2024 /2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை, செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக செலுத்துமாறு அனைத்து வரி செலுத்துவோருக்கும், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த உத்தரவு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், கூட்டாண்மைகள் மற்றும் பிற பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கும் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
செலுத்த வேண்டிய வரித் தொகையை இலங்கை வங்கியின் எந்தவொரு கிளையிலும் ஒன்-லைன் வரி செலுத்தும் முறையினூடாக செலுத்தலாம் என்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வரி செலுத்த தாமதித்தால் அல்லது தவறவிட்டால் வட்டி மற்றும் அபராதங்கள் விதிக்கப்படும் எனவும், நேரடி கட்டணச் சீட்டுகளுக்காக காத்திருக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- சாவகச்சேரிப் பகுதியில் புகையிரதத்தால் இறங்க முற்பட்ட குடும்பப் பெண் தவறி விழுந்து வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.
- தங்க முலாம் பூசப்பட்ட புத்தர் சிலைகள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது
- தமிழகத்தை இந்தியாவின் முன்னணி மாநிலமாக மாற்ற உறுதியேற்போம் – தமிழக முதல்வர்
- ஐரோப்பாவின் உடந்தைத்தனம் அம்பலமானதா? உக்ரைன், ஐரோப்பா மற்றும் தலைப்புகளுக்குப் பின்னால் மறைந்துள்ள கட்டமைப்புப் போர் (Systems War)
- பொது சேவையில் உள்ளவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதன் மூலம், துறைசார் நிபுணர்கள் அர்ப்பணிப்புடன் சேவையில் ஈடுபட வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது – நலிந்த ஜயதிஸ்ஸ
- நேரலை LIVE🔴திலீபன் நினைவேந்தல் மற்றும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் !
வரி செலுத்தாமை அல்லது தாமதமாக பணம் செலுத்துவதற்கு விதிக்கப்படும் அபராதங்கள் மற்றும் வட்டி ஒருபோதும் தள்ளுபடி செய்யப்படாது அல்லது குறைக்கப்படாது என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அனைத்து வரி செலுத்துவோருக்கும் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.