசரத்தினம் சிவகலா
கல்முனை, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.01.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை மாங்குயில்
முத்துலிங்கம் தமிழ்ச்செல்வி
சரவணை கிழக்கு, வேலணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.01.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் தமிழ்வாணன் (மருதவாணன்)
இராமச்சந்திரன் சிவகுமாரன்
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 22.01.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் அன்புக்கினியன்
சின்னராசா ராஜ்மனோகரன்
புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.01.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை தண்ணொளியன்
செல்வராசா திருமாறன்
வவுனிக்குளம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.01.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் தயான்
தியாகராசா கதிர்காமத்தம்பி
3ம் வட்டாரம், ஆலங்கேணி, கிண்ணியா
திருகோணமலை
வீரச்சாவு: 22.01.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை நியூட்டன்
கந்தையா பூபாலசிங்கம்
செட்டிகுளம், எருவில்
வவுனியா
வீரச்சாவு: 22.01.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை தங்கராசா
ஆறுமுகம் அருமைநாயகம்
முரசுமோட்டை, பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.01.1989
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை தவராசா
வீரச்சாவு: 22.01.1989
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare


“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
22 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
Newer Posts
Older Posts

Copyright © amizhthu.com 2026

அமிழ்து
  • முகப்பு
  • NEWS
  • நாட்காட்டி
  • தமிழீழம்
    • மாவீரர்கள்
    • நினைவு வணக்கம்
    • அகவை வாழ்த்து
    • குருதிச் சுவடுகள்
    • அடிக்கற்கள்
    • கரும்புலிகள்
    • புகழ் வணக்கம்
    • ஈழத்தின் வரலாறு
    • தமிழ் இனப்படுகொலை
  • தமிழகம்
  • புலம்பெயர் தமிழர்கள்
  • இந்தியா
  • இலங்கை
  • சர்வதேசம்
    • அமெரிக்கா
    • கனடா
    • ஆசியா
    • ஆப்பிரிக்கா
    • ஆஸ்திரேலியா
    • ஐரோப்பா
    • பிரித்தானியா
    • மத்திய கிழக்கு
  • கட்டுரைகள்
  • கவிதை
  • காணொளி செய்திகள்
  • நிகழ்வுகள்
  • மங்கையர் உலகம்
  • விளையாட்டு

Shopping Cart

Close

No products in the basket.

Close
 

Loading Comments...
 

    %d