இடம் : திருக்காட்டுப்பள்ளி (குடமுருட்டி பாலம்)
நாள் : 03-10-2025 (மாலை 4 மணியளவில்)
அன்பின் உறவுகள் அனைவருக்கும் வணக்கம். தியாகத்தின் பேரடையாளமாக விளங்கும் எமது விடுதலை களத்தின் நெருப்பு, தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு முன்பே நடத்த திட்டமிட்டு இருந்தோம். பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தள்ளிப்போன, வருகின்ற வெள்ளிக்கிழமை மாலை மேற்கண்ட இடத்தில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஹிமாயின் கபீர், மாநில பொருளாளர் மருத்துவர் பாரதிசெல்வன், அண்ணன் மணிசெந்தில், மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார், மகளீர் பாசறை பொறுப்பாளர்கள், எழிலரசி மற்றும் தேன்மொழி ஆகியோர் பேச இருக்கிறார்கள்.
இந்நிகழ்வில் நினைவேந்தல் மற்றும் கொள்கை விளக்க உரையை நிகழ்த்த சாட்டை துரைமுருகன் அவர்கள் வருகை தந்து பேச இருக்கிறார்.
- மகாராஷ்டிராவில் கூட்டணி உறவுகள் பதட்டம்: அஜித் பவார் புதிய குற்றச்சாட்டுகள் முன்வைத்து சூடு கூட்டுகிறார்
- யாழ்ப்பாணத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த பெண்ணும், ஆணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- ரஷ்யா–உக்ரைன் போர்: ஆபத்தான புதிய கட்டத்தை நோக்கி நகரும் ஐரோப்பா
- “13 ஆவது திருத்தம் தொடர்பில் கூட்டங்களை நடாத்துவதை தாமாகவே ஒப்பந்தத்தில் இருந்து விலகும் செயலாகவே நாம் பார்க்கிறோம்” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
- மலையகத் தமிழர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு பிரிட்டன் தார்மீக மற்றும் சட்டப்பூர்வ கடமையைக் கொண்டுள்ளது என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
- பெங்களூருவில் பெரும் போதைப்பொருள் வலை உடைப்பு; ரூ.4 கோடி மதிப்புள்ள நர்கோட்டிக்ஸ் பறிமுதல், 10 பேர் கைது
இந்நிகழ்வை திருவையாறு சட்டமன்றத் தொகுதியை சேர்ந்த அனைத்துநிலை பொறுப்பாளர்களும் விரிவான முறையில் ஒருங்கிணைத்து நடத்த இருக்கிறார்கள். இந்நிகழ்வில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு இந்த கூட்டத்தை, அதன் நோக்கத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டுகிறோம்.
திருவையாறு சட்டமன்றத் தொகுதி
நாம் தமிழர் கட்சி