கொழும்பு, செட்டியார் தெருவில் இன்று சனிக்கிழமை (நவம்பர் 08)விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு,
1 பவுண் தங்கம் (22 கரட்) – ரூ.290,750
1 பவுண் தங்கம் (24 கரட்) – ரூ.316,000

கொழும்பு, செட்டியார் தெருவில் இன்று சனிக்கிழமை (நவம்பர் 08)விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு,
1 பவுண் தங்கம் (22 கரட்) – ரூ.290,750
1 பவுண் தங்கம் (24 கரட்) – ரூ.316,000

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய , சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய , சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் .
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 km வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து அல்லது வடமேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
கொழும்பு தொடக்கம் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.
ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
துபாயில் ஒளிந்து இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சங்கீதா என்ற பெண் போதைப்பொருள் கடத்தல்காரரின் உதவியாளர் ஒருவர் நீர்கொழும்பில் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் ஹெராயின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சந்தேக நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

தீப்பெட்டி தொழிற்சாலையில் தீப்பெட்டிகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கண்டி தீயணைப்புத் துறையைச் சேர்ந்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க வந்து தற்போது தீயை அணைத்து வருகின்றன.
பள்ளேகலே காவல்துறையினர் தீ விபத்துக்கான காரணம் மற்றும் ஏற்பட்ட சேதம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

ஏனைய பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
புத்தளம் தொடக்கம் கொழும்பு , காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 – 35 km வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து அல்லது வடமேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி,ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 55 – 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.0 – 2.5 m உயரத்திற்கு மேலெளக்கூடும். இக் கடல் பிராந்தியத்தை அண்மித்த கரைப் பிரதேசத்திற்கு கடல் நீர் உட்புகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கற்பிட்டி உச்சமுனை களப்பு பகுதியில் இலங்கை கடற்படை செவ்வாய்க்கிழமை (04.11.2025)நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 38 கிலோகிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற இரண்டு டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டன.

‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு மற்றும் ‘போதையில்லா நாடு – ஆரோக்கியமானபிரஜைகள் வாழ்க்கை’ என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து விடுவிக்கும் தேசிய பணிக்கு பங்களிக்கும் கடற்படை, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் உள்ளூர் நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
அதன்படி, செவ்வாய்க்கிழமை (04.11.2025) உச்சமுனை களப்பு மற்றும் கற்பிட்டி கடற்கரைப் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜயவின் படகுகளால் நடத்தப்பட்ட இந்த சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, கடலோரப் பகுதியில் இரண்டு சந்தேகத்திற்கிடமான டிங்கிகள் கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, 18 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 38 கிலோகிராம் கேரள கஞ்சா தொகையுடன் இரண்டு டிங்கிகளும் கைப்பற்றப்பட்டன.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகையின் மொத்த தெரு மதிப்பு 08 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது, மேலும் கஞ்சா தொகை மற்றும் டிங்கி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு 340,525 பரீட்சாத்திகள் விண்ணப்பித்துள்ளனர். இம்முறை நாடளாவிய ரீதியில் 2362 பரீட்சை நிலையங்களும் நிறுவப்படவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள பரீட்சை திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 246,521 பரீட்சாத்திகள் பாடசாலை ஊடாகவும், 94,004 பரீட்சாத்திகள் தனிப்பட்ட ரீதியிலும் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ளனர். அதற்கமைய ஒட்டுமொத்த விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை 340,525 ஆகும்.
மேலும் நாடளாவிய ரீதியில் 2,362 பரீட்சை நிலையங்களும் நிறுவப்படவுள்ளன. உயர்தர பரீட்சைகளுடன் தொடர்புடைய சகல மேலதிக வகுப்புக்கள், செயலமர்வுகள், கருத்தரங்குகளுக்கு இன்று செவ்வாய்கிழமை நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை ஊடாக பரீட்சைக்குத் தோற்றும் விண்ணப்பதாரர்களுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன. எனினும் இதுவரையிலும் அனுமதிப்பத்திரங்கள் கிடைக்காதவர்கள் பரீட்சை திணைக்களத்தின் இணையதளத்தில் அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
சிறந்த மனநிலைமையுடன் பரீட்ரசைக்குத் தயாராகுமாறு மாணவர்களைக் கேட்டுக் கொள்கின்றோம். விடையளிப்பதற்கு வழங்கப்படும் நேரங்களில் எவ்வித மாற்றங்களும் இல்லை. எனவே அதற்கேற்ப பரீட்சைகளுக்கு தயாராகுமாறு மாணவர்களை அறிவுறுத்துகின்றோம். அதேபோன்று அமைதியாக பரீட்சைக்குத் தோற்றக் கூடிய சூழலை தமது பிள்ளைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்குமாறும் பெற்றோரிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.
புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் தொழிற்சங்கங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்க முடியாது.

பலசுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம். அரசாங்கம் என்ற அடிப்படையில் தீர்மானங்களை எடுக்க வேண்டும். புதிய மாற்றத்தை நோக்கி செல்கையில் மாறுப்பட்ட கருத்துக்கள் தோற்றம் பெறுவது ஒன்றும் ஆச்சரியமல்ல என்று கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் குளியாப்பிட்டிய கல்வி அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
புதிய தொழிற்றுறையை உருவாக்கும் வகையில் கல்வி கொள்கை மறுசீரமைக்கப்பட வேண்டும். நாட்டில் வேலையின்மை பிரச்சினைக்கு கல்வி கொள்கை ஒரு காரணியாக உள்ளது. இதற்கு தீர்வாகவே புதிய கல்வி மறுசீரமைப்பை அறிமுகப்படுத்த தீர்மானித்தோம்.
புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்களுடன் இந்த ஆண்டு முதல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க முடியாது.தீர்மானங்களை செயற்படுத்த வேண்டும்.
புதிய மாற்றத்துக்கான தீர்மானங்களை எடுக்கும்போது மாற்றுக்கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் தோற்றம் பெறுவது இயல்பானதே. பாடசாலை கற்பித்தல் நேரம் அதிகரிப்பு தொடர்பில் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு, கல்வி அமைச்சினால் சுற்றிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
புதிய கல்வி மறுசீரமைப்பு அடுத்தாண்டு முதல் அமுல்படுத்தப்படும். 1-6 தரங்களுக்குரிய புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணிகள் இந்த மாதம் இறுதி பகுதியளவில் நிறைவடையும் என்றார்.
முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் அவரது சட்டத்துறை சார் சேவைகள் மீது என்றும் எமக்கு மதிப்பும் கௌரவமும் காணப்படுகிறது. திட்டமிட்டு அவருக்கான சேவை நீடிப்பு மறுக்கப்படவில்லை. குறித்த காலப்பகுதியில் சேவை நீடிப்பிற்கான அவசியம் ஏற்பட்டிருக்காது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

தனக்கான சேவை நீடிப்பு குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 4 சந்தர்ப்பங்களில் கடிதம் அனுப்பியதாகவும், அவற்றில் ஒன்றுக்கேனும் பதில் கிடைக்கவில்லை என்றும் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கவலை வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பில் நேற்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் ஊடகவியலாளர்களால் கேள்வியெழுப்பப்பட்டது.
அவற்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மற்றும் அவரது சேவைகள் தொடர்பில் சமூகத்தில் மதிப்பும், கௌரவமும் காணப்படுகிறது. இவரைப் போன்று பல அரச அதிகாரிகள் காணப்படுகின்றனர். சில சந்தர்ப்பங்களில் நீதிமன்ற கட்டமைப்பிற்குள் சேவை நீடிப்புக்கள் வழங்கப்படும் போது பல விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும்.
சில சந்தர்ப்பங்களில் நீதிமன்ற கட்டமைப்பிற்குள் அடுத்தடுத்த நிலைகளுக்கு பதவியுயர்வு பெற வேண்டியவர்களுக்கு சிக்கல்கள் ஏற்படக் கூடும். அவ்வாறான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்படாமல் இருந்திருக்கலாம். மாறாக திட்டமிட்டு அவருக்கான சேவை நீடிப்பு வழங்கப்படாமல் இருக்கவில்லை. இது வழமையான நடைமுறையாகும்.
சில துறைகளில் சேவை நீடிப்புக்கள் வழங்கப்பட்டிருக்குமாயின், அங்கு பதவி வெற்றிடங்களுக்கான நியமனங்களுக்கு பொறுத்தமானவர்கள் இல்லாமல் இருந்திருக்கலாம். எனவே தான் அங்கு ஓய்வு பெறவிருந்த அதிகாரிகளுக்கு பதவி நீடிப்பு வழங்கப்பட்டிருக்கும். எனவே முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனது சட்டத்துறைசார் சேவை மீது என்றும் எமக்கு மதிப்பும் கௌரவமும் காணப்படுகிறது என்றார்.
நடப்பாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,22000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில், வாகன இறக்குமதி ஊடாக மாத்திரம் 587 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்கு பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவுக்கு சுங்கத் திணைக்களத்தின் அதிகாரிகள் அண்மையில் முன்னிலையாகியிருந்தனர்.
2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டு ஒவ்வொரு மாதமும் சுங்கத் திணைக்களத்தின் வருமானம் ஒப்பீட்டளவில் உயர்வடைந்துள்ளதாக அதிகாரிகள் குழுவின் முன்னிலையில் தெரிவித்தனர்.
2025.10.14 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வாகன இறக்குமதி ஊடாக மாத்திரம் 587 பில்லியன் ரூபாய் வருமானம் திரட்டப்பட்டுள்ளதுடன், அது சுங்கத்தின் மொத்த தேறிய வருமானத்தின் 37 சதவீதமாக பதிவாகியுள்ளது.
நடப்பாண்டின் முதல் பத்து மாதகாலப்பகுதியில் 55,447 மோட்டார் கார்கள் இறக்குமதி செய்யப்பட்டு 474.26 பில்லியன் ரூபாய் சுங்க வரி வருமானம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல் 7331 பண்ட விநியோக வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டு 48.67 பில்லியன் ரூபாய், 142,524 மோட்டார் சைக்கிள்கள் இறக்குமதி செய்யப்பட்டு 30.37 பில்லியன் ரூபாய், 15,035 முச்சக்கர வண்டிகள் இறக்குமதி செய்யப்பட்டு 15.10 பில்லியன் ரூபாய்,1676 பேருந்துகள் மற்றும் வேன்கள் இறக்குமதி செய்யப்பட்டு 12.66 பில்லியன் ரூபாய் சுங்க வரி வருமானம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அரசுடமையாக்கப்பட்ட பண்டங்கள் மற்றும் உபகரணங்களை ஏலத்துக்கு விடுவதற்கு டிஜிட்டல் முறைமையை அறிமுகப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவில் குறிப்பிட்டனர்.
இலங்கை சுங்கத் திணைக்களம் 2025 செப்டம்பர் மாதமளவில் 1485 பில்லியன் ரூபாய் வருமானத்தை இலக்கிட்டிருந்த நிலையில் அக்காலப்பகுதியில் 1737 பில்லியன் ரூபாய் வருமானத்தை பெற்றுக்கொண்டுள்ளது எனவும் அதிகாரிகள் குழுவில் சுட்டிக்காட்டினர்.
களுத்துறை தெற்கு, கல்லஸ்சேன, குணதிலக்கவத்த பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் களுத்துறை தெற்கு, வெனிவெல்கெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் ஆவார்.
பாதுகாப்பற்ற கிணற்றுக்கு அருகில் உள்ள வீட்டின் உரிமையாளர், யாரோ ஒருவர் கத்தும் சத்தத்தை கேட்டு வெளியே சென்று பார்த்துள்ளார். பின்னர் குறித்த வீட்டு உரிமையாளர், கிணற்றில் இளைஞன் ஒருவன் விழுந்திருப்பதை கண்டு உடனடியாக பிரதேசவாசிகளை உதவிக்கு அழைத்துள்ளார்.
பிரதேசவாசிகள் மற்றும் தீயணைப்பு படையினரின் நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் இளைஞன் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டு களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் மூவரும் 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணை பிரிவினர், கொழும்பு கோட்டை நீதவான் நெத்திகுமாரவிடம் அறிவித்துள்ளனர்.

நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இலங்கையர்கள் மூவர், படகு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ள நிலையில் அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு ஒக்டோபர் 29 ஆம் திகதி நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவருக்கும் எதிராக நீதிமன்றில் பல வழக்குகள் தொடரப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் வைத்து குண்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவத்துக்கும் இவர்கள் மூவருக்கும் தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ஜீவராஜா சுஜீபன், இலங்கோ இசைவித்தன் மற்றும் யோகராஜா ஆகிய மூவரே இவ்வாறு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணை பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.