இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் மூவரும் 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணை பிரிவினர், கொழும்பு கோட்டை நீதவான் நெத்திகுமாரவிடம் அறிவித்துள்ளனர்.

நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இலங்கையர்கள் மூவர், படகு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ள நிலையில் அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு ஒக்டோபர் 29 ஆம் திகதி நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவருக்கும் எதிராக நீதிமன்றில் பல வழக்குகள் தொடரப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் வைத்து குண்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவத்துக்கும் இவர்கள் மூவருக்கும் தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
- சீமான் – ஸ்டாலின் சந்திப்பு ! தற்செயலா ? அரசியலா ? அவதூறுகளா ?
- குழந்தைகள் சமூக ஊடகங்களுக்கு அடிமையாவதைத் தடுக்க ஆக்கபூர்வமான பரிந்துரைகளை வழங்குமாறு கேரள அரசு பொதுமக்களிடம் கேட்டுள்ளது.
- விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை – மேதகு
- கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2026!
- ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ ஆபே கொலை வழக்கில் குற்றம் ஒப்புக்கொண்ட நபருக்கு இன்று தண்டனை
- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அகவை 50 (05.05.1976 – 05.05.2026)
ஜீவராஜா சுஜீபன், இலங்கோ இசைவித்தன் மற்றும் யோகராஜா ஆகிய மூவரே இவ்வாறு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணை பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.